மத்தேயு 26:36–46; லூக்கா 22:39–46
கெத்செமனேயில் இயேசு
உலகத்தின் பாவங்களுக்காகப் பாடுபடுதல்
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கெத்செமனே என்ற தோட்டத்திற்குச் சென்றார்கள். இயேசு பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைத் தம்மைப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார், மற்றவர்களை காத்திருக்கச் சொன்னார்.
மத்தேயு 26:36–37; யோவான் 18:1
இயேசு பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானிடம் தாம் மிகவும் சோகமாக இருப்பதாகக் கூறினார். அவர் ஜெபிக்கும்போது தம்முடன் விழித்திருக்கும்படி அவர்களிடம் கேட்டார்.
மத்தேயு 26:38
பிறகு இயேசு தோட்டத்திற்குள் சிறிது தூரம் நடந்து சென்றார். நாம் மனந்திரும்பி மன்னிப்பு பெறுவதற்காக அவர் நம்முடைய பாவங்களுக்காக துன்பப்படத் தொடங்கினார். இயேசு நம்முடைய எல்லா வலிகளையும், நோய்களையும், சோகத்தையும் உணர்ந்தார், அதனால் நமக்கு எப்படி உதவுவது என்று அவருக்குத் தெரியும். அவர் நம்மை நேசிப்பதால் இதைச் செய்தார். இவை அனைத்தும் பரலோக பிதாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மத்தேயு 26:39; லூக்கா 22:41; ரோமர் 3:23; ஆல்மா 7:11–13; 3 நேபி 27:19
இயேசுவின் துன்பம் மிகவும் வேதனையாக இருந்ததால், அவர் பரலோக பிதாவிடம் துன்பத்தைப் போக்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அவர் தம்முடைய பிதாவுக்குத் தேவையானதைச் செய்ய மனமுள்ளவராக இருந்தார். அவர் சொன்னார், “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது”
லூக்கா 22:42
இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் சென்று அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் அவர்களை எழுப்பி, மீண்டும் விழித்திருந்து ஜெபிக்கும்படி கூறினார். ஆனால் அவர்கள் விழித்திருக்க விரும்பினாலும், அவர்கள் மிகவும் சோர்வாக இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
மத்தேயு 26:40–41
இயேசு மீண்டும் ஜெபித்தார். அவருக்குப் பலம் கொடுக்க ஒரு தூதன் வந்தான். அவர் மிகவும் வேதனையை உணர்ந்தார், மேலும் அவர் இன்னும் அதிகமாக ஜெபித்தார். அவரது வியர்வை இரத்தத் துளிகளாகத் தரையில் விழுந்தது.
மத்தேயு 26:42; லூக்கா 22:43–44; மோசியா 3:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:16–19
இன்னும் இரண்டு முறை, இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் சென்று அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். கடைசியில், அவர் அவர்களை எழுப்பினார், ஏனென்றால் அவர் எடுத்துக்கொள்ளப்படும் நேரம் வந்துவிட்டது.
மத்தேயு 26:43–46