லூக்கா 17:11–19
இயேசு குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட பத்து பேரை குணப்படுத்துதல்
நன்றியுணர்வின் முக்கியத்துவம்
இயேசு பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கு, குஷ்டரோகம் எனப்படும் மிகக் கொடிய தோல் நோயால் பாதிக்கப்பட்ட பத்து மனுஷரைக் கண்டார். குஷ்டரோகிகள், எல்லோரிடமிருந்தும், அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் கூட விலகி இருக்க வேண்டியிருந்தது, அதனால்தான் மற்றவர்களுக்கு இந்நோய் பரவவில்லை.
லூக்கா 17:11–12
அம்மனுஷர் இயேசுவை சத்தமிட்டு அழைத்து, தங்களைக் குணப்படுத்தும்படி கேட்டார்கள். இயேசு அவர்களை ஊரில் உள்ள ஆசாரியர்களிடம் காண்பிக்கும்படி கூறினார். அவர்கள் மீண்டும் பிற மக்களோடு அனுமதிக்கப்படலாமா என்பதை ஆசாரியர்களே தீர்மானித்தார்கள்.
லூக்கா 17:13–14; லேவியராகமம் 14:2–3 ஐயும் பார்க்கவும்.
பத்து நோயாளிகளும் ஆசாரியர்களிடம் செல்லும் வழியில், ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவர்களின் நோய் நீங்கியது. அவர்கள் குணமடைந்தார்கள்!
லூக்கா 17:14
அவர்களில் ஒருவன் தான் குணமடைந்ததைக் கண்டதும், திரும்பிப் பார்த்து, உரத்த குரலில் தேவனுக்கு நன்றி கூறினான். அவன் ஒரு சமாரியனாயிருந்தான்.
லூக்கா 17:15–16
அவர் செய்ததற்கு நன்றி தெரிவிக்க, அந்த மனுஷன் இயேசுவின் பாதங்களில் விழுந்தான். குணமடைந்த மற்ற ஒன்பது பேர் எங்கே, என்று இயேசு கேட்டார். ஒரே ஒரு மனுஷன் மட்டுமே அவருக்கு நன்றி சொல்ல திரும்பி வந்தான்! இயேசு அவனை நோக்கி: “நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார்.
லூக்கா 17:16–19