1 கொரிந்தியர் 15
கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்
பவுல் உயிர்த்தெழுதலைப் பற்றி போதிக்கிறான்
கொரிந்து என்ற நகரத்தில் இருந்த சில சபை உறுப்பினர்களுக்கு நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது பற்றிய கேள்விகள் இருந்தன. இயேசு உண்மையிலேயே உயிர்த்தெழுப்பப்பட்டாரா என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. சிலர் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொன்னார்கள். பவுல் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு, கொரிந்துவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
1 கொரிந்தியர் 15:12–14
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவருடைய சுவிசேஷத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று பவுல் எழுதினான். “கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்,” “மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்” என்று பவுல் கூறினான். பவுலும் மற்ற அப்போஸ்தலர்களும் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவரைக் கண்டனர்.
1 கொரிந்தியர் 15:1–8
கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படாவிட்டால், நாம் அனைவரும் சோகமாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருப்போம் என்று பவுல் போதித்தான். ஆதாமின் வீழ்ச்சியால், நாம் அனைவரும் இறந்துவிடுவோம், ஆனால் இயேசு கிறிஸ்துவின் காரணமாக, நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவோம்!
1 கொரிந்தியர் 15:17–22
பவுல் கொரிந்துவில் உள்ள பரிசுத்தவான்களுக்கு, மக்கள் மரித்தோருக்காக ஞானஸ்நானம் பெறுவதை நினைவூட்டினான். மரித்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழப் போவதில்லை என்றால் நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்? எல்லோரும் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்பதை அறிந்திருப்பதால், மரித்தவர்களுக்காக நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். இது அவர்களுக்கு கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
1 கொரிந்தியர் 15:29
நாம் உயிர்த்தெழுப்பப்படும்போது நமது சரீரங்கள் எப்படி இருக்கும் என்று கொரிந்துவிலுள்ள சில பரிசுத்தவான்கள் யோசித்தார்கள். நமது சரீரங்கள் மகிமையுள்ளவையாக இருக்கும் என்று பவுல் கூறினான். அவர்கள் பலவீனமடையவோ, நோய்வாய்ப்படவோ, முதுமை அடையவோ மாட்டார்கள். சிலர் சூரியனைப் போல பிரகாசமான சிலஸ்டியல் சரீரங்களைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் சந்திரனைப் போல பிரகாசமாக இருப்பார்கள், மேலும் மற்றவர்கள் நட்சத்திரங்களைப் போல பிரகாசமாக இருப்பார்கள்.
1 கொரிந்தியர் 15:35, 40–43; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:96–98; 88:20–23