வேதக் கதைகள்
சிறுவன் இயேசு—கற்பதும் வளர்வதும்


லூக்கா 2:39-52

சிறுவன் இயேசு

கற்பதும் வளர்வதும்

இயேசு தன் குடும்பத்தாருடன் வீட்டில் இருத்தல்

இயேசு நாசரேத் ஊரில் மரியாளுடனும் யோசேப்புடனும் வளர்ந்தார். அவர் வளர வளர, பரலோக பிதாவைப் பற்றி அதிகமதிகமாக கற்றுக்கொண்டார். பரலோக பிதா அவர் செய்ய வேண்டுமென விரும்பிய பணிக்கு தம்மை ஆயத்தப்படுத்தினார்.

லூக்கா 2:39–40; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93–12–14

இயேசுவும் அவரது குடும்பத்தாரும் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குச் செல்லுதல்.

இயேசு பன்னிரண்டு வயதில், பஸ்கா பண்டிகையை கொண்டாட குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் எருசலேமுக்குச் சென்றார். அவர்கள் அங்கே சில நாட்கள் தங்கி இருந்தனர்.

லூக்கா 2:41-43

மரியாளும் யோசேப்பும் இயேசு தங்களுடன் இல்லை என்பதை கவனித்தல்.

வீடு திரும்பும் வழியில், யோசேப்பும் மரியாளும் இயேசு தங்களுடன் இல்லை என்பதை கவனித்தார்கள். அவர்கள் இயேசுவைத் தேடுவதற்காக எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள்.

லூக்கா 2:44-46

இயேசு ஆலயத்தில் போதித்தல்

மூன்று நாட்கள் தேடிய பிறகு, மரியாளும் யோசேப்பும் இறுதியில் இயேசுவை கண்டுபிடித்தார்கள். அவர் ஆலயத்தில் இருந்து, வேதப்பகுதிகள் குறித்து சில போதகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். போதகர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவர்கள் இயேசு எவ்வளவு அறிவும் புரிதலும் உடையவர் என்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள்!

லூக்கா 2:46-47; அடிக்குறிப்பு 46c இல் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பையும் பார்க்கவும்

மரியாளும் யோசேப்பும் ஆலயத்தில் இயேசுவுடன் பேசுதல்

இயேசுவைக் காணாதபோது அவர்கள் எவ்வளவு கவலைப்பட்டார்கள் என்பதை மரியாள் அவரிடம் சொன்னாள். இயேசு தம்முடைய பரலோக பிதாவின் பணியைச் செய்வதாகக் கூறினார். இயேசு தன் குடும்பத்தாருடன் நாசரேத்திற்குத் திரும்பினார். அவர் மரியாளுக்கும் யோசேப்புக்கும் கீழ்ப்படிந்தார்.

லூக்கா 2:48-52

இயேசு தன் குடும்பத்தாருடன் வீட்டில் இருத்தல்

இயேசு தொடர்ந்து கற்றுக் கொண்டிருந்தார். இயேசு பெரியவராகவும் பலமுள்ளவராகவும் வளர்ந்தார். பரலோக பிதா அவரை நேசித்து, தம் ஊழியத்திற்காக அவரைத் தயாராகச் செய்தார். இயேசு தம்மைச் சுற்றியிருந்த மக்களை நேசித்தார்; அவர்களும் அவரை நேசித்தனர்.

லூக்கா 2:52