ரோமர் 8:18–39
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்க முடியாது
வாழ்க்கை கடினமாக இருக்கும் நேரங்களுக்கான வாக்குறுதி
ரோமாபுரி நிறைய மக்களைக் கொண்ட மிகப் பெரிய நகரமாக இருந்தது. மக்களில் சிலர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர், ஆனால் பெரும்பாலானோர் பின்பற்றுபவர்கள் அல்ல. ரோமாபுரியில் இருந்த பலர் இயேசு போதித்தவற்றிலிருந்து மிகவும் மாறுபட்ட விஷயங்களை நம்பினர். சில சமயங்களில் ரோமாபுரியின் மக்கள் சபை உறுப்பினர்களை இரக்கமின்றி நடத்தினர்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியில் உள்ள பரிசுத்தவான்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். வாழ்க்கை சில நேரங்களில் கடினமாக இருந்தாலும், தேவன் அவர்களுக்குக் கொடுக்க மகத்தான ஆசீர்வாதங்களை வைத்திருந்தார் என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்று அவன் விரும்பினான். நாம் தேவனை நேசித்தால், நம் வாழ்வில் உள்ள கடினமான காரியங்கள் நன்மைக்கு வழிநடத்தும்படி அவரால் உதவ முடியும்.
ரோமர் 8:18, 28.
இயேசு கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்று பவுல் எழுதினான். நமது சவால்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவற்றைக் கடந்து செல்ல அவர் நமக்கு உதவ முடியும்.
ரோமர் 8:31, 35–39.