மாற்கு 10:13–16
இயேசு சிறு பிள்ளைகளை ஆசீர்வதித்தல்
“தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது”
இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை அவரிடம் அழைத்து வந்தனர். தங்கள் பிள்ளைகளை, இயேசு ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவருடைய சீஷர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர்.
மத்தேயு 19:13; மாற்கு 10:13
இயேசு அப்போஸ்தலர்களிடம், சிறு பிள்ளைகள் அவரிடத்தில் வர விடுமாறு சொன்னார். சிறு பிள்ளைகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார். யாராவது மீண்டும் தேவனுடன் வாழ விரும்பினால், அவர்கள் ஒரு சிறு பிள்ளையைப் போல மாற வேண்டும் என்று அவர் விளக்கமளித்தார்.
மத்தேயு 19:14; மாற்கு 10:14–15
பின்னர் இயேசு, சிறு பிள்ளைகளைத் தம் கைகளில் ஏந்தி ஆசீர்வதித்தார்.
மத்தேயு 19:15; மாற்கு 10:16