மத்தேயு 5–7
இயேசு மலைப்பிரசங்கத்தை போதித்தல்
பரலோக பிதாவைப் போலாக நமக்கு உதவுதல்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயா கடலுக்கு அருகிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் நம் பரலோக பிதாவைப் போல எவ்வாறு மாறலாம் என்பதையும் இயேசு அங்கே அவர்களுக்குப் போதித்தார்.
மத்தேயு 5:1-2
ஜனங்கள் மனத்தாழ்மையுடனும், இருதயத்தில் சுத்தமுடனும், சரியானதைச் செய்ய முயற்சிக்கும்போது அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று இயேசு போதித்தார். மற்றவர்களை மன்னிப்பவர்கள், அவர்களும் மன்னிக்கப்படுவார்கள். சமாதானம் பண்ணுபவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.
மத்தேயு 5:3-9
ஒரு மலையின் மேல் உள்ள ஒரு பட்டணத்தை அனைவரும் பார்க்க முடிவது போல—இயேசு தம்முடைய சீஷர்கள் உலகிற்கு ஒரு வெளிச்சமாயிருக்கிறார்கள் என்று சொன்னார். நாம் நமது வெளிச்சத்தை மறைக்கக் கூடாது.
மத்தேயு 5:14
நாம் இயேசுவைப் பின்பற்றும்போது, அறையில் உள்ள அனைவருக்கும் நாம் வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியைப் போல இருக்கிறோம். நமது நற்செயல்கள், ஜனங்கள் பரலோக பிதாவை விசுவாசிக்க உதவும்.
மத்தேயு 5:15-16
நாம் எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றும் நம்மை நேசிக்காதவர்களையும் நேசிக்க வேண்டும் என்றும் இயேசு போதித்தார். நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நாம் நமது பரலோக பிதாவைப் போல இருக்க முயற்சிக்க வேண்டும் என்று இயேசு போதித்தார். நாம் மக்களுக்கு உதவும்போது, நாம் என்ன செய்தோம் என்பதை எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை என்று அவர் போதித்தார். நாம் செய்யும் நல்ல காரியங்களை தேவன் பார்க்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
மத்தேயு 5:38-48; மத்தேயு 6:1-4
நாம் ஜெபிக்கும்போது, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது. உண்மையில் அர்த்தம் இல்லையென்றால், நாம் ஒரே வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லக்கூடாது. நாம் நம் இருதயங்களிலிருந்து பேச வேண்டும். பரலோக பிதா நம் ஜெபங்களை கேட்கிறார், மேலும் நமக்கென்ன தேவை என்பதை அறிந்திருக்கிறார். யாருமே கேட்க முடியாவிட்டாலும் அவர் கேட்பார்.
மத்தேயு 6:5-8
நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைக்கக்கூடாது என்று இயேசு போதித்தார். நம் அனைவருக்கும் சவால்கள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்களை தீர்ப்பிடுவதற்குப் பதிலாக, நாம் எவ்வாறு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே மற்றவர்களையும் நடத்த வேண்டும்.
மத்தேயு 7:1–5, 12
பின்னர் இயேசு மணலில் தன் வீட்டைக் கட்டிய ஒரு புத்தியில்லாத மனுஷனைப் பற்றியும், கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டிய ஒரு புத்தியுள்ள மனுஷனைப் பற்றியும் ஒரு கதையைச் சொன்னார். ஒரு பெருமழை வந்தபோது, மணலில் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்தது, கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீடு அப்படியே நின்றது. இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவற்றைப் பின்பற்றினால், நாம் புத்தியுள்ள மனுஷனைப் போல இருப்போம் என்று இயேசு கூறினார்.
மத்தேயு 7:24-28