2020–2024
தேவனின் குமாரர்களும் குமாரத்திகளும்
அக்டோபர் 2024 பொது மாநாடு


9:57

தேவனின் குமாரர்களும் குமாரத்திகளும்

நாம் யாவரும் மெய்யாகவே தேவனின் பிள்ளைகள் என்றும், அதனிமித்தம் அவரை போலாக நாம் திறன் கொண்டிருக்கிறோம் என்றும் சத்தியமாய் நம்புகிறோம்.

இன்று, தேவன் வெளிப்படுத்திய மிகவும் மகிழ்ச்சியானதும், மகிமையானதும், வல்லமையானதுமான சுவிசேஷ சத்தியங்களில் ஒன்றைப்பற்றி நான் பேச விரும்புகிறேன். அதே சமயம், நாம் இதனால் விமர்சிக்கப்படுவது முரண்பாடாய் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம், இந்த குறிப்பிட்ட சுவிசேஷ சத்தியத்திற்கான எனது பாராட்டுகளை ஆழப்படுத்தியது.

சபையின் பிரதிநிதியாக, நான் ஒரு சமய மாநாட்டிற்கு அழைக்கப்பட்டேன், அத்தருணம் முதற்கொண்டு அவர்கள் ஏறக்குறைய எல்லா சபைகளிலும் கொடுக்கிற ஞானஸ்தானம், தண்ணீராலும், பிதா, குமரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலும் வழங்கும் பட்சத்தில் அந்நியமத்தை செல்லுபடியாகத்தக்கதாய் அங்கீகரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் வழங்கப்படும் ஞானஸ்நானங்களுக்கு இக்கொள்கை பொருந்தாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

மாநாட்டிற்குப் பிறகு, அந்த விதிவிலக்கான காரணங்களை நான் அறிவிப்புக்கு பொறுப்பான தலைவருடன் ஆழமாக ஆராய முடிந்தது. நாங்கள் ஒரு அற்புதமான மற்றும் உள்ளுணர்வுடைய உரையாடலை நடத்தினோம்.

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், மற்ற கிறிஸ்தவ பிரிவினரால் பெரும்பாலும் திரித்துவம் என்று குறிப்பிடுகிற தேவத்துவம் பற்றியதான நம்முடைய குறிப்பிட்ட நம்பிக்கைகளினிமித்தமே இந்த விதிவிலக்கு முக்கியமாக வழங்கப்பட்டது என்று அவர் விளக்கினார். அவருடைய நம்பிக்கைகள் மற்றும் அவருடைய சபையின் கொள்கைகளை எனக்கு விளக்குவதற்கு அவர் நேரம் ஒதுக்கியதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன். எங்கள் உரையாடலின் முடிவில், நாங்கள் கட்டிப்பிடித்துவிட்டு விடைபெற்றோம்.

எங்கள் கலந்துரையாடலைப்பற்றி நான் பின்னர் யோசித்தபோது, ​​“திரித்துவத்தின் மர்மம்“ என்று அவர் அழைத்ததைப் பிற்காலப் பரிசுத்தவான்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதைப் பற்றி இந்த நண்பர் சொன்னது என் மனதைக் கனக்கச் செய்தது. அவர் எதைக் குறிப்பிடுகிறார்? சரி, அது தேவனின் இயல்பைப் பற்றிய நமது புரிதலுடன் தொடர்புடையது. பிதாவாகிய தேவன் “மனிதனைப் போலவே தொட்டுணரக்கூடிய சதை மற்றும் எலும்புகளுடன்” மகிமைப்படுத்தப்பட்ட “ஒரு மேன்மையடைந்த மனிதர்” என்று நாம் நம்புகிறோம்; [மற்றும்] “குமாரனும் கூட.” இவ்வாறு, ஒவ்வொரு முறையும் நாம் தேவனின் சுபாவத்தைப் பற்றிப் பேசும்போது, ஏதோ ஒரு வகையில் நாம் நமது சொந்த சுபாவத்தைப் பற்றிப் பேசுகிறோம்.

“[அவரது] சாயலாகவும் [அவரது] ரூபத்தின்படியேயும்” நாம் அனைவரும் படைக்கப்பட்டதால் மட்டும் இது உண்மையாகவில்லை, ஆனால் சங்கீதக்காரன் பதிவு செய்தபடி, தேவன் சொன்னார், “நீங்கள் தேவர்கள், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் பிள்ளைகள்.” இது நமக்கு இப்போது மறுஸ்தாபிதத்தின் வருகையுடன் திரும்ப பெறப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற கோட்பாடாகும். சுருக்கமாக, இது நமது ஊழியக்காரர்கள் முதல் பாடமாக, முதல் பத்தியாக, முதல் வரியாக கற்பிப்பதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லை: “தேவன் நமது பரலோக பிதா, நாம் அவரது பிள்ளைகள்.”

இப்போது, “நாம் தேவனின் பிள்ளைகள் என்று பலர் நம்புகிறார்கள்” என்று நீங்கள் கூறலாம். ஆம், அது உண்மைதான், ஆனால் அவர்களின் புரிதல் நாம் உறுதிப்படுத்தும் அதன் ஆழமான அர்த்தத்தின் உட்பொருளிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம். பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு, இந்த போதனை உருவகம் அல்ல. மாறாக, எல்லா மக்களும் உண்மையில் தேவனின் குழந்தைகள் என்று நாம் உண்மையிலேயே நம்புகிறோம். அவர் “[நம்] ஆவிகளின் பிதா,”6 அதனால், நாம் அவரைப் போல் ஆகக்கூடிய சாத்தியம் உள்ளது, இது சிலருக்கு நினைத்துப் பார்க்க முடியாததாகத் தெரிகிறது.

முதல் தரிசனம் மறுஸ்தாபிதத்துக்கான கதவுகளைத் திறந்து இப்போது 200 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அந்த நேரத்தில், இளம் ஜோசப் ஸ்மித் எந்த சபையில் சேர வேண்டும் என்பதை அறிய பரலோகத்திலிருந்து வழிகாட்டுதலை நாடினார். அன்று அவருக்குக் கிடைத்த வெளிப்பாட்டின் மூலமாகவும், மற்றும் பிற்காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளின் மூலமாகவும், தீர்க்கதரிசி ஜோசப் தேவனின் இயல்பு மற்றும் அவருடைய குழந்தைகளாகிய நமக்கு அவருடன் உள்ள உறவைப் பற்றிய அறிவைப் பெற்றார்.

அதன் காரணமாக, நம்முடைய பரலோக பிதா இந்த விலைமதிப்பற்ற கோட்பாட்டை ஆரம்பத்திலிருந்தே போதித்தார் என்பதை நாம் இன்னும் தெளிவாகக் கற்றுக்கொள்கிறோம். இதை விளக்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு குறிப்புகளை வேதத்திலிருந்து மேற்கோள் காட்ட என்னை அனுமதிக்கவும்.

விலையேறப் பெற்ற முத்து புஸ்தகத்தில் மோசேக்கு தேவன் கொடுத்த அறிவுரைகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

“இதோ, நானே சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், அந்தமில்லாதவரென்பது என்னுடைய நாமம்; எனச்சொல்லி தேவன் மோசேயிடம் பேசினார்,“ என நாம் வாசிக்கிறோம். வேறு வார்த்தைகளில் எனில், மோசே, நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அவர் சொன்னார், “இதோ, நீ என்னுடைய குமாரன்.” பின்பு அவர் சொன்னார், “என்னுடைய குமாரனாகிய மோசே”“, நான் உனக்கு ஒரு வேலையை வைத்திருக்கிறேன்; நீ என்னுடைய ஒரேபேறானவரின் சாயலிலிருக்கிறாய்.” இறுதியாக, அவர் முடித்தார், “என்னுடைய குமாரனாகிய மோசே”“, உனக்கு இந்த ஒரு காரியத்தை நான் காட்டுகிறேன்.

குறைந்தபட்சம் இந்த ஒரு சத்தியத்தையாவது மோசேக்குக் கற்பிக்க தேவன் உறுதியாக இருந்ததாகத் தோன்றுகிறது: “நீ என் குமாரன்,” அதை அவர் மூன்று முறையாவது திரும்பத் திரும்பச் சொன்னார். அவர் தனது மகன் என்று உடனடியாகச் சேர்க்காமல் மோசேயின் பெயரைக் கூட அவரால் குறிப்பிட முடியவில்லை.

இருப்பினும், மோசே தனியாக விடப்பட்ட பிறகு, அவன் தேவ சமுகத்தில் இல்லாததால் அவன் பலவீனமாக உணர்ந்தான். அப்போதுதான் சாத்தான் அவனைச் சோதிக்க வந்தான். இங்கே ஒரு மாதிரியைப் பார்க்க முடிகிறதா? அவன் மோசேயிடம் சொன்ன முதல் விஷயம், “மோசே, மனுஷகுமாரனே, என்னைத் தொழுதுகொள்.”

இச்சூழலில், சாத்தானை வணங்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு கவனச்சிதறலுக்காக இருந்திருக்கலாம். அந்த பலவீனமான தருணத்தில் மோசேக்கு ஒரு குறிப்பிடத்தக்க சோதனை என்னவெனில், குழப்பமடைந்து தான் தேவனின் பிள்ளை அல்ல, அதற்கு மாறாக “மனுஷகுமாரன்” மட்டுமே என்பதில் நம்பிக்கை கொள்வதாய் இருந்தது.

“மோசே சாத்தானை நோக்கிப்பார்த்துச் சொன்னான்: நீ யார்?” ஏனெனில் இதோ, அவருடைய ஒரேபேறானவரின் சாயலில் இருக்கிற நான் தேவனுடைய குமாரன்.” அதிர்ஷ்டவசமாக, மோசே குழப்பமடையவில்லை மற்றும் தன்னை திசைதிருப்ப அனுமதிக்கவில்லை. அவன் உண்மையில் யார் என்று பாடம் கற்றுக்கொண்டான்.

அடுத்த விவரம் மத்தேயு 4 இல் காணப்படுகிறது கர்த்தர் மூன்று முறை மட்டுமே சோதிக்கப்பட்டார் என்பது போல, அறிஞர்கள் இதற்கு “இயேசுவின் மூன்று சோதனைகள்” என்று தலைப்பிட்டுள்ளனர். அது அப்படி அல்லவே.

இந்த சோதனைகளின் பொருளையும் உள்ளடக்கத்தையும் விளக்க நூற்றுக்கணக்கான கேலன் மை பயன்படுத்தப்பட்டுள்ளது. நாம் அறிந்தபடி, இயேசு வனாந்தரத்திற்குச் சென்றதை விளக்குவதன் மூலம் அதிகாரம் தொடங்குகிறது, “அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.”

சாத்தானின் முதல் சோதனையானது கர்த்தரின் சரீர தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமே தொடர்புடையதாக இருந்தது. “இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்று இரட்சகருக்கு சவால் விட்டான்.

இரண்டாவது தூண்டுதல் தேவனைச் சோதிப்பதோடு தொடர்புடையது: “நீர் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்பதாய் எழுதியிருக்கிறது.”

இறுதியாக, சாத்தானின் மூன்றாவது சோதனையானது உலகின் அபிலாஷைகளையும் மகிமையையும் குறித்தது. பின்பு இயேசுவுக்கு, “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று [சாத்தான்] சொன்னான்.”

உண்மையில், சாத்தானின் இறுதி சோதனையானது அந்த மூன்று குறிப்பிட்ட ஆத்திரமூட்டல்களுடன் குறைவாகவும், இயேசு கிறிஸ்துவின் தெய்வீக இயல்பைக் கேள்வி கேட்கும்படி அவரைத் தூண்டியதாகவும் இருக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு முறை, சாத்தானின் தூண்டுதலுக்கு முன்னதாக: “நீர் தேவனுடைய குமாரனேயானால்”, நீர் உண்மையிலேயே நம்பினால், இதையோ அல்லது அதையோ செய்யும்.என்ற சவாலான குற்றச்சாட்டு வந்தது.

இயேசு உபவாசம் மற்றும் ஜெபம் செய்ய வனாந்தரத்திற்குச் செல்வதற்கு முன் உடனடியாக என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்: நாம் கிறிஸ்துவின் ஞானஸ்நானம் பற்றிய விவரத்தைக் காண்கிறோம். அவர் தண்ணீரிலிருந்து வெளியே வந்ததும், “வானத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது:இவர் என்னுடைய நேசகுமாரன்,, இவரில் பிரியமாயிருக்கிறேன்”என்று.

இணைப்பைப் பார்க்கிறோமா? ஒரு மாதிரியை நாம் அடையாளம் காணமுடிகிறதா?

ஒவ்வொரு முறையும் நமது தெய்வீக இயல்பு மற்றும் இலக்கைப் பற்றி கற்பிக்கப்படும்போது, ​​எல்லா நீதியின் சத்துருவும் அவர்களை கேள்விக்குள்ளாக்க நம்மைத் தூண்டுவதில் ஆச்சரியமில்லை.

நாம் உண்மையில் யார் என்று தெரிந்தால், நமது முடிவுகள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்.

நாம் ஒரு சவாலான உலகில் அதிகரித்து வரும் கலவர உலகில் வாழ்கிறோம், மரியாதைக்குரியவர்கள் குறைந்தபட்சம் நமது மனித கண்ணியத்தை வலியுறுத்த முயற்சி செய்கிறார்கள், அதே சமயம் நாம் ஒரு சபையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு சுவிசேஷத்தைத் தழுவி நமது பார்வையை உயர்த்தி, அது நம்மை தெய்வீகத்திற்கு அழைக்கிறது.

“பரலோகத்திலிருக்கிற [நமது] பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்க”, இயேசுவின் கட்டளை, அவரது உயர்ந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நமது நித்திய சாத்தியக்கூறுகளின் தெளிவான பிரதிபலிப்பாகும். இப்பொழுது, இவை எதுவும் ஒரே நாளில் நடக்காது. தலைவர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் வார்த்தைகளில், அது “முடிவாய்” நடக்கும். ஆனால் நாம் “கிறிஸ்துவினிடத்தில் வந்தால் ” நாம் “அவரில் பூரணப்படுத்தப்படுவோம்” என்பது வாக்குறுதி. அதற்கு நிறைய வேலை தேவைப்படுகிறது—எந்த வேலையும் என்பது அல்ல, ஆனால் ஒரு தெய்வீக பணி. அவரது பணி!

இப்போது,​ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பரலோகத்திலுள்ள நமது பிதா: “ஏனெனில் இதோ, மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது.” என்று மிகச் சரியாக சொன்னதுதான்.

தலைவர் ரசல் எம். நெல்சனின் அழைப்பு “சிலஸ்டியலாக சிந்தியுங்கள்,” என்பது நமது தெய்வீக சுபாவம், தோற்றம் மற்றும் சாத்தியமான இலக்கு பற்றிய அற்புதமான நினைவூட்டலைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் மூலம் மட்டுமே நாம் சிலஸ்டியலைப் பெற முடியும்.

ஒருவேளை அதனால்தான் சாத்தான் இயேசுவின் பூலோக ஊழியத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதே சோதனையால் அவரைத் தூண்டினான். இயேசு சிலுவையில் தொங்கியபோது மத்தேயு பதிவு செய்தான், “அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைக் குலுக்கி: நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்றார்கள். தேவனுக்கு மகிமையுண்டாக, அவர் செவிசாய்க்கவில்லை, மாறாக எல்லா சிலஸ்டியல் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு வழியை வழங்கினார்.

எப்போதும் நினைவில் கொள்வோமாக, நம் மகிழ்ச்சிக்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது.

அப்போஸ்தலனாகிய பவுலைப் போலவே நான் சாட்சியளிக்கிறேன்,“நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.