2 கொரிந்தியர் 12:7–10
பலவீனமானவற்றை இயேசு பலப்படுத்த முடியும்
ஒரு “முள்ளிலிருந்து” பவுல் கற்றுக்கொண்ட பாடம்
அப்போஸ்தலன் பவுல் இயேசு கிறிஸ்துவின் சிறந்த ஊழியனாக இருந்தான். அவன் பல வெளிப்படுத்தல்கள் பெற்றான், இரட்சகரைப் பற்றி மக்களுக்குப் போதித்தான். ஆனால் பவுலுக்கும் நிறைய சவால்கள் இருந்தன.
2 கொரிந்தியர் 12:7.
சபை உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், பவுல் தனது சவால்களை தனது தோலில் ஒரு முள் குத்தியிருப்பதற்கு ஒப்பிட்டான். அது பவுலை மிகவும் பலவீனமாக உணர வைத்தது.
2 கொரிந்தியர் 12:7.
மூன்று முறை, பவுல் ஜெபித்து, தனது சவாலை நீக்கும்படி கர்த்தரிடம் கேட்டான். ஆனால் கர்த்தர் அதை எடுக்கவில்லை.
2 கொரிந்தியர் 12:8–9
அதற்கு பதிலாக, பவுலைப் பலப்படுத்துவதற்குத் தமக்கு போதுமான வல்லமை இருப்பதாகக் கர்த்தர் பவுலிடம் கூறினார். நாம் கர்த்தரிடம் திரும்பி உதவி கேட்டால், சில சமயங்களில் ஒரு சவால் நல்ல விஷயமாக இருக்கும் என்பதை பவுல் கற்றுக்கொண்டான். நாம் பலவீனமாக உணரும்போது, நமது சவால்கள் நீங்காவிட்டாலும், இயேசு கிறிஸ்து நம்மை பலப்படுத்த முடியும்.
2 கொரிந்தியர் 12:9–10