யோவான் 4
இயேசு, ஒரு ஸ்திரீ, ஒரு கிணறு
ஜீவத்தண்ணீரைப் பற்றி கற்பித்தல்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயாவுக்குச் செல்லும் வழியில் சமாரியா வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தண்ணீர் பெற ஒரு கிணற்றின் அருகே நின்றனர். இயேசு அங்கே ஓய்வெடுக்கும்போது, அவருடைய சீஷர்கள் உணவு வாங்கச் சென்றார்கள்.
யோவான் 4:3-8
சமாரியாவைச் சேர்ந்த ஒரு ஸ்திரீ தன் குடத்தில் தண்ணீர் நிரப்ப கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம் குடிக்கக் கேட்டார். ஸ்திரீயானவள் ஆச்சரியப்பட்டாள். இயேசு ஒரு யூதர்; மேலும் பெரும்பாலான யூதர்கள் சமாரியருடன் பேசுவதில்லை.
யோவான் 4:7-9
இயேசு அவளிடம் கூறியதென்னவெனில், இந்த கிணற்றின் தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு மீண்டும் தாகமுண்டாகும். ஆனால் அவர் அவளுக்கு நித்திய ஜீவனின் “ஜீவத் தண்ணீரை” கொடுக்க முடியும், அவளுக்கு ஒருபோதும் தாகமுண்டாகாது. அந்த ஸ்திரீ இந்த “ஜீவத் தண்ணீரில்” கொஞ்சம் வேண்டும் என்று சொன்னாள்.
யோவான் 4:10-14
இயேசு அவளின் புருஷனை அழைத்து வரச்சொன்னார். “எனக்குப் புருஷன் இல்லை,” என்று அவள் சொன்னாள். அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்ததாகவும், அவள் உடன் வாழ்கிறவன் அவளுடைய புருஷன் இல்லை என்றும் இயேசு கூறினார்.
யோவான் 4:16-18
இயேசு தன்னைப் பற்றிய இந்த விஷயங்களை அறிந்திருப்பதைக் கண்டு அந்த ஸ்திரீ ஆச்சரியப்பட்டாள். ஒரு இரட்சகர் விரைவில் வருவார் என்று தனக்குத் தெரியும் என்று அவள் சொன்னாள். இயேசு அவளிடம், அவரே இரட்சகர் என்று கூறினார்.
யோவான் 4:19, 25-26
அந்த ஸ்திரீ தன் குடத்தை அங்கேயே வைத்துவிட்டு, அவள் ஊருக்குள் ஓடிச் சென்றாள். அவள் இரட்சகரைக் கண்டதாக பலரிடம் சொன்னாள். அவர் போதனையைக் கேட்க அவள் அவர்களை அழைத்தாள். அந்த ஸ்திரீயின் மூலம், பல சமாரியர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தனர்.
யோவான் 4:28–29, 39–42