லூக்கா 7:36–50
இயேசு ஒரு பெண்ணை மன்னித்தல்
“அவள் மிகவும் நேசித்தாள்”
சீமோன் என்ற ஒரு மனுஷன் இயேசுவைத் தன் வீட்டிற்கு வந்து தன்னுடன் சாப்பிடும்படி அழைத்தான். பரிசேயர்கள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களின் குழுவில் சீமோனும் ஒருவன்.
லூக்கா 7:36
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண் சீமோனின் வீட்டிற்கு வந்தாள். இயேசு அங்கே இருக்கிறார் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அவள் அவருக்கு தன் நன்றியையும் அன்பையும் காட்ட விரும்பினாள்.
லூக்கா 7:37
இயேசுவைக் கண்டதும் அந்தப் பெண் அழுதாள். அவளுடைய கண்ணீர் அவருடைய பாதங்களைக் கழுவியது. பின்னர் அவள் தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். அவள் அவருடைய பாதங்களை முத்தமிட்டு, அவற்றின் மேல் பரிமளதைலம் பூசினாள்.
லூக்கா 7:38
இந்தப் பெண் பல பாவங்களைச் செய்திருப்பதை சீமோன் அறிந்திருந்தான். இயேசு உண்மையிலேயே தேவனுடைய மனுஷனானால், இந்தப் பெண் ஒரு பாவி என்பதை அவர் அறிந்திருப்பார் என்றும், அவள் தன்னைத் தொட அனுமதிக்க மாட்டார் என்றும் அவன் நினைத்தான்.
லூக்கா 7:39
சீமோன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் என்பதை இயேசு அறிந்திருந்தார். அந்தப் பெண் அவரை நேசித்ததால் அவருடைய பாதங்களைக் கழுவினாள் என்று அவர் சீமோனிடம் கூறினார். விருந்தினர்கள் வரும்போது, அவர்கள் கால்களை கழுவ தண்ணீர் கொடுப்பது வழக்கமாக இருந்தது. இயேசுவின் மீதுள்ள அன்பைக் காட்ட சீமோன் அப்படி எதுவும் செய்யவில்லை.
லூக்கா 7:40-47
இயேசு அந்தப் பெண்ணிடம், அவள் தம்மை நேசித்ததாலும், தம்மை விசுவாசித்ததாலும் அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறினார். அவளை சமாதானத்தோடு செல்லுபடி அவர் அவளிடம் சொன்னார்.
லூக்கா 7:47-50