யோவான் 8:1–11
பாவம் செய்த ஸ்திரீயை மக்கள் தண்டிக்க விரும்புதல்
“போ, இனிப் பாவஞ்செய்யாதே”
ஒரு நாள் அதிகாலையில், இயேசு கிறிஸ்து எருசலேமில் உள்ள ஆலயத்திற்குச் சென்றார். அவர் போதிப்பதைக் கேட்க பலர் அவரைச் சுற்றி கூடினர்.
யோவான் 8:1–2
இயேசுபோதித்துக்கொண்டிருந்தபோது சில யூதத் தலைவர்கள் ஒரு ஸ்திரீயை இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவள் தேவனின் கட்டளைகளில் ஒன்றை மீறியதாகப் பிடிக்கப்பட்டாள். சட்டத்தின்படி, அந்த ஸ்திரீயை மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என இருந்தது.
யோவான் 8:3–5
அவளுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று இயேசுவிடம் மனுஷர் கேட்டனர். அவர்கள் இயேசுவை தந்திரமாக சோதிக்க முயன்றனர். அவர் அந்த ஸ்திரீக்கு தீங்கு வரவிடமாட்டார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் இயேசு அந்த ஸ்திரீயை தண்டிக்கக் கூடாது என்றால், அவர் சட்டத்தின்படி நடக்கவில்லை என்று அவர்கள் சொல்லலாம்.
யோவான் 8:6
ஆனால் இயேசு அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. அவர் தரையில் குனிந்து மண்ணில் எழுதினார். அந்த மனுஷர்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் அவரிடம் கேட்டார்கள்.
யோவான் 8:6–7
இறுதியில், இயேசு எழுந்து நின்று, அம்மனுஷரைச் சுற்றிப் பார்த்தார். அவர்களில் யாரேனும் பாவம் செய்திருக்காவிட்டால், அவன் அவள் மீது முதலில் கல்லெறியலாம் என்று அவர் கூறினார்.
யோவான் 8:7
பின்னர் இயேசு மீண்டும் குனிந்து மண்ணில் எழுதுவதைத் தொடர்ந்தார். எல்லா மனுஷரும் தங்களிடத்தில் பாவங்கள் இருப்பதை அறிந்திருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
யோவான் 8:8–9
இயேசு சுற்றிப் பார்த்தார், அங்கே அந்த ஸ்திரீ மட்டும் நின்று கொண்டிருந்ததைக் கண்டார். அவளைத் தண்டிக்க விரும்பியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று அவர் அவளிடம் கேட்டார். அவள் இயேசுவிடம், அனைவரும் சென்றுவிட்டார்கள் என்று கூறினாள். இயேசு அந்த ஸ்திரீயிடம், “போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்றார். அன்றிலிருந்து, அந்த ஸ்திரீ இயேசுவின் மீது விசுவாசம் கொண்டாள்.
யோவான் 8:9–11; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, யோவான் 8:11 யோவான் 8:11, அடிக்குறிப்பு c.