யோவான் 10:1-18.
இயேசுவே நல்ல மேய்ப்பன்
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிசாய்க்கின்றன, நான் அவைகளை அறிந்திருக்கிறேன்”
இயேசு எருசலேம் ஜனங்களிடம் தாம் ஒரு நல்ல மேய்ப்பனைப் போல இருப்பதாகக் கூறினார். அவருடைய சீஷர்கள், அல்லது அவரைப் பின்பற்றுபவர்கள், அவருடைய ஆடுகளைப் போன்றவர்கள். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை நேசிக்கிறான். அவன் ஒவ்வொன்றின் பெயரையும் அறிந்திருக்கிறான்.
யோவான் 10:3, 14 ; மேலும் காண்கஏலமன் 15:13
ஆடுகள் நல்ல மேய்ப்பனின் சத்தத்தை அறிந்திருக்கின்றன. அவன் அவற்றை அழைக்கும்போது, அவை செவிகொடுத்துக் கீழ்ப்படிகின்றன.
யோவான் 10:4, 27.
நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளைக் கவனித்துக்கொள்கிறான். இயேசு கிறிஸ்து நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவது போலவே, அவனும் அவைகளைப் பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்கு வழிநடத்துகிறான்.
யோவான் 10:9–10, 28
ஆடுகளைக் கவனிக்க வேறொருவன் கூலிக்கு அமர்த்தப்படும்போது, அவை அவனைப் பின்பற்றுவதில்லை. ஏனென்றால் அவை அவனுடைய குரலை அறியாது. ஆபத்து வரும்போது, கூலிக்கு அமர்த்தப்பட்டவன் ஓடிப்போகிறான். நல்ல மேய்ப்பனைப் போல அவன் ஆடுகள் மேல் அக்கறை கொள்வதில்லை.
யோவான் 10:5, 12–13
நல்ல மேய்ப்பன் ஆபத்து வரும்போது ஓடிப்போவதில்லை. அவன் தன்னுடைய ஆடுகளைப் பாதுகாக்க அவற்றோடு தங்கியிருக்கிறான். நாம் நித்திய ஜீவனைப் பெற இயேசு கிறிஸ்து நமக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்தது போல, அவன் அவைகளுக்காகத் தன்னுடைய ஜீவனைக் கொடுக்கவும் மனமுள்ளவனாக இருக்கிறான்.
யோவான் 10:11, 17–18
எருசலேமிலிருந்த ஜனங்களிடம் , மற்ற இடங்களில் வாழ்கிற வேறு ஆடுகளும் தம்மிடம் இருப்பதாக இயேசு கூறினார். இயேசு அவர்களையும் சந்திப்பதாகவும், அவர்கள் அவருடைய போதனைகளைக் கேட்பார்கள் என்றும் கூறினார். மார்மன் புஸ்தகம், இயேசு அமெரிக்காவில் தம்முடைய மற்ற ஆடுகளில் சிலரை சந்தித்ததைப் பற்றிக் கூறுகிறது.
யோவான் 10:16 ; 3 நேபி 15:11–24