அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1–17
ஒரு தூதன் பேதுருவை சிறையிலிருந்து விடுவித்தல்
தேவன் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார்
ஏரோது என்ற ராஜாவுக்கு கிறிஸ்தவர்களைப் பிடிக்கவில்லை. அவன் அப்போஸ்தலன் யாக்கோபைக் கொன்றான். பின்னர் அவன் பேதுருவை சிறையில் அடைத்தான். சிறைச்சாலையைப் பாதுகாக்க 16 போர்ச்சேவகர்களை அவன் நியமித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1–4
இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள், பேதுருவுக்காக பரலோக பிதாவிடம் தொடர்ந்து ஜெபித்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5
ஒரு இரவு, பேதுரு தூங்கிக் கொண்டிருந்தான். இரண்டு போர்ச்சேவகர்களுக்கு இடையே இரண்டு சங்கிலிகளால் அவன் கட்டப்பட்டிருந்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6
திடீரென்று, சிறையில் ஒரு ஒளி பிரகாசித்தது, ஒரு தூதன் தோன்றினான். “சீக்கிரமாய் எழுந்திரு” என்று தூதன் சொன்னான், பேதுருவின் கைகளிலிருந்து சங்கிலிகள் விழுந்தன. தூதன் பேதுருவிடம் தன்னைப் பின்தொடரச் சொன்னான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7–8
பேதுரு தான் கனவு காண்பதாக நினைத்தான். அவன் காவலர்களைக் கடந்து தூதனைப் பின்தொடர்ந்தான். நகரத்திற்குச் செல்லும் இரும்புக் கதவு தானாகவே திறந்து கொண்டது, பேதுருவும் தூதனும் அதன் வழியாக நடந்து சென்றனர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:9–10
தூதன் போய்விட்டான், பேதுரு தான் கனவு காணவில்லை என்பதை உணர்ந்தான். தன்னைக் காப்பாற்ற கர்த்தர் தூதனை அனுப்பினார் என்பது அவனுக்குத் தெரியும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:10–11
பேதுரு மரியாள் என்ற பெண்ணின் வீட்டிற்குச் சென்றான், அங்கு பல சபை உறுப்பினர்கள் ஜெபிக்க வந்திருந்தனர். அவன் கதவைத் தட்டினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12–13
ரோதை என்ற பெண் வாசலுக்கு வந்தாள். பேதுருவின் குரலைக் கேட்டதும், அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்! அவள் மற்றவர்களிடம் சொல்ல ஓடினாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:13–14
பேதுரு வாசலில் இருப்பதாக ரோதை எல்லோரிடமும் சொன்னபோது, அவர்கள் அவளை நம்பவில்லை. பேதுரு தட்டிக்கொண்டே இருந்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:15–16
கடைசியில், அவர்கள் கதவைத் திறந்து பார்த்தார்கள், அது உண்மைதான் என்று கண்டார்கள். பேதுரு பத்திரமாக இருந்தான்! கர்த்தர் அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்தார். கர்த்தர் தன்னைச் சிறையிலிருந்து எப்படி மீட்டார் என்பதை பேதுரு அனைவருக்கும் கூறினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:16–17