வேதக் கதைகள்
"நீங்கள் எனக்கே செய்தீர்கள்" — நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, நாம் இயேசுவுக்கே சேவை செய்கிறோம்.


மத்தேயு 25:31–46

"நீங்கள் எனக்கே செய்தீர்கள்"

நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, நாம் இயேசுவுக்கே சேவை செய்கிறோம்.

இயேசு பூமிக்குத் திரும்புதல்.

இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம், தாம் பரலோகத்திலுள்ள பிதாவினிடத்திற்குத் திரும்பிய பிறகு, மீண்டும் அனைத்துப் பரிசுத்த தூதர்களுடனும் பூமிக்குத் திரும்பி வருவார் என்று கூறினார். அந்த நாளில், எல்லா தேசங்களிலிருந்தும் ஜனங்கள் அவர் முன் கூடுவார்கள் - அவரைப் பின்பற்றியவர்களும் பின்பற்றாதவர்களும்.

மத்தேயு 25:31–33

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு உணவு கொடுத்தல்.

இயேசுவைப் பின்பற்றியவர்கள் தமது ராஜ்யத்திற்குள் நுழையலாம் என்று அவர் அவர்களிடம் கூறுவார்; ஏனெனில், அவர் பசியாய் இருந்தபோது அவர்கள் அவருக்கு உணவளித்தார்கள். அவர் தாகமாயிருந்தபோது, அவர்கள் அவருடைய தாகத்தைத் தீர்த்தார்கள்.

மத்தேயு 25:34-35 .

ஒரு இளம் பெண், நோய்வாய்ப்பட்ட மற்றொரு பெண்ணைப் பார்க்கச் செல்லுதல்.

அவருக்குத் தேவைப்பட்டபோது அவர்கள் அவருக்கு உடைகளையும் தங்குவதற்கு இடத்தையும் கொடுத்தார்கள். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அல்லது சிறையில் இருந்தபோது, அவர்கள் அவரைச் சந்தித்தார்கள்.

(மத்தேயு 25:36).

இயேசு ஒருவருக்குக்கொருவர் அன்பு செலுத்துவது மற்றும் அவர் மீது அன்பு செலுத்துவது பற்றி போதித்தல்.

அந்த ஜனங்கள் இயேசுவிடம், நாங்கள் எப்போது உங்களுக்கு இது போன்ற அன்பான காரியங்களைச் செய்தோம் என்று கேட்பார்கள். நாம் மற்றவர்களுக்கு அன்பான காரியங்களைச் செய்யும்போது, அவை அவருக்கே செய்த அன்பான காரியங்களைப் போன்றது என்று இரட்சகர் விளக்குவார்.

மத்தேயு 25:37-40.

ஒரு பெண் தேவையிலுள்ளவர்களுக்கு உணவளிக்க மறுத்தல்.

தன்னைப் பின்பற்றாதவர்களிடம், அவர்கள் தமது ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்று இயேசு கூறுவார். அவர் பசியாகவும் தாகமாகவும் இருந்தபோது, அவர்கள் அவருக்கு உணவோ அல்லது தண்ணீரோ கொடுக்கவில்லை.

மத்தேயு 25:41-42.

தேவையிலுள்ள ஒரு நபர் தனியாக அமர்ந்திருத்தல்.

அவருக்கு உடைகள் தேவைப்பட்ட போதோ அல்லது தங்குவதற்கு ஓர் இடம் தேவைப்பட்ட போதோ அவர்கள் அவருக்கு உதவி செய்யவில்லை. அவர் நோயுற்றிருந்தபோது அல்லது காவலில் இருந்தபோது, அவர்கள் அவரைச் சென்று பார்க்கவில்லை.

மத்தேயு 25:43.

இயேசு தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது மற்றும் அவரிடம் அன்பு காட்டுவது எப்படி என்பதைப் பற்றி போதிக்கிறார்.

தேவையிலுள்ள ஒருவருக்கு உதவி செய்ய வேண்டாம் என்று நாம் முடிவு செய்யும் போது, நாம் அவருக்கே உதவி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறோம் என்று இயேசு விளக்குவார். நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யத் தேர்ந்தெடுக்கும்போது, நாம் இயேசுவுக்கு உதவி செய்யத் தேர்ந்தெடுக்கிறோம்.

மத்தேயு 25:45.