அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36–42
தபீத்தாள், “நற்கிரியைகள் நிறைந்த” ஒரு பெண்
இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் மீண்டும் உயிர்பெற்றாள்
தபீத்தாள் இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷியாக இருந்தாள். அவள் கடலோரத்தில் இருந்த யோப்பா என்ற ஊரில் வசித்து வந்தாள். ஏழை மக்களுக்கு சேவை செய்வதையும் உதவுவதையும் அவள் விரும்பினாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36
தபீத்தாள் துணிகளைத் தைத்து, ஏழைப் பெண்களுக்குக் கொடுத்தாள். அவர்கள் தபீத்தாளை நேசித்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39
ஒரு நாள், தபீத்தாள் மிகவும் நோய்வாய்ப்பட்டாள். அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:37
யோப்பாவிலுள்ள மற்ற சபை உறுப்பினர்கள் மிகவும் சோகமாக இருந்தனர். இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவனான பேதுரு அருகிலுள்ள ஒரு ஊரில் இருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். பேதுருவை சீக்கிரம் தங்களிடம் வரும்படி கேட்டுக்கொள்ள அவர்கள் இரண்டு பேரை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:38
தபீத்தாளின் உடல் இருந்த இடத்திற்கு பேதுரு வந்தான். தபீத்தாள் உதவி செய்த சில பெண்கள் அங்கே இருந்தார்கள். அவள் தங்களுக்காகத் தைத்த ஆடைகளை அவர்கள் பேதுருவிடம் காட்டினார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39
பேதுரு எல்லாரையும் அறையை விட்டு வெளியேறச் சொன்னான். அவன் மண்டியிட்டு ஜெபித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40
ஜெபித்தபின், பேதுரு, “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து உட்கார்ந்தாள். பேதுரு தபீத்தாளுக்கு எழுந்து நிற்க உதவினான். தபீத்தாள் மீண்டும் உயிருடன் இருந்தாள்! பேதுரு அவளது தோழிகளை வந்து பார்க்க அழைத்தான். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்! இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவள் மீண்டும் உயிர்த்தெழுப்பப்பட்டாள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இன்னும் பலர் அவரை விசுவாசித்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40–42