வேதக் கதைகள்
மன்னிக்க மறுத்த ஊழியக்காரனின் உவமை—மன்னிப்பைப் பற்றி இயேசு போதித்தல்


மத்தேயு 18:21–34

மன்னிக்க மறுத்த ஊழியக்காரனின் உவமை

மன்னிப்பைப் பற்றி இயேசு போதித்தல்

இயேசுவிடம் பேதுரு ஒரு கேள்வி கேட்டல்.

ஒரு நாள், பேதுரு, இயேசுவிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்டான். மனுஷர் பாவம் செய்தால், அவர்களை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று அவன் அறிய விரும்பினான். “ஏழுதரமட்டுமோ?” பேதுரு கேட்டான். பேதுரு கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க, இயேசு அவனிடம் ஒரு கதை அல்லது உவமையை சொன்னார்.

மத்தேயு 18:15–21

ஒரு ஊழியக்காரன் ராஜாவுக்குக் கடன்பட்டிருத்தல்

இந்தக் கதையில், பல ஊழியக்காரர்கள் கொண்ட ஒரு ராஜா இருந்தான். அந்த ஊழியக்காரர்களில் ஒருவன் ராஜாவுக்கு பதினாயிரம் தாலந்து கடன்பட்டிருந்தான். அது மிக மிக அதிகமான பணம் தான்!

மத்தேயு 18:23–24

அந்த ஊழியக்காரனால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை.

அந்த ஊழியக்காரன் ராஜாவுக்குக் கடனை ஒருபோதும் அடைக்க இயலாதவனாயிருந்தான். கடனை அடைக்க, ஊழியக்காரனையும் அவன் குடும்பத்தையும் விற்கப் போவதாக ராஜா கூறினான்.

மத்தேயு 18:25

அந்த ஊழியக்காரன் மன்னிப்பை வேண்டுதல்.

இதைக் கேட்டதும் அந்த ஊழியக்காரன் முழங்காலில் விழுந்தான். இன்னும் கால அவகாசம் தருமாறு ராஜாவை மனமுருக வேண்டினான். “என்னிடத்தில் பொறுமையாயிரும்”, “எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்”, என்றான்.

மத்தேயு 18:26

ராஜா அந்த ஊழியக்காரனை மன்னித்தல்.

ராஜா அந்த ஊழியக்காரன் மேல் மனமிரங்கினான். அவன் அவனை மன்னிக்க முடிவு செய்தான். அந்த ஊழியக்காரன் பணத்தை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. அவன் விடுதலை பெற்றான்!

மத்தேயு 18:27

அந்த ஊழியக்காரன் மற்றொரு மனுஷனிடம் பணம் கொடுத்து தீர்க்கும்படி கேட்குதல்

பின்னர் அந்த ஊழியக்காரன், தன்னிடம் சிறிய தொகை பணம் கடன்பட்டிருந்த ஒரு மனுஷனைக் கண்டான். அவனைப்பிடித்து, “நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்”, என்றான்.

மத்தேயு 18:28

அந்த மனுஷன் ஊழியக்காரனிடம் மன்னிப்பை வேண்டுதல்.

அந்த மனுஷன் முழங்காலில் விழுந்தான். “என்னிடத்தில் பொறுமையாயிரும்”, “எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்” என்று வேண்டிக்கொண்டான். ஆனால் அந்த ஊழியக்காரன் அவனை மன்னிக்க மறுத்தான். அவன் அவனைச் சிறையில் அடைத்தான்.

மத்தேயு 18:29–30

ராஜா அந்த ஊழியக்காரனிடம் மன்னிப்பைப் பற்றி கூறுதல்.

என்ன நடந்தது என்பதை ராஜா அறிந்தபோது, அந்த ஊழியக்காரனை அழைத்து வரச் சொன்னான். ராஜா, அந்த ஊழியக்காரனுக்கு அவன் மிகப் பெரிய கடனில் இருந்து மன்னிக்கப்பட்டதை நினைவூட்டினான். தன்னிடம் கடன்பட்டிருந்த மனுஷனை அவனும் அதேபோல் மன்னித்திருக்க வேண்டுமென்று ராஜா அந்த ஊழியக்காரனிடம் சொன்னான்.

மத்தேயு 18:31–33

பேதுருவுடன் மன்னிப்பைப் பற்றி இயேசு பேசுதல்.

நாம் அனைவரும் நம்மால் ஒருபோதும் செலுத்த முடியாத ஒரு கடனை உடையவர்களே. தேவன் நம்மை மன்னிப்பதுபோல, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும் என்று இயேசு பேதுருவுக்கு விளக்கினார். ஏழு முறை மன்னித்துவிட்டு நிற்காமல், எப்போதும் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

மத்தேயு 18:22, 34–35; மத்தேயு 6:14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:9–10 ஐயும் பார்க்கவும்.