வேதக் கதைகள்
சகேயு என்ற வரி வசூலிப்பவன்—இயேசுவைப் பார்ப்பதற்காக ஒரு மரத்தில் ஏறுதல்.


லூக்கா 19:1–10

சகேயு என்ற வரி வசூலிப்பவன்

இயேசுவைப் பார்ப்பதற்காக ஒரு மரத்தில் ஏறுதல்

சகேயு வரி வசூலித்தல்

இயேசு எரிகோ பட்டணத்திற்குச் சென்றார். அங்கே சகேயு என்ற பெயருள்ள ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். சகேயு ஒரு செல்வந்தனான வரி வசூலிப்பவன். பெரும்பாலான ஜனங்களுக்கு வரி வசூலிப்பவர்களைப் பிடிக்காது. வரி வசூலிப்பவர்கள் ஜனங்களிடமிருந்து அதிகப்படியான பணத்தைப் பறிப்பதாக அவர்கள் நினைத்தார்கள்.

லூக்கா 19:1–2

ஜனங்களின் கூட்டத்திற்கு நடுவே இயேசுவைப் பார்ப்பதற்காக சகேயு முயற்சி செய்தல்.

இயேசு பட்டணத்திற்குள் வந்திருப்பதை சகேயு கேள்விப்பட்டான். அவரைப் பற்றி மேலும் அறிய அவன் விரும்பினான். அவன் இயேசுவைப் பார்க்க முயன்றான், ஆனால் அவரைச் சுற்றி ஏராளமான ஜனங்கள் இருந்ததாலும், சகேயு மிகவும் குள்ளமாக இருந்ததாலும் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் எப்படி இயேசுவைப் பார்க்கப் போகிறான்?

லூக்கா 19:3–4

இயேசுவைப் பார்ப்பதற்காக சகேயு ஒரு மரத்தில் ஏறுதல்.

சகேயு முன்னோக்கி ஓடி, இயேசுவைப் பார்க்கும்படி ஒரு மரத்தில் ஏறினான். இயேசு அவ்வழியே சென்றபோது, அண்ணாந்து பார்த்து மரத்திலிருந்த சகேயுவைக் கண்டார். இயேசு அவன் பெயரைக் கூப்பிட்டு, “நீ இறங்கி வா” என்றார். இயேசு அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனைச் சந்திக்க விரும்பினார். சகேயு அவசரமாக மரத்திலிருந்து கீழே இறங்கினான். இயேசு தன் வீட்டிற்கு வருவதைக் கண்டு அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.

லூக்கா 19:4–6

இயேசு சகேயுவின் வீட்டில் அவனைச் சந்தித்தல்.

இயேசு ஏன் சகேயுவின் வீட்டிற்குச் செல்கிறார் என்று எரிகோ ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். சகேயு ஒரு வரி வசூலிப்பவன் என்பதால், அவன் ஒரு பாவி என்று அவர்கள் நினைத்தார்கள்.

லூக்கா 19:7

இயேசு சகேயுவிடமும் அவனுடைய குடும்பத்தினரிடமும் பேசுதல்.

சகேயு இயேசுவிடம், "என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்" என்று கூறினான். யாரிடமாவது தான் அதிகப்படியான பணத்தைப் பறித்திருந்தால், அதைவிட அதிகமாகத் திருப்பித் தருவதாகவும் அவன் கூறினான். இயேசு சகேயுவிடம், "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது" என்றார். இழந்து போனவர்களைத் தேடவும் இரட்சிக்கவுமே தாம் வந்ததாக இயேசு கூறினார்.

லூக்கா 19:6, 8–10