வேதக் கதைகள்
இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களைக் கொடுத்தல்—“இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்”


மத்தேயு 16–17

இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களைக் கொடுத்தல்

“இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்”

இயேசு சீஷர்களுடன் பேசிக்கொண்டிருத்தல்.

ஒரு நாள், இயேசு தம்முடைய சீஷர்களிடம், மக்கள் தம்மை யாரென்று நினைக்கிறார்கள் என்று கேட்டார். சிலர் அவரை யோவான் ஸ்நானன் என்று சொன்னதாக அவருடைய சீஷர்கள் பதிலளித்தனர். மற்றவர்கள் அவர் பழைய ஏற்பாட்டிலிருந்து திரும்பி வந்த ஒரு தீர்க்கதரிசி என்று நினைத்தார்கள்.

மத்தேயு 16:13–14

பேதுரு இயேசுவுக்குப் பதிலளித்தல்.

பின்னர் இயேசு தம்முடைய சீஷர்களிடம், தம்மை யார் என்று அவர்கள் நினைப்பதாகக் கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான்.

மத்தேயு 16:15–16

இயேசு பேதுருவுடன் பேசுதல்.

பேதுரு இதைச் சொன்னதைக் கேட்டு இயேசு மகிழ்ச்சியடைந்தார். அவர் பேதுருவிடம் கூறும்போது, இயேசு யார் என்பதை பிறர் சொல்லித் தந்ததனால் அவன் அறியவில்லை, என்றார். பரலோக பிதாவே அதை அவனுக்கு வெளிப்படுத்தினார்.

மத்தேயு 16:17

இயேசு பேதுருவுக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களைக் கொடுப்பதாக வாக்குத்தத்தம் செய்தல்.

இயேசு பேதுருவிடம், “இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்”, என்றார். பின்னர் அவர் பேதுருவுக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களை வேறுவிதமெனில் தேவனிடமிருந்துள்ள அதிகாரத்தையோ தருவதாக வாக்குத்தத்தம் செய்தார், இதனால் அவனும் மற்ற அப்போஸ்தலர்களும் பூமியில் அவருடைய சபையை வழிநடத்த முடியும்.

மத்தேயு 16:18–19

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு ஒரு மலையின்மேல் செல்லுதல்.

ஒரு சில நாட்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு ஜெபிக்கும்படி ஒரு உயர்ந்த மலையின்மேல் சென்றார்.

மத்தேயு 17:1; லூக்கா 9:28

இயேசு ஜெபித்தல்

இயேசு ஜெபித்தபோது,அவரது முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது. அவர் வஸ்திரம் பிரகாசமாக காட்சியளித்தது.

மத்தேயு 17:2; லூக்கா 9:29

மோசேயும் எலியாவும் தோன்றுதல்

பழைய ஏற்பாட்டின் இரண்டு தீர்க்கதரிசிகள், மோசேயும் எலியாவும் தோன்றினார்கள் அவர்கள் இயேசுவுடன், எருசலேமில் விரைவில் நிகழவிருந்த அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து பேசினர். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது”, என்றான்.

மத்தேயு 17:3–4; லூக்கா 9:30–33 (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பு 31 ஐப் பாக்கவும்a)

இயேசுவும் மற்றவர்களும் தேவனுடைய குரலைக் கேட்டல்.

பேதுரு பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்”, என்ற தேவனின் சத்தத்தை அவர்கள் கேட்டனர் பேதுருவும் யாக்கோபும் யோவானும் பயந்து முகங்குப்புற விழுந்தார்கள்.

மத்தேயு 17:5–6

பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானுடன் பயப்படாதிருக்கும்படி இயேசு கூறுதல்.

இயேசு தம் சீஷர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள்”, என்றார். அவர்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார்கள். மோசேயும் எலியாவும் அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். இந்த மலையில்தான், இயேசு வாக்குத்தத்தம் செய்த ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களை பேதுருவும் யாக்கோபும் யோவானும் பெற்றுக்கொண்டனர்.

மத்தேயு 17:7–9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:112–13 ஐயும் பார்க்கவும்.