1 கொரிந்தியர் 6:16–20
பவுல் நம் சரீரங்களை ஆலயத்திற்கு ஒப்பிடுகிறான்
தேவனிடமிருந்து வந்த பரிசுத்த வரங்கள்
கொரிந்து கடலோரத்தில் ஒரு பெரிய நகரமாக இருந்தது. அந்த நகரத்தில் தேவனை ஆராதிக்காதவர்கள் ஏராளமாக இருந்தனர். பவுல் கொரிந்துவில் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிப் போதித்தான். பலர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:8–11
பவுல் சென்ற பிறகு, சபை உறுப்பினர்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டான். கொரிந்துவில் பலர் நம் சரீரத்தை எவ்வாறு கையாள்வது அல்லது பயன்படுத்துவது என்பது பற்றிய தேவனின் கட்டளைகளைப் பின்பற்றவில்லை.
1 கொரிந்தியர் 6:13–18
பவுல் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். நம் சரீரங்கள் தேவனின் ஆலயம் போன்றது என்று அவன் கூறினான். அது தேவனின் வீடு என்பதால் நாம் ஆலயத்தை மரியாதையாக நடத்துதுகிறோம். நம் சரீரங்கள் தேவனிடமிருந்து வந்த வரம் என்பதால் நாம் அவற்றை மரியாதையாக நடத்த வேண்டும்.
1 கொரிந்தியர் 6:19–20
நம் சரீரங்களைக் கொண்டு நல்ல காரியங்களைச் செய்ய நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார். நாம் அவ்வாறு செய்யும்போது, பரிசுத்த ஆவி நம்முடன் இருக்க முடியும்.
1 கொரிந்தியர் 6:19
இயேசு கிறிஸ்து தம்முடைய பாடுகளின் மூலம் நமக்காக ஒரு விலை செலுத்தினார் என்று பவுல் கூறினான். நம் சரீரங்களைப் பற்றி நல்ல தேர்வுகளைச் செய்வதன் மூலமும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் இயேசுவின் மீதுள்ள நம் அன்பைக் காட்டுகிறோம். நம் சரீரங்கள் என்ற அற்புதமான வரத்தை ஒரு ஆலயம் போல நடத்துவதன் மூலம், தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்பதைக் காட்டுகிறோம்.
1 கொரிந்தியர் 6:20