வேதக் கதைகள்
இயேசு தம் ஊழியத்தைப் பற்றி சாட்சியமளித்தல்—நாசரேத்தில் நிராகரிக்கப்படுதல்


லூக்கா 4:16-31

இயேசு தம் ஊழியத்தைப் பற்றி சாட்சியமளித்தல்

நாசரேத்தில் நிராகரிக்கப்படுதல்

இயேசு ஜெப ஆலயத்திற்குச் செல்லுதல்

இயேசு அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் வாழ்ந்த நாசரேத்துக்குப் போனார். அது அவர் வளர்ந்த இடம். ஓய்வுநாளில், அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்றார், அங்கு ஜனங்கள் வேதவாக்கியங்களைப் படித்து தேவனை தொழுதுகொள்ளச் சென்றனர்.

லூக்கா 4:16-17

இயேசு ஜெப ஆலயத்தில் ஒரு வேதவாக்கியத்தை வாசிக்கிறார்.

ஜெப ஆலயத்தில், இயேசு நின்றுகொண்டு ஏசாயா தீர்க்கதரிசியின் வேதவாக்கியத்தை வாசித்தார். ஒரு நாள் இரட்சகர் ஒருவர் வருவார் என்று வேதவாக்கியம் சொன்னது. அவர் ஏழைகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, நொறுங்கிய இருதயங்களைக் குணப்படுத்துவார். அவர் பார்வையற்றவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உதவுவார்.

ஏசாயா 61:1-2; லூக்கா 4:17–19

அவரே இரட்சகர் என்று இயேசு ஜனங்களிடம் கூறுதல்

இயேசு வாசித்து முடித்துவிட்டு அமர்ந்தார். எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் வாசித்த வேதவாக்கியம் அன்றே நிறைவேறியதாக அவர்களிடம் கூறினார். அவரே இரட்சகர்.

லூக்கா 4:21

இயேசு எப்படி இரட்சகராக இருக்க முடியும் என்று ஜனங்கள் ஆச்சரியப்படுதல்.

இயேசு சொன்னதைக் கேட்டு நாசரேத்து ஜனங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு எப்படி இரட்சகராக இருக்க முடியும்? அவர்கள் அவரை மரியாள் மற்றும் யோசேப்பின் மகனாகவே எண்ணினர்; அவர் தேவனுடைய குமாரன் என்பதை அறியவில்லை. அவர்களுக்கு, அவர் ஒரு சாதாரண மனிதராகவே தோன்றினார்.

லூக்கா 4:22

இயேசு அற்புதங்களைப் பற்றிப் பேசுதல்.

அவரே இரட்சகர் என்பதை நிரூபிக்க ஜனங்கள் அவர் ஒரு அற்புதத்தைச் செய்ய விரும்புவதை இயேசு அறிந்திருந்தார். அவர் போதித்தது என்னவென்றால், அதிசயங்கள் என்பது விசுவாசம் உடையவர்களுக்கே; மேலும், சில நேரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் அல்லாதவர்களுக்கும் தேவன் அதிசயங்களைச் செய்தார், ஏனெனில் அவர்களுக்கு அதிகமான விசுவாசம் இருந்தது. ஜெப ஆலயத்தில் இருந்த சிலர் இயேசுவின் மீது கோபமடைந்தனர்.

லூக்கா 4:23-28

ஜனங்கள் இயேசுவை மலையின் சிகரத்திற்கு இழுத்துச் செல்லுதல்.

அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, மலையின் சிகரத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அவரை மலையிலிருந்து தள்ளிவிட விரும்பினர்.

லூக்கா 4:28-29

இயேசு கடந்து செல்லுதல்.

ஆனால் இயேசு கோபமடைந்த ஜனங்களிடமிருந்து கடந்து சென்றார்.

லூக்கா 4:30

வேறொரு பட்டணத்தில் இயேசு போதித்துக் கொண்டிருத்தல்.

அவர் நாசரேத்தில் இருக்க அவர்கள் விரும்பாததால், இயேசு வேறொரு ஊருக்குப் போதிக்கச் சென்றார்.

லூக்கா 4:31-32