1 மற்றும் 2 தெசலோனிக்கேயர்
ஒளியின் பிள்ளைகள்
இயேசு கிறிஸ்து மீண்டும் வருவதற்காகக் காத்திருக்கும்போது அவரை நம்புதல்
பவுலின் காலத்தில் இருந்த பரிசுத்தவான்கள், இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வரும் நாளுக்காக உற்சாகமாக இருந்தனர். தெசலோனிக்கேயா என்ற இடத்தில், பரிசுத்தவான்களுக்கு வாழ்க்கை கடினமாகிக் கொண்டிருந்தது. இயேசு மிக விரைவில் வருவார் என்பதற்கு இது அர்த்தமா என்று அவர்கள் யோசித்தார்கள். அவர்களுக்கு உதவ பவுல் கடிதங்களை எழுதினான்.
1 தெசலோனிக்கேயர் 4:16–18; 5:1–2; 2 தெசலோனிக்கேயர் 1:4
இயேசு எப்போது மீண்டும் வருவார் என்பது யாருக்கும் தெரியாது என்று பவுல் கூறினான். அவர்கள் இரவில் தூங்கும்போது திருடன் வருவது போல, சிலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும்.
1 தெசலோனிக்கேயர் 5:2–3; 2 தெசலோனிக்கேயர் 2:2
ஆனால் பவுல் பரிசுத்தவான்களிடம், அவர்கள் இருளில் இல்லை என்று கூறினான். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியதால், பரிசுத்தவான்கள் ஒளியின் பிள்ளைகளானார்கள்!
1 தெசலோனிக்கேயர் 5:4–5.
இயேசு மீண்டும் வருவதற்கு முன்பு, பலர் சத்தியத்திலிருந்து விலகிச் செல்வார்கள் என்று பவுல் விளக்கினான். ஒளியின் பிள்ளைகளான பரிசுத்தவான்கள் இயேசுவைப் பின்பற்றி, அவருடைய வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். நாம் இதைச் செய்தால், உலகில் என்ன நடந்தாலும் சரி, இயேசு திரும்பி வரும்போது நாம் தயாராக இருப்போம்.
1 தெசலோனிக்கேயர் 1:5; 2 தெசலோனிக்கேயர் 2:3