வேதக் கதைகள்
சாத்தான் இயேசுவை சோதித்தல்—சோதனையை ஜெயிக்க ஒரு முன்மாதிரி


மத்தேயு 4:1-10

சாத்தான் இயேசுவை சோதித்தல்

சோதனையை ஜெயிக்க ஒரு முன்மாதிரி

இயேசு வனாந்தரத்தில் நடந்து செல்லுதல்

ஞானஸ்நானம் பெற்ற பிறகு, இயேசு தேவனோடிருக்கும்படியாக வனாந்தரத்திற்குச் சென்றார். அவர் 40 நாட்கள் எதையும் சாப்பிடவில்லை. அவர் தனது ஊழியத்தை நிறைவேற்ற ஆயத்தமாக உபவாசம் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்.

மத்தேயு 4:1–2; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பை 1b மற்றும் 2c குறிப்புகளில் பார்க்கவும்

கற்களை அப்பமாக மாற்றும்படி இயேசுவை சாத்தான் சோதித்தல்.

இயேசு பசியுடன் இருந்தார். சாத்தான் வந்து அவரைச் சோதித்தான். இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தால், கற்களை அப்பமாக மாற்ற முடியும் என்று அவன் கூறினான். இயேசு அதைச் செய்ய மறுத்தார். இயேசு வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டி, மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றார்.

மத்தேயு 4:2-4

சாத்தான் இயேசுவை ஆலயத்தின் உப்பரிகையிலிருந்து குதிக்கும்படி தூண்டுதல்

பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை ஆலயத்தின் உப்பரிகைக்குக் கொண்டு வந்தார். சாத்தான், இயேசுவை கீழே குதிக்கும்படி சோதித்தான். இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தால், தூதர்கள் அவருக்கு தீங்கு விளைவிக்க விடமாட்டார்கள் என்று அவன் சொன்னான். இயேசு கீழே குதிக்கவில்லை. நாம் தேவனை பரீட்சிக்கக் கூடாது என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன என்று அவர் சாத்தானிடம் கூறினார்.

மத்தேயு 4:5–7; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பை 5a மற்றும் 6a குறிப்புகளில் பார்க்கவும்

சாத்தான் இயேசுவை தன்னை பணிந்துகொள்ளும்படி சோதித்தல்

அடுத்ததாக, பரிசுத்த ஆவியானவர் இயேசுவை ஒரு மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து, இயேசு உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் பார்க்க முடிந்தது. சாத்தான் வந்து இயேசுவிடம் அவனை பணிந்துகொண்டால் இந்த எல்லா ராஜ்யங்களையும் தருவதாகக் கூறினான்.

மத்தேயு 4:8–10; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பை 8a பார்க்கவும்

இயேசு சாத்தானை வெளியேறச் சொல்லுதல்

தேவனை மட்டுமே பணிந்து கொள்ளவேண்டுமென வேதங்கள் கூறுகிறது என்று இயேசு சாத்தானிடம் கூறினார். இயேசு சாத்தானை வெளியேறச் சொன்னார். இயேசு தமது சுவிசேஷத்தைப் போதிக்க கலிலேயாவுக்குச் சென்றார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டார்.

லூக்கா 4:13-14