அப்போஸ்தலருடைய நடபடிகள் 10
கொர்நேலியுவும் அவனுடைய நண்பர்களும் பரிசுத்த ஆவியைப் பெறுதல்
சுவிசேஷம் அனைவருக்குமானது
கொர்நேலியு ரோம போர்ச்சேவகர்களின் தலைவனாக இருந்தான். அவனும் அவனது குடும்பத்தினரும் தேவனை நம்பினர், ஆனால் அவர்கள் யூதர்கள் அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. கொர்நேலியு தன்னிடம் இருந்ததை ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டான், அடிக்கடி தேவனிடம் ஜெபித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1–2
ஒரு நாள் மதியம், கொர்நேலியு உபவாசம் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்தபோது ஒரு தூதன் அவனிடம் வந்தான். தூதன், “கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது” என்றான். தேவன் அவனுடைய தயவைக் கண்டார். யோப்பா என்ற நகரத்தில் தங்கியிருந்த அப்போஸ்தலன் பேதுருவைக் கண்டுபிடிக்கும்படி தூதன் கொர்நேலியுவிடம் கூறினான். என்ன செய்ய வேண்டும் என்று கொர்நேலியுவிடம் பேதுரு சொல்வான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3–6, 30–32
தூதன் சொன்னதை கொர்நேலியு தன் வேலைக்காரர்களிடம் சொன்னான். பேதுரு தன்னை வந்து சந்திக்கும்படி கேட்க அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:7–8
யோப்பாவில், பேதுரு வீட்டின் கூரையில் ஜெபித்துக் கொண்டிருந்தான். அவன் பசியுடன் இருந்தான், சாப்பிடச் செல்லவிருந்தபோது, திடீரென்று ஒரு தரிசனத்தைக் கண்டான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:9–10
பேதுரு வானத்திலிருந்து ஒரு பெரிய துப்பட்டி இறங்கி வருவதைக் கண்டான், அதில் எல்லா வகையான விலங்குகளும் பறவைகளும் நிறைந்திருந்தன. பின்னர் பேதுரு அந்த விலங்குகளை சாப்பிட வேண்டும் என்று ஒரு குரல் கேட்டது. ஆனால் இவை யூதர்கள் சாப்பிட அனுமதிக்கப்படாத விலங்குகள். மோசேயின் நியாயப்பிரமாணம் அவைகள் அசுத்தமானவைகள் என்று கூறியது. பேதுரு அவற்றை சாப்பிட விரும்பவில்லை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:11–14
தேவன் எதையாவது சுத்தமாகப் படைத்திருந்தால், அதை அசுத்தமானது என்று அழைக்கக்கூடாது என்று அந்தக் குரல் சொன்னது. அந்தத் தரிசனம் மூன்று முறை திரும்பத் திரும்ப வந்தது. அதன் அர்த்தம் என்னவென்று பேதுரு யோசித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:15–17
அப்போதுதான், ஆவியானவர் பேதுருவிடம் மூன்று மனிதர்கள் அவனைத் தேடி வருவதாகக் கூறினார். “அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன்” என ஆவியானவர் சொன்னார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:16-21
அந்த மூன்று பேரும் கொர்நேலியுவின் வேலைக்காரர்கள். கொர்னேலியு பார்த்த தூதனைப் பற்றி அவர்கள் பேதுருவிடம் கூறி, பேதுரு வந்து அவனக்கு போதிப்பானா என்று கேட்டார்கள். யூதர்கள் பொதுவாக யூதர்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்குள் நுழைய மாட்டார்கள், அப்போஸ்தலர்களும் அவர்களுக்கு சுவிசேஷத்தைப் போதிக்கவில்லை. ஆனால் தனது தரிசனத்தை நினைவில் வைத்துக் கொண்டு, பேதுரு செல்ல முடிவு செய்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22, 28.
பேதுரு வந்தபோது, கொர்நேலியு பல நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அவனுக்காகக் காத்திருந்தான். தங்களிடம் கூறும்படி தேவன் அவனக்குக் கட்டளையிட்டதை அவர்கள் கேட்க தயாராக இருப்பதாக அவன் பேதுருவிடம் கூறினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:26, 33.
இப்போது பேதுருவுக்குத் தரிசனத்தில் தேவன் என்ன போதித்தார் என்பது புரிந்தது. தேவன் ஒரு தேசத்தையோ அல்லது மக்கள் குழுவையோ இன்னொரு தேசத்தை விட அதிகமாக நேசிப்பதில்லை என்று பேதுரு எல்லோரிடமும் சொன்னான். தேவன் தம்மைப் பின்பற்றி சரியானதைச் செய்கிற எவரையும் ஏற்றுக்கொள்கிறார். பேதுரு கொர்நேலியுவுக்கும் அவனுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34–43
அவன் போதித்துக் கொண்டிருந்தபோது, கேட்டுக்கொண்டிருந்த அனைவரிடமும் பரிசுத்த ஆவியானவர் வந்தார். பேதுரு அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற அழைத்தான். தேவனின் பிள்ளைகள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் சபையில் வரவேற்கப்படுகிறார்கள் என்பதை பேதுரு அறிந்திருந்தான். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அனைவருக்கும் பிரசங்கிக்கப்பட்டது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:44–48