மத்தேயு 10; லூக்கா 5:1-11; 6:12-16
இயேசு தம்முடைய சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்
“மனுஷர்களைப் பிடிப்பவர்களாக” இருக்க அழைப்பு
ஒரு நாள், இயேசுவின் போதனையைக் கேட்க ஜனங்கள் கலிலேயா கடலுக்கு வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தபோது, இயேசு படகில் இருந்து அவர்களுக்குக் போதித்தார். அந்தப் படகு சீமோன் எனும் ஒரு மீனவனுடையது.
லூக்கா 5:1-3
இயேசு போதனையை முடித்ததும், படகை கடலின் ஆழமான பகுதியில் கொண்டு செல்ல சீமோனிடம் கேட்டார். அவர் சீமோனிடம் மீன் பிடிக்க தண்ணீரில் வலையை போடச் சொன்னார். இரவு முழுவதும் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், எந்த மீனையும் பிடிக்கவில்லை என்றும் சீமோன் கூறினான். ஆனால் இயேசு அவனைக் கேட்டதால், அவன் மீண்டும் முயற்சிக்க முடிவு செய்தான்.
லூக்கா 5:4-5
சீமோன் நிறைய மீன்களைப் பிடித்ததால் அவனுடைய வலை கிழிந்தது! அவன் வேறொரு படகில் இருந்த தனது நண்பர்களை உதவிக்கு அழைத்தான். விரைவில் படகுகள் மீன்களால் நிரம்பி, மூழ்கத் தொடங்கின. சீமோனும் அவனுடைய நண்பர்களும் ஆச்சரியப்பட்டார்கள்!
லூக்கா 5:6–7, 9
சீமோன் இயேசுவின் முன் மண்டியிட்டான். “ஆண்டவரே, நான் பாவியான மனுஷன்”, என்று சொன்னான். இயேசு தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை அவன் அறிந்திருந்தான். இயேசு அவனிடம் பயப்படாதே என்று சொன்னார்.
லூக்கா 5:8
இயேசு சீமோனையும், அவருடைய சகோதரர் அந்திரேயாவையும், அவருடைய நண்பர்களான யாக்கோபையும், யோவானையும் தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார். மீன் பிடிப்பதற்குப் பதிலாக, ஜனங்கள் இயேசுவிடம் வர அவர்கள் உதவுவார்கள்.
மாற்கு 1:16–17, லூக்கா 5:10-11
சீமோன், யாக்கோபு, யோவான் ஆகியோர் தங்கள் மீன்பிடி படகுகளை விட்டுவிட்டு இயேசுவின் அப்போஸ்தலர்களானார்கள். பின்னர், இயேசு சீமோனுக்கு பேதுரு என்ற பெயரைச் கொடுத்தார். ஒரு அப்போஸ்தலன் என்பவர் இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சி. இயேசு 12 பேரைத் தம்முடைய அப்போஸ்தலர்களாக அழைத்தார். யாரை அழைக்க வேண்டும் என்று அறிய அவர் ஜெபித்தார். அவர் தமது சபையை வழிநடத்த தம் அப்போஸ்தலர்களுக்கு ஆசாரியத்துவ அதிகாரத்தை வழங்கினார்.
மத்தேயு 10; லூக்கா 6:12–16; 9:1–2
அப்போஸ்தலர்கள் தேவனின் வல்லமையைப் பெற்றிருந்ததால், அவர்கள் நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், இறந்த பிறகு மக்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும், மற்ற அற்புதங்களைச் செய்யவும் முடிந்தது.
மத்தேயு 10:8
இயேசு தம்முடைய சுவிசேஷத்தை ஜனங்களுக்குப் போதிக்க தம்முடைய அப்போஸ்தலர்களை பல பட்டணங்களுக்கு அனுப்பினார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிய உதவுவார் என்று அவர் கூறினார். சிலர் தாங்கள் கற்பிப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும், ஆனால் அவர்கள் உண்மையுடன் ஊழியம் செய்தால், தேவன் அவர்களுடன் இருப்பார் என்றும் இயேசு கூறினார்.
மத்தேயு 10:5–7, 19–22