வேதக் கதைகள்
தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதங்கள்—பவுல் தனது இளம் நண்பருக்கு அறிவுரை கூறுகிறான்


1 மற்றும் 2 தீமோத்தேயு

தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதங்கள்

பவுல் தனது இளம் நண்பருக்கு அறிவுரை கூறுகிறான்

தீமோத்தேயு அவனுடைய அம்மாவாலும் பாட்டியாலும் கற்பிக்கப்படுதல்.

தீமோத்தேயு இயேசு கிறிஸ்துவில் பலமான விசுவாசம் கொண்ட ஒரு இளைஞன். அவருடைய அம்மா ஐனிக்கேயாளும், பாட்டி லோவிசாளும் மிகுந்த விசுவாசமுள்ள பெண்கள். தீமோத்தேயு குழந்தையாக இருந்தபோதே அவர்கள் வேதங்களிலிருந்து அவனுக்குக் கற்பித்தார்கள்.

2 தீமோத்தேயு 1:5; 3:15

பவுலும் தீமோத்தேயுவும் ஒன்றாக நடந்து செல்கிறார்கள். மழையிலிருந்து தங்களைப் பாதுகாக்க பவுல் ஒரு துணியைப் பிடித்திருக்கிறான்.

தீமோத்தேயுவும் பவுலும் நல்ல நண்பர்கள். அவர்கள் ஒன்றாக வேலை செய்து பயணம் செய்து, கர்த்தருக்கு சேவை செய்து, அவருடைய சுவிசேஷத்தைப் பகிர்ந்தனர். பவுல் தீமோத்தேயுவை ஒரு மகனைப் போல நேசித்தான்.

பிலிப்பியர் 2:19–22; 1 தீமோத்தேயு 1:2

பவுல் தீமோத்தேயுவை எபேசுக்குச் சென்று அங்கு சபையை வழிநடத்தும்படி அறிவுறுத்துகிறான்.

எபேசுவில் உள்ள சபையை வழிநடத்தும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கேட்டான். பவுல் வேறொரு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவன் வெளியில் சென்றிருந்தபோது, ​​தீமோத்தேயுவுக்கு உதவ ஒரு கடிதம் எழுதினான்.

1 தீமோத்தேயு 1:1–3

மக்கள் சுவிசேஷத்தை நிராகரிப்பதை தீமோத்தேயு கவனிக்கிறான்.

பின்னர், பவுல் ரோமாபுரியில் சிறையில் இருந்தபோது, ​​தீமோத்தேயுவுக்கு இன்னொரு கடிதம் எழுதினான். கடினமான காலங்கள் வரும் என்று தீமோத்தேயுவை எச்சரித்தான். சிலர் சத்தியத்திலிருந்து விலகி, தேவனை விட உலகக் காரியங்களை அதிகமாக நேசிப்பார்கள். அவர்கள் உண்மையல்லாத விஷயங்களைக் கற்பிப்பார்கள்.

2 தீமோத்தேயு 3:1–7; 4:3–4

தீமோத்தேயு ஒரு பரிசுத்தவான்கள் குழுவிற்கு சுவிசேஷத்தைப் பற்றி போதிக்கிறான்.

பவுல் தீமோத்தேயுவிடம் பயப்பட வேண்டாம் என்று கூறினான். அவன் சொன்னான், “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்புமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” கற்றுக்கொண்ட விஷயங்களைத் தொடர்ந்து செய்யும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கூறினான். வேதங்கள் அவனை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லும்.

2 தீமோத்தேயு 1:7–9; 3:14–17

ரோமாபுரியில் சிறையில் பவுல்.

பவுல் தனது வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும் என்பதை அறிந்திருந்தான். ஆனால் அவன் மரிக்க பயப்படவில்லை. வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்தபோதிலும், தன்னுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்திருந்ததாக பவுல் தீமோத்தேயுவிடம் கூறினான். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் தனக்கு நித்திய ஜீவனைத் தருவார்கள் என்று அவன் நம்பினான்.

2 தீமோத்தேயு 4:6–8