வேதக் கதைகள்
யோவான் ஸ்நானன் பிறத்தல்—தேவன் எலிசபெத்துக்கும் சகரியாவிற்கும் தந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுதல்.


லூக்கா 1:5–25, 57–80

யோவான் ஸ்நானன் பிறத்தல்

தேவன் எலிசபெத்துக்கும் சகரியாவிற்கும் தந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுதல்.

சகரியாவும் எலிசபெத்தும் ஒரு குழந்தைக்காக ஜெபிக்கிறார்கள்.

சகரியாவும் எலிசபெத்தும் தேவனை அன்புகூர்ந்த விசுவாசிகள். அவர்கள் ஒரு குழந்தைக்காக ஜெபித்திருந்தனர். இப்போது அவர்கள் மிக வயதானவர்களாக இருந்தனர், அவர்களுக்கு இன்னும் பிள்ளைகள் இல்லை.

லூக்கா 1:5-7

சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்தல்

சகரியா எருசலேம் ஆலயத்தில் ஊழியம் செய்த ஆசாரியன் ஆவான். ஒரு நாள், ஆலயத்தின் பரிசுத்த அறையில் தூபங்காட்டுகிறதற்கு அவன் தேர்வு செய்யப்பட்டான்.

லூக்கா 1:8–10

ஒரு தூதன் சகரியாவுக்குத் தோன்றுதல்

திடீரென ஒரு தூதன் தோன்றினான். சகரியா பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி, “சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது”, என்றான். சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் ஒரு மகன் பிறப்பான் என்று அவன் சொன்னான். அவர்கள் அவனுக்கு யோவான் என்று பேரிடும்படி கூறினான். யோவான் செய்ய வேண்டிய ஒரு முக்கியப் பணி இருப்பதாக தூதன் சொன்னான். இரட்சகர் வரும்போது அவரைச் சந்திக்க மக்கள் தயாராக இருப்பதற்கு யோவான் அவர்களை ஆயத்தப்படுத்த உதவுவான்.

லூக்கா 1:12-17

சகரியா தூதனுடன் பேசுதல்.

தூதன் கூறியவைகளை சகரியா நம்பவில்லை. அவனுக்கும் எலிசபெத்துக்கும் குழந்தை பெறும் வயது கடந்துபோயிருந்தது. தன்னுடைய செய்தியை சகரியா நம்பாததினால், யோவான் பிறக்கும் வரையில் அவன் பேச முடியாதவனாக இருப்பான் என்று தூதன் கூறினான்.

லூக்கா 1:18-20

சகரியா ஆலயத்திலிருந்து வெளியே வருதல். அவனால் பேச முடியவில்லை.

சகரியா ஆலயத்திற்குள் எதற்காக இவ்வளவு நேரம் இருந்தான் என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவன் வெளியே வந்தபோது, அவனால் பேச முடியவில்லை. ஏதோ அதிசயம் நடந்திருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடிந்தது.

லூக்கா 1:21-23

எலிசபெத்தும் சகரியாவும் புதிதாய் பிறந்த குழந்தையை ஏந்திக்கொண்டிருத்தல்

சில மாதங்கள் கழித்து, தூதன் சொன்னதுபோல எலிசபெத்து ஒரு குழந்தையைப் பெற்றாள். அவர்களின் குடும்பத்தாரும் நண்பர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள்! அவர்கள் குழந்தையைப் பார்க்க வந்தார்கள்.

லூக்கா 1:57-59

எலிசபெத்தும் சகரியாவும் குழந்தைக்கு பெயர் வைத்தல்.

அந்தக் குழந்தைக்கு அவன் தந்தையைப் போல சகரியா என்று பெயர் வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எலிசபெத்து சொன்னாள், “அவனுக்கு யோவான் என்று பேரிட வேண்டும்.” இன்னும் பேச முடியாத சகரியாவிடம் அவர்கள் கேட்டார்கள். அவன் எழுதினான், “இவன் பேர் யோவான்.” அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

லூக்கா 1:59-63

இந்தக் குழந்தை ஒரு தீர்க்கதரிசியாக இருப்பான் என்று சகரியா சொல்லுதல்.

உடனே, சகரியாவுக்கு மீண்டும் பேச முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி செலுத்தினான் மேலும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். தேவன் தம் ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நினைவுகூர்ந்தார் என்று அவன் அனைவருக்கும் கூறினான். யோவான் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பான் என்று அவன் சொன்னான். மக்கள் மனந்திரும்பவும் ஞானஸ்நானம் பெறவும் யோவான் போதிப்பான். அவன் அவர்களை இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்ள ஆயத்தப்படுத்துவான்.

லூக்கா 1:64-80