மத்தேயு 8:23-27; மாற்கு 4:36–41
இயேசு புயலை அமைதிப்படுத்துதல்
காற்றும் கடலும் கூட அவருக்குக் கீழ்ப்படிகின்றன
ஒரு நாள், இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயாக் கடலில் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். காற்று மிகவும் பலமாக வீசத் தொடங்கியது. அலைகள் படகின் மீது மோதி, அதில் தண்ணீர் நிரம்பத் தொடங்கின. ஆனால், இயேசு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.
மத்தேயு 8:23–24
சீஷர்கள் பயந்தனர். அவர்கள் இயேசுவை எழுப்பினார்கள். “ஆண்டவரே ,எங்களை இரட்சியும்,” என்று அழுதார்கள். அவர்கள் கடலில் மூழ்கிவிடப்போகிறோம் என்று நினைத்தனர்.
மத்தேயு 8:25
“ஏன் பயப்படுகிறீர்கள்?” என்று இயேசு கேட்டார். அவர் தம்முடைய சீஷர்களிடம், அவர்களுக்கு இன்னும் அதிக விசுவாசம் இருக்க வேண்டும் என்று கூறினார். இயேசு எழுந்து நின்று காற்றையும் கடலையும், “இரையாதே, அமைதலாயிரு,” என்றார்.
மத்தேயு 8:26; மாற்கு 4:39
திடீரென்று புயல் நின்றது, கடல் அமைதியாக இருந்தது. இயேசுவும் சீஷர்களும் பாதுகாப்பாக இருந்தார்கள். இயேசுவின் சீஷர்கள் வியந்து போனார்கள்! காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிட்டதும், அவை அமைதியாகிவிட்டதைப் பார்த்து இவர் எப்படிப்பட்டவரோ என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு 8:26-27