யோவான் 11:1–46
இயேசு லாசருவை மீண்டும் உயிர்ப்பித்தல்
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்”
மரியாள், மார்த்தாள், லாசரு ஆகியோர் பெத்தானியா என்ற ஊரில் வசித்து வந்தனர். அவர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள், அவரும் அவர்களை நேசித்தார். மரியாளும் மார்த்தாளும், லாசருவின் சகோதரிகள்.
யோவான் 11:1, 5
லாசரு மிகவும் நோய்வாய்ப்பட்டான். இயேசு வேறொரு நகரத்தில் இருந்தார். அவரது நண்பனாகிய லாசருவை, குணமாக்கும்படி வர இயேசுவை அழைத்து வரும்படி மரியாளும் மார்த்தாளும் சொல்லி அனுப்பினர்.
யோவான் 11:1–3
இயேசு இரண்டு நாட்கள் காத்திருந்தார். பின்னர் அவர் தம்முடைய சீஷர்களிடம், அவர்கள் பெத்தானியாவுக்குப் போவதாகச் சொன்னார். பெத்தானியாவுக்கு அருகில் இருந்த சிலர் இயேசுவைத் துன்புறுத்த விரும்பியதால் சீஷர்கள் கவலைப்பட்டனர். ஆனால் இயேசு லாசருவுக்கு உதவ விரும்பினார். லாசரு ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவரை மீண்டும் உயிர்ப்பிக்கப் போவதாகவும் இயேசு கூறினார்.
யோவான் 11:6–16
மார்த்தாள் நகரத்திற்கு வெளியே இயேசுவைச் சந்தித்தாள். இயேசு முன்னதாகவே வந்திருந்தால், லாசரு இறந்திருக்க மாட்டான் என்று அவள் சொன்னாள். லாசரு மீண்டும் உயிரோடு எழுவார் என்று இயேசு வாக்களித்தார்.
யோவான் 11:17–24
இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்”, என்றார். அவர் மார்த்தாளிடம், அவள் அவரை விசுவாசிக்கிறாளா என்று கேட்டார். “நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்”, என்றாள்.
யோவான் 11:25–27
மார்த்தாள் வீட்டிற்குத் திரும்பிச் சென்று மரியாளிடம் இயேசு வந்துவிட்டார் என்று சொன்னாள். மரியாள் வந்து இயேசுவின் பாதத்தில் விழுந்து, தன் சகோதரனை நினைத்து அழுதாள். இயேசு கண்ணீர் விட்டார். அவர் லாசரு, மரியாள், மார்த்தாள் ஆகியோரை நேசித்தார்.
யோவான் 11:28–36
இயேசு, மார்த்தாள், மரியாள் மற்றும் பலர், லாசரு அடக்கம் செய்யப்பட்ட குகைக்குச் சென்றனர். ஒரு பெரிய கல் அந்த வாசலை மூடியிருந்தது. கல்லை அகற்றுமாறு இயேசு சொன்னார்.
யோவான் 11:38–39
ஆனால் மார்த்தாளோ இயேசுவிடம் லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதாகச் சொன்னாள். இயேசு மார்த்தாளுக்குத் தம்முடைய வாக்குத்தத்தத்தை நினைவூட்டினார். அவளை விசுவாசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
யோவான் 11:39–40
பின்னர் இயேசு தம்முடைய பிதாவிடம் ஜெபித்தார். எப்போதும் தனக்கு செவிகொடுப்பதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். தேவன் தன்னை இரட்சகராக அனுப்பினார் என்று மக்கள் விசுவாசிக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். பின்னர் இயேசு, “லாசருவே, வெளியே வா” என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார்.
யோவான் 11:41–43
லாசரு குகையை விட்டு வெளியே வந்தான். அவன் இன்னும் புதைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் விரிப்புகளால் சுற்றப்பட்டிருந்தான். லாசருவை கட்டியிருந்த கட்டுகளை அவிழ்க்கச் செய்யுமாறு இயேசு மக்களிடம் கூறினார். அந்நாளில் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் பலர், இயேசு உண்மையிலேயே இரட்சகர், தேவனுடைய குமாரன் என்று அப்போதே விசுவாசித்தனர்.
யோவான் 11:44–45