யோவான் 1:43-51
வந்து பாருங்கள்
இயேசுவைப் பின்பற்ற ஒரு நண்பரை அழைத்தல்
பிலிப்பு என்ற பெயரைக்கொண்ட மனுஷன் இயேசுவைப் பின்பற்றியவர்களில் ஒருவனாக இருந்தான். இயேசுவே இரட்சகர் என்பதை அவன் அறிந்திருந்தான். பிலிப்பு, தன் நண்பனான நாத்தான்வேலும் இயேசுவைப் பற்றி அறிய வேண்டும் என்று விரும்பினான்.
யோவான் 1:43-45
வேதம் கூறுவது போல, தேவன் ஒரு இரட்சகரை அனுப்புவார் என்பதை நாத்தான்வேல் அறிந்திருந்தான். பிலிப்பு அவனிடம் தான் இரட்சகரைக் கண்டுபிடித்ததாகக் கூறினான்—அவர் பெயர் இயேசு, நாசரேத்தைச் சேர்ந்தவர்.
யோவான் 1:45
முதலில் நாத்தான்வேல் அவனை நம்பவில்லை. இரட்சகர் நாசரேத்திலிருந்து வரக்கூடும் என்று நாத்தான்வேல் நினைக்கவில்லை. “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்று அவன் கேட்டான். அதற்குப் பிலிப்பு, “வந்து பார்”, என்றான்.
யோவான் 1:46
இயேசுவைச் சந்திக்க நாத்தான்வேல் பிலிப்புவுடன் சென்றான். அவர்கள் வருவதை இயேசு பார்த்தபோது, நாத்தான்வேல் ஒரு கபடற்ற உத்தமன் என்று கூறினார். நாத்தான்வேல் ஆச்சரியப்பட்டான். அவன் இதற்கு முன்பு இயேசுவை ஒருபோதும் சந்தித்ததில்லை. இயேசு அவனை எப்படி அறிந்தார்?
யோவான் 1:47-48
இயேசு நாத்தான்வேலிடம், பிலிப்பு அவனை அழைக்கிறதற்கு முன்பே, தான் அவனை அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்ததைக் கண்டதாகக் கூறினார்.
யோவான் 1:48
இயேசு தேவனுடைய குமாரன் என்பதை நாத்தான்வேல் இப்போது அறிந்தான். இயேசு நாத்தான்வேலிடம், தூதர்கள் பரலோகத்திலிருந்து வருவது போல, பெரிய காரியங்களைக் காண்பான் என்று சொன்னார்—இவை அனைத்தும் அவனுடைய விசுவாசத்தினாலேயே ஆகும்.
யோவான் 1:49-51