வேதக் கதைகள்
திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றிய வேலையாட்களைப் பற்றிய உவமை—ஒரு நம்பிக்கையின் செய்தி


மத்தேயு 20:1–16

திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றிய வேலையாட்களைப் பற்றிய உவமை

ஒரு நம்பிக்கையின் செய்தி

சில கூலியாட்களை வேலைக்கு அமர்த்தும் ஒருவனைப் பற்றி இயேசு ஒரு உவமையைச் சொல்லுதல்.

பரலோக ராஜ்யம் எப்படிப்பட்டதென்று புரிந்துகொள்ள இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஒரு உவமையை அல்லது கதையைச் சொன்னார். உவமையில், ஒரு மனுஷனுக்குத் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டனர். எனவே, ஒரு நாள் அதிகாலையில், நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, ஒப்புக்கொண்ட சில தொழிலாளர்களைக் கண்டறிந்தான். அவர்கள் வேலை செய்யத் தொடங்கினர்.

மத்தேயு 20:1–2

அம்மனுஷன் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல்.

மூன்று மணி நேரம் கழித்து, அந்த மனுஷன் மேலும் நிறைய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினான். அன்றைய நாள் முடியும் வரை, தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுமாறு அவன் கேட்டான். அவர்களுக்கு நியாயமான ஊதியம் தருவதாக அவன் உறுதியளித்தான்.

மத்தேயு 20:3–4

அம்மனுஷன் இன்னும் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல்.

மூன்று மணி நேரம் கழித்து, வேலை தேவைப்பட்ட மேலும் சிலரை அந்த மனுஷன் பார்த்தான். அவர்களையும் தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுமாறு அவன் கேட்டான்.

மத்தேயு 20:5

அந்த மனுஷன் மேலும் சிலரை கண்டுபிடித்து, தனக்கு உதவ வேலைக்கு அமர்த்துதல்.

இறுதியில், நாள் முடிவடையும் போது, அந்த மனுஷன் எதுவும் செய்யாமல் இருந்தவர்களை பார்த்தான். நாள் முழுவதும், ஒருவருமே அவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். நாளின் இறுதி ஒரு மணிநேரம் தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுமாறு அந்த மனுஷன் அனுமதித்தான்.

மத்தேயு 20:6–7

அந்த மனுஷன் தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்தலும்; சிலர் மனவருத்தமடைதலும்.

வேலை நாளின் முடிவில், அந்த மனுஷன் தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்தான். ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கு அவன் ஒரு பணம் கொடுத்தான். மற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் அவன் தலா ஒரு பணம் கொடுத்தான். நாள் முழுவதும் வேலை செய்தவர்கள் கோபமடைந்தார்கள். மற்ற அனைவரைவிட தங்களுக்கு அதிக பணம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மத்தேயு 20:8–12

இயேசு தயையுடனும் நீதியுடனும் நடப்பதை கற்பித்தல்.

நாள் முழுவதும் ஒரு பணத்திற்கு வேலை செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டதாக அந்த மனுஷன் நினைவூட்டினான். தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்த மற்றவர்கள் மீது அவன் தயையுடன் நடக்க தேர்ந்தெடுத்தால் அவர்கள் கோபப்படக் கூடாது என்று அவன் சொன்னான்.

மத்தேயு 20:13–16