மத்தேயு 14:13–21; யோவான் 6
இயேசு ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு உணவளித்தல்
அவரே ஜீவ அப்பம்
யோவான் ஸ்நானன் கொல்லப்பட்டதை இயேசு அறிந்தார். அவர் சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பட்டணங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றார்.
மத்தேயு 14:13
இயேசு எங்கே போனார் என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டு, அவரைப் பின்தொடர்ந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, அவர்கள் மீது அன்பு கொண்டார். அவர் நாள் முழுவதும் அவர்களை ஆசீர்வதித்து குணப்படுத்துவதில் செலவிட்டார்.
மத்தேயு 14:13–14
நாள் முடிவடையும் நேரத்தில், ஜனங்கள் பசியடையத் தொடங்கினர். இயேசு ஜனங்களை உணவு பெற பட்டணங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் நினைத்தார்கள். ஆனால் இயேசு அவர்கள் அங்கிருக்க வேண்டும் என்று விரும்பினார். ஜனங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி அவர் அப்போஸ்தலர்களிடம் கேட்டார்.
மத்தேயு 14:15–16
அப்போஸ்தலன் அந்திரேயா ஒரு சிறுவனைக் கண்டுபிடித்தான், அவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு சிறிய மீன்களும் ஜனங்களுக்குக் கொடுக்க இருந்தன. ஆனால் அங்கு சுமார் 5000 ஆண்கள், அதோடு பெண்களும் குழந்தைகளும் உணவருந்த வேண்டியிருந்தார்கள். இவ்வளவு கொஞ்சமான உணவை வைத்து எப்படி இவ்வளவு பேருக்கு உணவளிக்க முடியும்?
மத்தேயு 14:17, 21; யோவான் 6:8–10
இயேசு அப்போஸ்தலர்களிடம் உணவைத் தன்னிடம் கொண்டு வரும்படி கேட்டார். அவர் ஜனங்களைப் புல்லில் உட்காரச் சொன்னார். பின்னர் இயேசு, அப்பத்திற்கும் மீனுக்கும் பரலோக பிதாவிடம் நன்றி செலுத்தி, அதை ஆசீர்வதிக்கும்படி ஒரு ஜெபத்தைச் சொன்னார். பின்னர் அவர் அப்பத்தையும் மீனையும் துண்டுகளாகப் பிட்டார்.
மத்தேயு 14:18–19; யோவான் 6:10–11
இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம், ஜனங்களுக்கு அப்பத்தையும் மீனையும் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் அனைவரும் சாப்பிட்டார்கள்; அனைவரும் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்ட பிறகும், மீதமுள்ள உணவு இன்னும் 12 கூடைகள் நிறைய இருந்தன!
மத்தேயு 14:20; யோவான் 6:11–13
அடுத்த நாள், ஜனங்கள் மீண்டும் வந்து, இயேசுவைத் தேடி கண்டனர். ஆனால் இயேசு அறிந்திருந்தார், அவர்களில் பலர் உணவுக்காகவே அவரைப் பின்பற்றினார்கள் என்று. உணவு சிறிது காலம் மட்டுமே நீடிக்கும் என்பதை இயேசு அவர்களுக்கு நினைவூட்டினார். அவர்களுக்குக் கொடுக்க அவரிடம் இதைவிடச் சிறந்த ஒன்று இருந்தது.
யோவான் 6:14, 24–27
இயேசு, “ஜீவ அப்பம் நானே” என்றார். அப்பம் நமக்கு இந்த உலகில் உயிர்வாழ உதவுகிறது. ஆனால் இயேசு கிறிஸ்து பரலோக பிதாவுடன் நமக்கு நித்திய ஜீவனைத் தர முடியும்.
யோவான் 6:35–58
பலருக்கு இயேசு சொல்லிய போதனைகள் பிடிக்கவில்லை. அவர்கள் திரும்பிப் போயினர், இயேசுவை மீண்டும் பின்பற்றவில்லை.
யோவான் 6:60, 66
பின்னர் இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம், “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” என்று கேட்டார். பேதுரு, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று பதிலளித்தார். அப்போஸ்தலர்கள் அங்கிருந்து போகவில்லை. இயேசு கிறிஸ்து இரட்சகர் என்றும் தேவனுடைய குமாரன் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
யோவான் 6:67–69