மத்தேயு 14:22–33
தண்ணீரின் மேலே நடத்தல்
விசுவாசம் பயத்தை ஜெயிக்கும்
இயேசு சிறிது நேரம் தனியாக ஜெபிக்க விரும்பினார். அவர் தம்முடைய சீஷர்களை ஒரு படகில் ஏற்றி கலிலேயா கடலின் மறுகரைக்கு அனுப்பினார். இயேசு ஒரு மலையிலே ஜெபிக்கச் சென்றார்.
மத்தேயு 14:22–23
அன்றிரவு, காற்று பலமாக இருந்தது, அலைகள் பெரிதாக இருந்தன. இயேசுவின் சீஷர்கள் இரவு முழுவதும் படகை கடலின் மறுகரைக்குக் கொண்டு செல்ல கடுமையாக போராடினர் .
மத்தேயு 14:24–25
இரவு கிட்டத்தட்ட முடிந்தபோது, சீஷர்கள் யாரோ ஒருவர் தண்ணீரில் நடந்து வருவதைக் கண்டார்கள். அவர்கள் அதைப் பேய் என்று நினைத்து பயந்தார்கள். அது ஒரு பேய் அல்ல; அது இயேசு! இயேசு அவர்களோடே பேசி, “திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்.” என்றார்.
மத்தேயு 14:25–27
பேதுரு, தண்ணீர்மேல் நடந்து இயேசுவிடம் வர வேண்டுமென விரும்பி கேட்டார். இயேசு, “வா!” என்றார் பேதுரு படகிலிருந்து இறங்கி, இயேசுவைப் போலவே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தான்!
மத்தேயு 14:28–29
ஆனால் பலத்த காற்றையும் பெரிய அலைகளையும் பார்த்தபோது பேதுரு பயந்து போனான். அவன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான். அவன் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, என்னை இரட்சியும்” என்று கூப்பிட்டான்.
மத்தேயு 14:30
இயேசு கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். அவர் பேதுருவிடம், தம்மை அதிகமாக நம்புவதற்குப் பதிலாக ஏன் சந்தேகப்பட்டாய் என்று கேட்டார்.
மத்தேயு 14:31
இயேசுவும் பேதுருவும் படகில் திரும்பி வந்தபோது, காற்று நின்றுவிட்டது. நடந்ததைக் கண்டு சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இயேசுவே உண்மையில் தேவனுடைய குமாரன் என்பதை அறிந்தனர்; அவரை ஆராதித்தார்கள்.
மத்தேயு 14:32–33