லூக்கா 10:38–42
மார்த்தாளும் மரியாளும்
மிகவும் முக்கியமானதைத் தேர்ந்தெடுத்தல்
மார்த்தாள் பெத்தானியா என்ற கிராமத்தில் வசித்து வந்தாள். இயேசுவும் அவருடைய சீஷர்களும் பெத்தானியாவுக்கு வந்தபோது, மார்த்தாள் அவர்களைத் தன் வீட்டில் வரவேற்றாள்.
லூக்கா 10:38
இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, மார்த்தாள் தன் விருந்தினர்களுக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் மும்முரமாக இருந்தாள். அவளுடைய சகோதரி மரியாள் இயேசுவின் அருகில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
லூக்கா 10:39–40
எல்லா வேலைகளையும் தானே தனியாகச் செய்வதில் மார்த்தாள் மகிழ்ச்சியாக இல்லை. இயேசு சொல்வதைக் கேட்பதற்குப் பதிலாக மரியாள் உதவி செய்ய வேண்டும் என்று அவள் நினைத்தாள். மரியாள் தனக்கு உதவ வேண்டுமென்று சொல்லும்படி இயேசுவிடம் மார்த்தாள் கேட்டாள்.
லூக்கா 10:40
மார்த்தாள் எவ்வளவு கடினமாக உழைக்கிறாள் என்பதை இயேசுவால் பார்க்க முடிந்தது. அவள் பல விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதைக் கவனித்ததாக அவர் அவளிடம் கூறினார்.
லூக்கா 10:41
சில விஷயங்கள் மற்றவற்றை விட முக்கியமானவை என்று இயேசு விளக்கினார். மரியாள், அவருடைய வார்த்தைகளைக் கேட்கும்படியாக ஒரு நல்ல தேர்வைச் செய்தாள், என்று அவர் கூறினார். இயேசுவிடமிருந்து அவள் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒருபோதும் அவளிடமிருந்து பறிக்கப்படாது.
லூக்கா 10:42