வேதக் கதைகள்
இயேசு ஒரு குருடனை சுகமாக்குதல்—காலப்போக்கில் நடைபெறும் ஒரு குணமடைதல்


மாற்கு 8:22–25

இயேசு ஒரு குருடனை சுகமாக்குதல்

காலப்போக்கில் நடைபெறும் ஒரு குணமடைதல்

ஜனங்கள் ஒரு குருடனை, இயேசு குணப்படுத்தும்படி, அவரிடம் கொண்டு வருதல்.

பெத்சாயிதா எனப்படும் ஊரிலே, மக்கள் சிலர், குருடன் ஒருவனை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவன் பார்வை பெறும்படி, இயேசு அவனை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

மாற்கு 8:22

இயேசு அந்த மனுஷனை ஆசீர்வதித்தல்.

இயேசு அந்த மனுஷனுடைய கையைப்பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோனார். பின்னர் இயேசு, அந்த மனுஷன்மேல் தம்முடைய கைகளை வைத்து, அவனை ஆசீர்வதித்தார்.

மாற்கு 8:23

அந்த மனுஷன் இப்போது பார்க்கத் தொடங்கினான், ஆனால் முழுமையாக இல்லை.

இயேசு அந்த மனுஷனிடம், அவன் எதையாவது காண்கிறானா என்று கேட்டார். அவன் கண்களை ஏறெடுத்து பார்த்தான். அந்த மனுஷன் பார்க்கத் தொடங்கினான், ஆனால் அவன் பார்வை இன்னும் மங்கலாக இருந்தது. நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான்.

மாற்கு 8:23–24

அந்த மனுஷன் இப்போது தெளிவாய்க் காணுதல்.

இயேசு அந்த மனுஷனை மீண்டுமாய் ஆசீர்வதித்தார். இந்த முறை, அவன் ஏறிட்டு பார்த்தபோது, அனைத்தும் தெளிவாக தெரிந்தது. இயேசு அவனை குணப்படுத்தியிருந்தார்!

மாற்கு 8:25