மத்தேயு 12:1–12; லூக்கா 13:10-17
இயேசு ஓய்வுநாளில் ஒரு பெண்ணைக் குணப்படுத்துதல்
அவருடைய பரிசுத்த நாளில் நன்மை செய்தல்
ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு கோதுமை வயலின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பசியாக இருந்ததால், அவர்கள் சில கோதுமைமணிகளைப் பறித்துத் தின்றார்கள். பரிசேயர்கள் என்று அழைக்கப்பட்ட சில யூதத் தலைவர்கள் அவர்களைப் பார்த்தார்கள். பரிசேயர்கள் ஓய்வுநாளைப் பற்றிப் பல விதிமுறைகளை அமைத்திருந்தார்கள். கோதுமைமணியை பறிப்பது அவர்களின் விதிகளுக்கு எதிரானது.
மத்தேயு 12:1-2
பரிசேயர்கள் இயேசுவிடம், அவருடைய சீஷர்கள் ஏன் ஓய்வுநாளை மதிக்கவில்லை என்று கேட்டார்கள். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று இயேசு பதிலளித்தார். தேவன் நமக்கு ஓய்வு நாளைக் கொடுத்தது நம்மை ஆசீர்வதிக்கவே, நம் வாழ்க்கையை கடினமாக்க அல்ல.
மத்தேயு 12:2-8; மாற்கு 2:27
பின்னர், ஓய்வுநாளில் இயேசு ஒரு ஜெப ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். இயேசு அங்கே ஒரு பெண்ணைக் கவனித்தார். அவளால் நேராக நிற்க முடியவில்லை. அவளுக்கு இந்தப் பிரச்சனை 18 வருடங்களாக இருந்தது.
லூக்கா 13:10-12
இயேசு அந்தப் பெண்ணைத் தம்மிடம் வரும்படி கேட்டுக்கொண்டார் அவளை ஆசீர்வதிக்க அவர் தன் கைகளை அவள் மீது வைத்தார்.
லூக்கா 13:12-13
உடனே, அந்தப் பெண் நேராக நின்றாள். இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்தியதால் ஜெப ஆலயத் தலைவர் கோபமடைந்தார்.
லூக்கா 13:13-14
இந்தப் பெண்ணுக்கு உதவுவதுதான் சரியான செயல் என்று இயேசு சொன்னார். ஓய்வுநாளில் நன்மை செய்வது சரிதான். தலைவர் வெட்கப்பட்டார், ஜெப ஆலயத்தில் இருந்தவர்கள் அந்தப் பெண் குணமடைந்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
லூக்கா 13:15–17; லூக்கா 6:9 ஐயும் பார்க்கவும்.