தேவனுக்கு விருப்பமானவர்
தேவனின் அன்பால் நிரப்பப்படுவது வாழ்க்கையின் புயல்களில் நம்மைப் பாதுகாக்கிறது, மேலும் மகிழ்ச்சியான தருணங்களையும் மிக மகிழச்சியானதாக மாற்றுகின்றது.
நான் தொடங்குவதற்கு முன்பு, எனது இரண்டு பிள்ளைகள் பிரசங்க மேடைகளில் பேசும்போது பயத்தால் மயங்கி விழுந்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், இந்நேரம் நான் உணர்கிற அவர்களுடனான இணைப்பை இந்த அளவில் வேறு ஒருபோதும் நான் உணர்ந்தது இல்லை. பொறி கதவில் சிக்கியதைவிட அதிகமான மனநிலையில் உள்ளேன்.
எங்கள் குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் உள்ளனர், அவர்கள் சில நேரங்களில் தானே விரும்பப்படுகிற பிள்ளை என்று ஒருவருக்கொருவர் சீண்டிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் விரும்பப்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. நம் பிள்ளைகள் ஒவ்வொருவர் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பு தூய்மையானது, நிறைவானது, முழுமையானது. அவர்களில் ஒருவரை மற்றொருவரை விட அதிகமாக எங்களால் நேசிக்க முடியவில்லை—ஒவ்வொரு குழந்தையின் பிறப்புடனும் மிக அழகாக எங்கள் அன்பும் பெருகி வந்தது. என் பிள்ளைகள் மீது நான் உணரும் அன்பின் மூலம் என் பரலோக பிதா என் மீது கொண்டுள்ள அன்பை என்னால் மிகவும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.
அவர்கள் ஒவ்வொருவரும் தானே மிகவும் விரும்பப்படுகிற பிள்ளை என்று தங்கள் கூற்றுக்களை முன்வைக்கும்போது, எங்கள் குடும்பத்தில் ஒருபோதும் அலங்கோலமான படுக்கையறை இருந்ததில்லை என்று நீங்கள் நினைத்திருக்கலாம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவில் உள்ள கறைகளின் உணர்வு அன்பின் மீதான கவனத்தினால் குறைகிறது.
ஒரு கட்டத்தில், தவிர்க்க முடியாத குடும்ப கலவரத்தை நோக்கி நாங்கள் செல்கிறோம் என்பதை என்னால் காண முடிந்ததால், “சரி, நீங்கள் என்னை களைப்படைய செய்து விட்டீர்கள், ஆனால் உங்களில் யார் எனக்கு மிகவும் விருப்பமானவர் என்று நான் அறிவிக்கப் போவது இல்லை, அது உங்களுக்கே தெரியும்” என்று நான் சொல்வேன். அறுவரில் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றதாக உணர வேண்டும், முழு அளவிலான போர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள்—குறைந்த பட்சம் அடுத்த முறை வரை!
யோவான் தனது நற்செய்தியில், இது ஒரு தனித்துவமான ஏற்பாடு போன்று தன்னை “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்,” என்று விவரிக்கிறார். யோவான் இயேசுவால் முழுமையாக நேசிக்கப்படுவதாக உணர்ந்ததால் இது நடந்தது என்று நான் நினைக்க விரும்புகிறேன். “என் இயேசுவில் நான் மகிமைப்படுகிறேன்“ என்று நேபி எழுதியபோது அவர் எனக்கு இதே போன்ற உணர்வைக் கொடுத்தார். நிச்சயமாக, இரட்சகர் யோவானுடையவராக இருப்பதை விட அதிகமாக நேபியுடையவர் அல்ல, இருப்பினும் நேபியின் “அவருடைய“ இயேசுவுடனான உறவின் தனிப்பட்ட தன்மை அவரை அந்த மென்மையான விளக்கத்திற்கு வழிநடத்தியது.
நாம் இவ்வளவு முழுமையாகவும் தனிப்பட்ட முறையிலும் கவனிக்கப்படுவதையும் நேசிக்கப்படுவதையும் உணரக்கூடிய நேரங்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? நேபி அவரை “அவரது“ இயேசு என்று அழைக்க முடியும், நாமும் அழைக்க முடியும். நமது இரட்சகரின் அன்பு “மிக உயர்ந்த, உன்னதமான, வல்லமையான அன்பு“ ஆகும், நாம் “திருப்தியடையும்வரை“ அவர் வழங்குகிறார். தெய்வீக அன்பு ஒருபோதும் வறண்டு போகாது, நாம் ஒவ்வொருவரும் நேசத்துக்குரிய விருப்பமானவர்கள். தேவனின் அன்பு, ஒரு வென் வரைபடத்தில் வட்டங்களைப் போல, நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து இருக்கிறோம். நம்மில் எந்தப் பகுதிகள் வித்தியாசமாகத் தோன்றினாலும், நாம் ஒன்றிணைவதைக் காணும் இடத்தில் அவருடைய அன்பு இருக்கிறது.
தேவனை நேசிப்பதும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நேசிப்பதுமே மிகப் பெரிய கட்டளைகள் என்பதில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா? மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவைப் போன்ற அன்பைக் காட்டுவதைப் பார்க்கும்போது, அந்த அன்பு அவர்களின் அன்பை விட அதிகமாக இருப்பதைப் போல நான் உணர்கிறேன்; அன்பிற்கு தெய்வீகத்தன்மையும் உண்டு. இவ்வாறாக நாம் ஒருவரையொருவர் முழுமையாகவும் பரிபூரணமாகவும் நேசிக்கும்போது, பரலோகமும் இதில் ஈடுபடுகிறது.
ஆகையால், நாம் அக்கறை கொண்ட ஒருவர் தெய்வீக அன்பின் உணர்விலிருந்து தொலைவில் இருப்பதாகத் தோன்றினால், இந்த மாதிரியை நாம் பின்பற்றலாம்—நம்மை தேவனிடம் நெருங்கி வரச் செய்யும் காரியங்களை நாம் செய்து, பின்னர் நம்மை அவர்களிடம் நெருக்கமாகக் கொண்டுவரும் காரியங்களைச் செய்ய வேண்டும், —கிறிஸ்துவிடம் வரும்படி சொல்லப்படாத அழைப்பு.
நான் உங்களுடன் உட்கார்ந்து, தேவனின் அன்பை உணர எப்படிப்பட்டச் சூழ்நிலைகள் உங்களுக்கு உதவுகின்றன என்று கேட்க விரும்புகிறேன். எந்த வேத வசனங்கள், எந்த குறிப்பிட்ட சேவையின் செயல்கள்? நீங்கள் எங்கே இருப்பீர்கள்? என்ன இசை? யாருடைய துணையில்? பொது மாநாடு பரலோகத்தின் அன்புடன் இணைவதைப் பற்றி அறிய ஒரு வளமான இடம்.
ஒருவேளை நீங்கள் தேவனின் அன்பிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாக உணர்கிறீர்களா? நீங்கள் பரலோக அன்புக்கு எந்த உண்மையான வழியிலும் உத்தரவாதம் அளிக்க முடியாத அளவுக்கு மிகவும் காயமடைந்துள்ளீர்கள், குழப்பமடைந்துள்ளீர்கள், மிகவும் பலவீனமாகிவிட்டீர்கள் மற்றும் கவனிக்கப்படாமல் நிலைகுலைந்து விட்டீர்கள் மிகவும் வித்தியாசமாக அல்லது திசைதிருப்பப்பட்டுள்ளீர்கள் என்று உங்களுக்குச் சொல்லும் செய்திகள் இருக்கலாம். ஒருவேளை உங்கள் எண்ணங்களை எடைபோடும் ஊக்கமின்மை மற்றும் இருளின் பல குரல்கள் இருக்கலாம். அந்த கருத்துக்களை நீங்கள் கேட்டிருந்தால், தயவுசெய்து இதைக் கேளுங்கள்: அந்தக் குரல்கள் தவறானவை. நாம் பிட்ட அப்பத்தை எடுக்கும் ஒவ்வொரு முறையும் நமது அன்பான மற்றும் அப்பழுக்கற்ற இரட்சகர் “நொறுக்கப்பட்டு, உடைக்கப்பட்டு, [மற்றும்] சிதைக்கப் பட்டார்“ என்ற துதிப்பாடலை நாம் பாடும் ஒவ்வொரு முறையும், பரலோக அன்பிலிருந்து நம்மை தகுதியற்றதாக்கும் எந்த வகையிலும் முறிவை நாம் நம்பிக்கையுடன் புறக்கணிக்க முடியும். நிச்சயமாக இயேசு உடைந்து போனவர்களிடமிருந்து எல்லா அவமானத்தையும் நீக்குகிறார். அவர் நொறுங்குண்டதன் மூலம், அவர் பரிபூரணமானார், நமது நொறுங்குண்ட நிலையிலும் நம்மை அவரால் பரிபூரணமாக்க முடியும். நொறுக்கப்பட்டு, தனிமைப்பட்டு, சிதைக்கப்பட்டு, காயமடைந்து அவர் இருந்தார்—நாமும் அவ்வாறாக இருக்கிறோம் என்று நாம் உணரலாம்—ஆனால் தேவனின் அன்பிலிருந்து பிரிக்கப்பட்டவர்களாக நாம் இல்லை. “உடைந்த மக்கள்; பரிபூரண அன்பு,“ பாடல் அவ்வாறாகச் செல்கிறது
உங்களைப் பற்றிய ரகசியமான ஒன்றை நீங்கள் அறிந்திருக்கலாம், அது உங்களை நேசிக்கத் தகுதியற்றவராக உணர வைக்கும். உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைக் குறித்து நீங்கள் எவ்வளவு சரியாக இருந்தாலும், தேவனின் அன்புக்கு அப்பாற்பட்டவராக உங்களை நீங்களே தள்ளிவிட்டீர்கள் என்று நினைப்பது தவறு. சில நேரங்களில் வேறு எவரிடமும் காட்டிக்கொள்ளும்படி நாம் கற்பனை கூட செய்து பார்த்திராத அளவு கொடூரமாகவும் பொறுமையின்மையுடனும் நம்மிடம் நாமே நடந்து கொள்கிறோம். இந்த வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது, ஆனால் சுய வெறுப்பு மற்றும் வெட்கக்கேடான சுய கண்டனம் அந்தப் பட்டியலில் இல்லை. நாம் எவ்வளவுதான் உடைந்தவர்களாக நாம் உணர்ந்தாலும், அவரது கைகள் குறுகிடவில்லை. இல்லை. அவை எப்போதும் “[நம்மை அடைய] போதுமானதாக இருக்கின்றன“ மற்றும் நம் ஒவ்வொருவரையும் அரவணைக்கின்றன.
தெய்வீக அன்பின் அரவணைப்பை நாம் உணராதபோது, அது விலகிப் போகவில்லை. தேவனுடைய சொந்த வார்த்தைகள் என்னவென்றால், “பர்வதங்கள் விலகும், குன்றுகள் அகற்றப்படும்; ஆனாலும் [அவருடைய] கிருபை [நம்மைவிட்டு] நீங்காது“ எனவே, தெளிவாய் இருக்க, தேவன் அன்பு செலுத்துவதை நிறுத்திவிட்டார், மேலும் பர்வதங்கள் விலகின பின்னரும் குன்றுகள் அகற்றப்பட்ட பிறகும்தான் நாம் அவருடைய கிருபையை அடைய முடியும் என்ற கருத்து வாழ்க்கையில் சாத்தியமான விளக்கங்களின் பட்டியலில் வெகு தொலைவில் இருக்க வேண்டும்
தேவனின் அன்பின் நிச்சயத்தின் சான்றாக மலைகளின் இந்த அடையாளத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். வெளிப்பாடுகளைப் பெற மலைக்குச் செல்பவர்களையும்,“கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்“ “பர்வதங்களின் உச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.“என ஏசாயாவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அந்த ஆற்றல் வாய்ந்த அடையாளம் பின்னுகிறது. கர்த்தரின் வீடு நமது மிக விலையேறப்பெற்ற உடன்படிக்கைகளின் வீடாகும், நாம் அனைவரும் தங்குவதற்கும் நம்மீது நமது பிதாவின் அன்பின் சான்றுகளில் ஆழமாக மூழ்குவதற்குமான இடம். என் ஞானஸ்நான உடன்படிக்கையில் என்னை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டு, இழப்புக்காக அழுது ஏமாற்றத்தை எண்ணி துக்கப்படுகிற ஒருவரைக் கண்டுபிடிக்கும்போதும், அவர்களுடைய உணர்வுகளைப் பொறுத்து அதை முறைப்படுத்த அவர்களுக்கு உதவ முயற்சிக்கும்போதும், என் ஆத்துமாவுக்கு வரும் ஆறுதலையும் நான் அனுபவித்திருக்கிறேன். விலைமதிப்பற்ற உடன்படிக்கை அன்பில் நாம் மேலும் மூழ்கக்கூடிய வழிகள்தானா, ஹெஸெட்?(உண்மையுள்ள அன்பு)
தேவனின் அன்பு நம்மை கைவிடவில்லை என்றால், நாம் ஏன் அதை எப்போதும் உணருவதில்லை? உங்கள் எதிர்பார்ப்புகளை சமாளிப்பதற்காக சொல்கிறேன்: எனக்குத் தெரியாது. ஆனால் நேசிக்கப்படுவதும் நேசிக்கப்படுவதை உணர்வதும் நிச்சயமாக ஒரே விஷயமல்ல, அந்த கேள்விக்கான உங்கள் பதில்களைத் தேடும்போது உங்களுக்கு உதவக்கூடிய சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன.
ஒருவேளை நீங்கள் துக்கம், மனச்சோர்வு, துரோகம், தனிமை, ஏமாற்றம் அல்லது உங்கள் மீதான தேவனின் அன்பை உணரும் உங்கள் திறனில் பிற ஆற்றல் வாய்ந்த ஊடுருவலுடன் போராடுகிறீர்களா? அப்படியானால், இந்த விஷயங்கள் நம்முடைய உணரும் திறனை மந்தமாக்கலாம் அல்லது தற்காலிகமாகத் தடை செய்யலாம். குறைந்தது ஒரு காலக்கட்டத்திலாவது உங்களால் அவருடைய அன்பை உணர முடியாமல் இருக்கலாம் மற்றும் அறிவே போதுமானதாக வேண்டும். ஆனால், தெய்வீக அன்பை வெளிப்படுத்துவதற்கும் பெறுவதற்கும் வெவ்வேறு வழிகளில் நீங்கள் பொறுமையாகப் பரிசோதனை செய்ய முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். உங்கள் முன்னால் இருப்பது எதுவாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு அடி பின்னால் எடுக்க முடியுமா? முடிந்தால் இன்னொரு அடி, மேலும் ஒரு அடி, உங்களால் ஒரு பரந்த காட்சியைப் பார்க்க முடியும் வரை, தேவைப்பட்டால் உங்களால் “சிலஸ்டியலாக யோசிக்க” முடியும் வரை காட்சியை அகலமாக்குங்கள், ஏனென்றால் நீங்கள் நட்சத்திரங்களைக் கண்டு எண்ணற்ற உலகங்களை நினைவு கொள்வீர்கள் அதன் மூலம் அவற்றைப் படைத்தவரை நினைவு கொள்வீர்கள்.
பறவையின் பாடல், என் மீது படும் சூரிய ஒளி, தென்றல் அல்லது மழைத் துளி மேலும் இயற்கை என்னுடைய புலன்களை தேவனுடைய பிரமிப்பில் ஆழ்த்தும் நேரங்கள்—ஒவ்வொன்றும் எனக்கு பரலோக இணைப்பை வழங்குவதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. ஒருவேளை உண்மையுள்ள நண்பர்களின் ஆறுதல் உதவுமா. ஒருவேளை இசை? அல்லது சேவை செய்வது? தேவனுடனான இருந்த உங்கள் தொடர்பு உங்களுக்கு தெளிவாக இருந்த சமயங்களின் பதிவை அல்லது குறிப்பேட்டை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் நம்புகிறவர்களை அவர்களுடைய தெய்வீக தொடர்பின் ஊற்றுமூலங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி அழைக்கலாமா.
நான் எண்ணிப் பார்க்கிறேன், நீங்களும் இயேசுவும் சந்திக்கக் கூடிய ஒரு இடத்தை, உங்கள் கவனத்தை அவர்மீது மட்டுமே செலுத்த நேரும் ஓர் இடத்தை அவர் தேர்ந்தெடுத்தால் அவர் உங்களுடைய தனித்துவமான உங்கள் தனிப்பட்ட பாடுகளின் இடத்தை, உங்கள் ஆழ்ந்த தேவையின் இடத்தை, வேறு யாராலும் செல்ல முடியாத ஓர் இடத்தை அவர் தேர்வு செய்வாரா? ஏதோ ஓர் இடத்தில் நீங்கள் தனிமையாக, உண்மையிலேயே தனியாகத்தான் இருந்தாக வேண்டும் என்று உணர்கிறீர்கள், கண்டிப்பாக இல்லை, அந்த இடத்திற்கு அவர் மட்டுமே பயணித்திருக்கலாம் ஆனால் உண்மையில் நீங்கள் வந்து சேரும்போது அவர் உங்களை அங்கே சந்திக்க ஏற்கனவே தயாராகிவிட்டார். அவர் வருவதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், அவர் ஏற்கனவே அங்கே அடையக்கூடிய தூரத்தில் இருக்க மாட்டாரா?
உங்கள் வாழ்க்கையின் இந்த காலத்தில் நீங்கள் அன்பால் நிரப்பப்பட்டதாக உணர்ந்தால், ஒரு சல்லடை தண்ணீரை வைத்திருப்பது போல திறம்பட அதைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அதை தெளியுங்கள். இயேசுவின் அன்பை நாம் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும்போது, “என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்“ என்ற கொள்கையின் மாறுபாட்டில் நாம் நிரப்பப்படுவதைக் காண்பது தெய்வீக செயல்பாட்டின் அற்புதங்களில் ஒன்றாகும்.
தேவனின் அன்பால் நிரப்பப்படுவது வாழ்க்கையின் புயல்களில் நம்மைப் பாதுகாக்கிறது, ஆனால் மகிழ்ச்சியான தருணங்களையும் மேலும் மகிழச்சியானதாக மாற்றுகின்றது— நமது மகிழ்ச்சியான நாட்கள், வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்போது நமது ஆத்துமாக்கள் சூரிய ஒளியால் இன்னும் பிரகாசமாக்கப்படுகின்றன.
நமது இயேசுவிலும் அவரது அன்பிலும் “வேரூன்றி, நிலைபெற்று” இருப்போம். நம் வாழ்க்கையில் அவருடைய அன்பையும் வல்லமையையும் உணரும் அனுபவங்களைத் தேடுங்கள் மற்றும் பொக்கிஷப் படுத்துங்கள். சுவிசேஷத்தின் மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்கிறது: மகிழ்ச்சியானவர்களுக்கு மட்டுமல்ல, வருத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. மகிழ்ச்சி நமது நோக்கம், நமது சூழ்நிலைகளின் பரிசு அல்ல. “தேவன் மீதும் எல்லா மனுஷர்மீதும் அன்பினால் மகிழவும் நிரம்பவும்“ நமக்கு எல்லா நல்ல காரணமும் உள்ளது. நாம் நிரம்புவோமாக. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.