வேதக் கதைகள்
ஒரு விதவையும் இரண்டு சிறிய காசுகளும்—இயேசு தியாகத்தைப் பற்றிப் போதித்தல்


மாற்கு 12:41–44

ஒரு விதவையும் இரண்டு சிறிய காசுகளும்

இயேசு தியாகத்தைப் பற்றிப் போதித்தல்

ஆலயத்தில் மக்கள் காணிக்கைப்பெட்டியில் பணம் போடுகிறதை இயேசு பார்த்தல்.

இயேசு எருசலேமில் உள்ள ஆலயத்திற்குச் சென்றார். அவர் அங்கு இருந்தபோது, ஆலய வேலைக்கு மக்கள் பணம் கொடுப்பதைப் பார்த்தார். பல பணக்காரர்கள் நிறைய பணம் கொடுத்தார்கள்.

மாற்கு 12:41

ஏழை ஸ்திரீயானவளின் சிறிய நாணயங்கள்.

அப்பொழுது, ஒரு ஏழை விதவை மைட் என அழைக்கப்படும் இரண்டு காசுகளை அளித்தாள். அது அதிகம் இல்லையென்றாலும், அவளிடம் உள்ள அனைத்து பணமும் அது தான்.

மாற்கு 12:42, 44

அந்த ஸ்திரீ இரண்டு காசுகளை காணிக்கையாக கொடுத்தல்.

இயேசு அந்த விதவை செயலைப் பார்த்து, தன் சீஷர்களை அழைத்து காணச் செய்தார்.

மாற்கு 12:43

இயேசு அந்த ஸ்திரீயின் தியாகத்தைப் பற்றிப் போதித்தல்.

அந்த விதவை வேறு யாரையும் விட அதிகமாகக் கொடுத்ததாக இயேசு சொன்னார். பணக்காரர்கள் நிறைய பணம் கொடுத்திருந்தார்கள், ஆனால் அது அவர்களிடம் இருந்ததில் ஒரு சிறிய பகுதியே. அந்த விதவை கொஞ்சம் பணத்தையே கொடுத்தாள், ஆனால் தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்தாள்.

மாற்கு 12:43–44