“இதோ, நானே நீங்கள் உயரப்பிடிக்க வேண்டிய வெளிச்சமாயிருக்கிறேன்.”
நம்முடைய உடன்படிக்கைகளை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போதும், நம்முடைய ஜீவிக்கும் தீர்க்கதரிசிக்கு ஆதரவளிக்கும் போதும் நாம் கர்த்தருடைய ஒளியை உயர்த்திப் பிடிக்கிறோம்.
இந்த மாநாட்டின் பல சாட்சியங்களுடன், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன், நம்முடைய கர்த்தர் மற்றும் இரட்சகர், நம் பிதாவின் பிள்ளைகள் அனைவரையும் மீட்பவர் என்பதற்கு எனது அப்போஸ்தல சாட்சியைச் சேர்க்கிறேன். இயேசு கிறிஸ்து தம்முடைய பாவநிவர்த்தி மூலம், நாம் தகுதியானவர்களாக இருந்தால், பரலோகத்தில் உள்ள நம் பிதாவின் பிரசன்னத்திற்குத் திரும்பவும், நித்தியமாக நம் குடும்பங்களுடன் இருப்பதையும் சாத்தியமாக்கினார்.
இரட்சகர் நமது பூலோகப் பயணங்களில் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக நாம் அவருடன் நெருங்கி வருமாறு அவர் தெரிந்துகொண்ட தலைவர்கள் மூலம் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். மீண்டும் மீண்டும், அவரது தூய அன்புடனும் இரக்கத்துடனும், வாழ்க்கையின் நாடகத்தை நாம் எதிர்கொள்ளும்போது அவர் நம்மை ஆதரிக்கிறார். நேபி விவரிக்கிறான், “என் தேவன் எனக்கு ஆதரவாய் இருந்திருக்கிறார்; அவர் என் உபத்திரவங்களினூடாக என்னை வழிநடத்தினார். … அவர் என்னைத் தம்முடைய அன்பினால் நிரப்பினார்.”
அவருடைய பணியில் நாம் ஒருவரையொருவர் ஆதரிக்கும்போது அந்த அன்பு வெளிப்படுகிறது.
பொது மாநாட்டில் நமது ஜீவிக்கும் தீர்க்கதரிசி, பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர்கள் குழுமம், பொது அதிகாரிகள் மற்றும் சபையின் அலுவலர்களை நாம் ஆதரிக்கிறோம். ஆதரிப்பது என்பது மற்றொரு நபரைத் தாங்குவது, அவர்களுக்கு நம் கவனத்தைக் கொடுப்பது, அவர்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பது, அவர்களின் வார்த்தைகளின்படி செயல்படுவது ஆகும். அவர்கள் கர்த்தரின் உணர்த்துதலால் பேசுகிறார்கள்; தற்போதைய பிரச்சினைகள், சமூகத்தின் ஒழுக்க வீழ்ச்சி மற்றும் பிதாவின் திட்டத்தை முறியடிக்க சத்துருவின் அதிகரித்து வரும் முயற்சிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நமது கைகளை உயரப்பிடிப்பதில், அந்த தருணத்திற்கு மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்விலும் நாம் நமது ஆதரவைச் செய்கிறோம்.
ஆதரித்தலில் நமது பிணையத் தலைவர்கள் மற்றும் ஆயர்கள், குழுமம் மற்றும் அமைப்பின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நமது தொகுதிகள் மற்றும் பிணையங்களில் முகாம் இயக்குநர்கள் ஆகியோரை உயரப் பிடித்தல் அடங்கும். வீட்டில், நாம் நமது மனைவிகள் மற்றும் கணவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், பிற குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரை உயரப்பிடிக்கிறோம். நாம் ஒருவரையொருவர் உயரப்பிடிக்கும்போது, “நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன், உங்கள் புயங்கள் மற்றும் கைகள் ‘கீழே தொங்கும்‘ போது அவற்றை உயர்த்திப்பிடிப்பதற்கு மட்டுமல்ல, உங்கள் பக்கத்தில் ஆறுதலாகவும் பலமாகவும் இருக்க வேண்டும்“ என்று கூறுகிறோம்.
உயரப்பிடித்தல் என்ற கருத்து வேதத்தில் வேரூன்றியுள்ளது. மார்மன் தண்ணீர்களில் புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் ஒப்புக்கொடுத்தனர், “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, லகுவாக்க மனமுடையவர்களாகவும், … ஆறுதலற்று நிற்போருக்கு ஆறுதலளிக்கவும், சதா காலங்களிலும் எல்லாவற்றிலும், … எல்லா இடங்களிலும் தேவனுக்கு சாட்சிகளாய் நிற்கவும்.”
நேபியர்களிடம் இயேசு கூறினார்:“உங்களுடைய வெளிச்சம் உலகத்திற்குப் பிரகாசிக்கும்படி, உயரப்பிடியுங்கள். நானே நீங்கள் உயரப்பிடிக்க வேண்டிய வெளிச்சமாயிருக்கிறேன். நம்முடைய உடன்படிக்கைகளை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போதும், நம்முடைய ஜீவனுள்ள தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளைப் பேசும்போது அவருக்கு ஆதரவளிக்கும் போதும் நாம் கர்த்தருடைய ஒளியை உயரப் பிடிக்கிறோம்.
தலைவர் ரசல் எம். நெல்சன், பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தில் பணியாற்றும் போது, “நம் தீர்க்கதரிசிகளை ஆதரிப்பதென்பது அவர்களின் தீர்க்கதரிசன முன்னுரிமைகளை உயரப் பிடிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்ற நம்முடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பாகும் என்றார்.
தீர்க்கதரிசியை உயரப்பிடிப்பது ஒரு பரிசுத்த பணி. நாம் அமைதியாக உட்கார்ந்து விடாமல், தீவிரமாக அவரைப் பாதுகாக்கிறோம், அவருடைய ஆலோசனையைப் பின்பற்றுகிறோம், அவருடைய வார்த்தைகளைக் கற்பிக்கிறோம், அவருக்காக ஜெபிக்கிறோம்.
மார்மன் புஸ்தகத்தில் பென்யமின் ராஜா, மக்களை நோக்கி, “நானும் உங்களைப்போல சரீரத்திலும், மனதிலும் சகல வித பெலவீனங்களுக்கும் உட்பட்டவனாய் இருந்தும், இந்த ஜனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு … கர்த்தரின் கரத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்குக் கர்த்தர் அருளிய சகல ஊக்கத்தோடும், மனதோடும் பெலத்தோடும் உங்களுக்கு சேவை செய்ய அவருடைய இணையற்ற வல்லமையினால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறேன்.
அதேபோல், 100 வயதில், தலைவர் நெல்சன் கர்த்தரால் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார். தலைவர் ஹரோல்ட் பி. லீ, அந்த நேரத்தில் பிரதான தலைமையின் உறுப்பினராக இருந்தார், ரெவிதீமில் உள்ள மலையின் மேல் மோசே நிற்பதை உதாரணமாகக் குறிப்பிட்டார். “[சபையின் தலைவரின்] கைகள் சோர்வடையக்கூடும்,” என்று அவர் கூறினார். “அவருடைய கனமான பொறுப்புகள் காரணமாக அவைகள் சில சமயங்களில் துவண்டு போகலாம்; ஆனால் நாம் அவருடைய கைகளைத் தாங்கி, அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அவர் பக்கமாகச் செல்லும்போது, நரகத்தின் வாயில்கள் உங்களுக்கு எதிராகவும் இஸ்ரவேலுக்கு எதிராகவும் வெற்றிபெறாது. உங்கள் பாதுகாப்பும் எங்களுடைய பாதுகாப்பும், கர்த்தர் தம்முடைய சபைக்கு தலைமைதாங்க வைத்தவர்களை நாம் பின்பற்றுகிறோமா இல்லையா என்பதைப் பொறுத்தது. அவர் யார் இந்த சபைக்கு தலைமை தாங்க விரும்புகிறார் என்பது அவருக்குத் தெரியும், அவர் எந்த தவறும் செய்ய மாட்டார்.”
தலைவர் நெல்சன் பல ஆண்டுகள் கர்த்தருக்குச் சேவை செய்வதுபற்றி பேசுகிறார். அவருடைய முதிர்ச்சி, பரந்த அனுபவம், ஞானம் மற்றும் வெளிப்பாட்டை தொடர்ந்து பெறுதல் ஆகியவை நமது நாளுக்கு மிகவும் பொருத்தமானவை. அவர் கூறினார்: “கர்த்தர் பற்றிய அறிவால் பூமி நிறைந்திருக்கும் நாளுக்காக பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை உலகைத் தயார்படுத்துகிறது’ (ஏசாயா 11:9). …… இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு தெய்வீக அறிவிப்பால் இந்த பணி வலுவடைகிறது. இது ஏழு வார்த்தைகளை மட்டுமே கொண்டிருந்தது: ‘இவர் என் நேச குமாரன். அவருக்குச் செவிகொடுங்கள்!’ ( ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17) பார்க்கவும்.”
தலைவர் நெல்சன் மேலும் கூறினார்: “உலக வரலாற்றில் நம் இரட்சகரைப்பற்றிய அறிவு, தனிப்பட்ட முறையில் அதிக முக்கியமானதாக, ஒவ்வொரு மனித ஆத்துமாவுக்கும் பொருத்தமான ஒரு காலமும் ஒருபோதும் இருந்ததில்லை.” நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும், அவருடைய போதனைகளுக்குச் செவிகொடுக்கவும் தீர்மானித்தால் உலகெங்கிலும் உள்ள அழிவுக்கேதுவான மோதல்களும் நமது தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ளவைகளும் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்.”
சகோதர சகோதரிகளே, நாம் அதிக உயர்த்துதல் மற்றும் குறைந்த முணுமுணுப்பைச் செய்ய வேண்டும், கர்த்தருடைய வார்த்தையையும், அவருடைய வழிகளையும், அவருடைய தீர்க்கதரிசியையும் அதிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: “இன்று நமக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, தேவனின் சத்தியங்களையும் சாத்தானின் போலிகளையும் வேறுபடுத்துவதுதான். அதனால்தான் கர்த்தர் “[நாம்] சாத்தானை வெல்லவும், … [சத்துருவின்] வேலையை ஆதரிக்கும் சாத்தானின் ஊழியர்களின் கைகளிலிருந்து தப்பிக்கவும் [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:5; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது].நம்மை ‘எப்போதும் ஜெபியுங்கள்,” என எச்சரித்தார்,
கடந்த ஏப்ரலில், மான்டி யூட்டா ஆலய மறுபிரதிஷ்டைக்கு நமது அன்பிற்குரிய தீர்க்கதரிசி மற்றும் சகோதரி நெல்சனுடன் இணைந்ததில் எனக்கும் சகோதரி ராஸ்பாண்டுக்கும் பெருமை கிடைத்தது.
தலைவர் நெல்சன் அறைக்குள் நுழைந்ததும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் வருவது எங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவர் முன்னிலையில், அவர் பெற்றிருக்கும் ஒளி மற்றும் தீர்க்கதரிசன பொறுப்பை நான் உடனடியாக உணர்ந்தேன். தீர்க்கதரிசியை நேரில் பார்த்த மக்கள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.
மறுபிரதிஷ்டையின் ஜெபத்தில், தலைவர் நெல்சன் கர்த்தரிடம் மன்றாடினார், அவருடைய பரிசுத்த வீடாகிய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் உயரப் பிடித்து “அவர்கள் பரிசுத்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும், அவர்களின் உடன்படிக்கைகளுக்கு தகுதியுடனும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் … இது சமாதானத்தின் வீடாக, இந்த வாசலினுள் நுழையும் அனைவருக்கும் ஆறுதலின் வீடு மற்றும் தனிப்பட்ட வெளிப்பாட்டின் வீடாக இருப்பதற்காவும்.”
உலகத்தை சூழ்ந்துள்ள அச்சம், இருள் மற்றும் பிணக்குகளை எதிர்கொள்ள நாம் அனைவரும் சமாதானம், ஆறுதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தனிப்பட்ட வெளிப்பாட்டுடன் கர்த்தரால் உயர்த்தப்பட வேண்டும்.
ஆராதனைக்கு முன், நாங்கள் தலைவர் மற்றும் சகோதரி நெல்சனுடன் அழகான அமைப்பைக் காண வெளியில் வெயிலில் நின்றிருந்தோம். இப்பகுதியில் தலைவர் நெல்சனின் மூதாதையர் உறவுகள் ஆழமானவை. அவருடைய எட்டு தாத்தா பாட்டிகளும், என்னுடைய சிலரைப் போலவே ஆலயத்தைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் குடியேறினர். எனது கொள்ளுத் தாத்தா ஆண்ட்ரூ ஆண்டர்சன், ராக்கி மவுண்டன்களில் மூன்றாவது ஆலயத்தைக் கட்டி முடிக்க 11 ஆண்டுகள் உழைத்த ஆரம்பகால முன்னோடிகளின் கட்டுமானக் குழுவில் பணியாற்றினார்.
தலைவர் நெல்சனுடன் நாங்கள் நின்றபோது, கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தின் மறுபிரதிஷ்டையின் கொண்டாட்டத்தில் தேவனின் தீர்க்கதரிசியை உயரப்பிடித்து ஆதரிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அது என்னால் மறக்க முடியாத நாள்.
“நாம் கர்த்தரைப் போற்றுவதற்காக ஆலயங்களைக் கட்டுகிறோம்,” என்று அந்த பரிசுத்த நாளில் தலைவர் நெல்சன் கூறினார். “அவை ஆராதனைக்காக கட்டப்பட்டவை, காட்சிக்காக அல்ல. இந்தப் பரிசுத்த சுவர்களுக்குள் நித்திய முக்கியத்துவம் வாய்ந்த பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்கிறோம்.” நாம் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்கிறோம்.
தலைவர் நெல்சன் மற்றும் அவருக்கு முன் இருந்த தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆலயங்களை தங்கள் கரங்களில் தொட்டில் போலத் தாங்கியுள்ளனர். இன்று, உலகம் முழுவதும், நம்மிடம் 350 கர்த்தரின் பரிசுத்த வீடுகள் செயல்படுகின்றன, அறிவிக்கப்பட்டுள்ளன, அல்லது கட்டுமானத்தில் உள்ளன. தீர்க்கதரிசியாக, 2018 முதல், தலைவர் நெல்சன் 168 ஆலயங்களை அறிவித்துள்ளார்.
“நம் காலத்தில், அனைத்து ஊழியக்காலங்கள், திறவுகோல்கள் மற்றும் வல்லமைகளின் முழுமையான, முற்றிலுமான மற்றும் பரிபூரணமான இணைப்பு ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்” என அவர் சொன்னார்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:18பார்க்கவும்). இந்த பரிசுத்த நோக்கங்களுக்காக, பரிசுத்த ஆலயங்கள் இப்போது பூமியில் உள்ளன. இந்த ஆலயங்களைக் கட்டுவது உங்கள் வாழ்க்கையை மாற்றாது, ஆனால் ஆலயத்தில் உங்கள் சேவை நிச்சயம் மாற்றும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.”
“இரட்சகரும் அவருடைய கோட்பாடும் ஆலயத்தின் மையம்” என்று தலைவர் கூறுகிறார். அறிவுறுத்தலின் மூலமும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் ஆலயத்தில் கற்பிக்கப்பட்ட யாவும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கிறது. பரிசுத்த ஆசாரியத்துவ உடன்படிக்கைகள் மூலமாக அவருடைய அத்தியாவசியமான நியமங்கள் அவருடன் நம்மைக் கட்டுகிறது. பின்னர், நமது உடன்படிக்கைகளை நாம் கைக்கொள்ளும்போது, அவருடைய சுகப்படுத்தலுடனும் பலப்படுத்தும் வல்லமையுடனும் அவர் நம்மை தரிப்பிக்கிறார்.”
“ஆலயத்தில் ஆராதிக்கும் அனைவருக்கும் தேவன் மற்றும் தூதர்கள் ‘அவர்கள்மீது பொறுப்பேற்கும்‘ வல்லமையைப் பெற்றிருப்பார்கள் என்று தலைவர் நெல்சன் கூறினார். [கோட்பாடும் உடன்படிக்கைகளும்109:22]. தேவனின் வல்லமையைக் கொண்ட தரிப்பிக்கப்பட்ட ஒரு பெண் அல்லது ஆணாக [அல்லது ஆலயத்திற்கு வருகை புரியும் இளைஞராக,] நீங்கள் தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை அறிவது உங்கள் நம்பிக்கையை எந்தளவுக்கு அதிகரிக்கிறது? தூதர்கள் உண்மையில் உங்களுக்கு உதவுவார்கள் என்பதை அறிவது உங்களுக்கு என்ன தைரியத்தை அளிக்கிறது?”
இயேசு கிறிஸ்து கெத்செமனே தோட்டத்தில் தாழ்மையுடன் மண்டியிட்டபோது, தூதர்கள் உயரப்பிடிக்க முற்படுவது வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது துன்பத்தால் அவர் எல்லையற்ற பாவநிவர்த்தியை வழங்கினார். தலைவர் நெல்சன் கூறுகிறார், “அங்கே, பதிவுசெய்யப்பட்ட அனைத்து வரலாற்றிலும் மிகப்பெரிய அன்பின் செயல் நடந்தது. … அங்கே கெத்செமனேயில், கர்த்தர் ‘எல்லோரும்… மனந்திரும்பி தம்மிடம் வரும்படி, எல்லா மனிதர்களின் வேதனையையும் அனுபவித்தார்.’ [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:11].”
இயேசு கிறிஸ்து கேட்டார், “உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.”
“அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.”
இன்று நம்மைச் சுற்றி தூதர்கள் இருக்கிறார்கள். தலைவர் நெல்சன் கூறினார், “[ஆலயத்தில்,] பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள திரையை எவ்வாறு பிரிப்பது, தேவனின் தூதர்கள் உங்களிடம் வருமாறு கேட்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.”
தூதர்கள் ஒளியைக் கொண்டுவருகிறார்கள். தேவனின் ஒளி. தம்முடைய நேபிய அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்னார், “நானே நீங்கள் உயரப்பிடிக்க வேண்டிய வெளிச்சமாயிருக்கிறேன்.” நம்முடைய தீர்க்கதரிசியை நாம் ஆதரிக்கும்போது, அவர் “உலகின் ஒளியாக” இருக்கும் நம் இரட்சகரால் அழைக்கப்படுகிறார் என்று சாட்சி கூறுகிறோம்.
தலைவர் நெல்சன், கர்த்தரின் சபையின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பாக, உங்கள் போதனைகளை உயரப் பிடிப்பதற்கும், கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையின் உங்கள் முன்மாதிரியை உயரப் பிடிப்பதற்கும், நம் கர்த்தரும் இரட்சகருமாகிய மீட்பருக்கும் உங்களின் உருக்கமான சாட்சியை உயரப் பிடிப்பதற்கும் நாம் பாக்கியவான்களாக உணர்கிறோம்.
இயேசு கிறிஸ்து “உலகின் …ஒளியாயிருக்கிறார்” என்று எனது அப்போஸ்தல சாட்சி அளிக்கிறேன். அவருடைய சீஷர்களாகிய நாம் அனைவரும் அவருடைய ஒளியை “உயரப்பிடிப்போம்.” இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.