2020–2024
இயேசு கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டிருத்தல்: பூமிக்கு உப்பாயிருத்தல்
அக்டோபர் 2024 பொது மாநாடு


10:49

இயேசு கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டிருத்தல்: பூமிக்கு உப்பாயிருத்தல்

நாம் கர்த்தரோடு பிணைக்கப்பட்டிருக்கும்போது, நம்முடைய வாழ்வு இயற்கையாகவே அவருடைய ஒளியை பிரதிபலித்து நாம் பூமியின் உப்பாயிருப்போம்.

“[தம்முடைய] நித்திய சுவிசேஷத்திற்கு அழைக்கப்பட்டு ஒரு நித்திய உடன்படிக்கையைக் கொண்டு உடன்படிக்கை செய்யும்போது, [நாம் பூமியின் உப்பென்று கருதப்படுவோம் ”என்று இரட்சகர் போதித்தார். உப்பானது இரண்டு உலோகங்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்படும்போது உருவாகிறது. நாம் நமக்கு நாமே உப்பாயிருக்க முடியாது;.நாம் உப்பாயிருக்க கர்த்தரோடு பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் உலகெங்கிலும் சபை அங்கத்தினர்களோடு நான் கூடும்போது,நான் இதைத்தான் காண்கிறேன்.-மற்றவர்களுக்கு சேவை செய்ய தங்களுடைய முயற்சிகளில் கருத்துள்ளவர்களாய் பூமிக்கு உப்பாயிருக்கிற விசுவாசமுள்ள அங்கத்தினர்கள், கர்த்தரோடு பிணைக்கப்பட்டிருப்பதைத் நான் காண்கிறேன்.

உங்களின் மாறாத அர்ப்பணிப்பு மிளிரும் உதாரணமாக இருக்கிறது. உங்களுடைய ஊழியம் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

நம்முடைய வாலிபர் வியப்பூட்டுகிற விதத்தில் தைரியத்தையும் தேவ பக்தியையும் காண்பிக்கிறார்கள். அவர்கள் குடும்ப வரலாறு பணியை உற்சாகத்துடன் தழுவிக்கொண்டார்கள். அவர்கள் அடிக்கடி கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்வது அவர்களின் அர்ப்பணிப்புக்கு சாட்சியாக உள்ளது. அவர்கள் பூலோகமெங்கும் ஊழியம் செய்ய நேரத்தையும் ஊக்கத்தையும் ஒதுக்க மனதுள்ளவர்களாய் இருப்பது ஆழமானதும் நீங்காததுமான விசுவாசத்தை பிரதிபலிக்கிறது. அவர்கள் வெறும் பங்குபெறுவதுமாத்திரமல்லாமல் இயேசு கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்ட சீஷர்களாய் மாறுவதற்கான வழியை நடத்துபவர்களாயும் இருக்கிறார்கள். அவர்களது ஊழியம் எண்ணமுடியாத ஜீவன்களை தொடுகிற ஒளியையும் நம்பிக்கையையும் மிளிரப்பண்ணுகிறது. இந்த சபையின் வாலிபர்களாகிய உங்களுக்கு, அருள்நிறைந்த உங்களின் ஊழியத்திற்காக எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் சபையின் எதிர்காலமுமாத்திரம் அல்ல, நிகழ்காலமும்தான். நீங்கள் மெய்யாகவே பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்!

நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன். கர்த்தருடைய சபையில் உங்களோடு இணைந்து சேவை செய்யும் வாய்ப்பை பாக்கியமெனக் கருதுகிறேன் நம்முடைய ஒற்றுமையும் பெலனும், நம் பகிர்தலுக்குரிய விசுவாசத்தில் நிலைபெற்று, நாம் இந்த பயணத்தில் என்றும் தனிமையாய் விடப்படுவதில்லை என்று உறுதியளிக்கின்றன. சேவையிலும், அன்பிலும், அசையாத விசுவாசத்திலும் வேரூன்றப்பட்டு பரலோக இராஜ்ஜியத்தை ஒற்றுமையோடு தொடர்ந்து கட்டுவோம்.

இயேசு கிறிஸ்து கலிலேயா கடலோரம் போதித்தபோது ஆவிக்குரிய உன்னதமான சத்தியங்களைத் தெரிவிக்க தம்முடைய பார்வையாளர்களுக்குப் பரிச்சையமான அனுதினப் பொருட்களைப் பயன்படுத்தினார். அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் உப்பு. நீங்கள்] பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று இயேசு அறிவித்த வாக்கியம் அர்த்தத்திலும் கருத்திலும் குறிப்பாக, உப்பின் பன்முகத்தன்மையின் பெறுமானம் பற்றி அறிந்த அவருடைய காலத்திலிருந்த மக்களுக்கு சிறப்புடையதாக இருக்கிறது.

என் தாய் நாடாகிய போர்ச்சுகலின் தென் பகுதி அல்கேர்விலில் செய்யப்படும் தொன்மைத் தொழிலாகிய உப்பு அறுவடை ஆயிரமாயிர ஆண்டுகள் முன்னே ரோமானியப் பேரரசின் போது தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக, மரனோடோஸ் என்று அழைக்கப்படும் அந்த உப்பள தொழிலாளர்களின் செயல் முறைகள் அக்காலம் தொட்டு சிறிதளவே மாறியுள்ளது. இந்த அர்ப்பணிப்புள்ள கைவினைஞர்கள் பாரம்பரிய நுட்பங்களைப் பின்பற்றி தங்கள் வேலை அனைத்தையும் கையால் செய்து நுற்றாண்டுகாலங்கள் நிலைநிற்கிற கலாச்சாரத்தைக் கடைபிடித்து வருகிறார்கள்.

இத்தொன்மையான செயல்முறை உப்பு மலர் என்பதை அறுவடை செய்கிறது. இந்த உப்பு மலரை அறுவடை செய்ய மேற்கொள்ளப்படும் நுட்பமான செயல்முறையை நாம் முழுவதுமாக பாராட்டவேண்டுமெனில், அது எந்த சுற்றுச்சூழலிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம். அல்கேர்விலின் கடலோர உப்பளங்கள் உப்பு விளைச்சலுக்கு மிகவும் உகந்ததாய் உள்ளது. கடல் தண்ணீரை உப்பங்கழி என்ற குட்டைகளில் வரப்பெடுத்து பாய்ச்சி, அங்கே அது சுட்டெரிக்கிற சூரியனுக்கு கீழ் நீரை ஆவியாக மாற விடப்படுகிறது. நீர் ஆவியாக மாறும்போது, உப்பு மலர் அந்த உப்பளம் மேற்பரப்பில் மெல்லிய படிகங்களை உண்டாக்கும். இந்த படிகங்கள் அசாத்திய தூய்மையையும் தனித்துவமானதும் மிருதுவானதுமான அமைப்பையும் கொண்டிருக்கும். மரனோடோஸ் விசேஷித்த கருவிகளைக் கொண்டு தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து ஆடையாக படிந்துள்ள படிகங்களைப் பத்திரமாக நீக்குவார்கள். இப்பேர்ப்பட்ட செயல்முறைக்கு அதிக திறமையும் நுணுக்கமும் தேவைப்படுகிறது. போர்ச்சுகலில் இந்த அதிக தரமுள்ள உப்பு, பாலுக்கு மேல் படருகிற ஆடையை நீக்குவதைபோல் இதையும் அப்படியே நீக்கப்பெறுவதால் இது “உப்பு பாலேடு” என்று அழைக்கப்படுகிறது. இந்த மெல்லிய உப்பு தனது தூய்மைத்தனத்திற்கும் அபூர்வமான ருசிக்கும் பேர்போனதாயும், சமையல் கலைகளில் மிகவும் முக்கியமாக சேர்க்கப்படும் பொருளாகவும் இருக்கிறது.

மரனோடோஸ் உயரிய தரமுள்ள உப்பை அறுவடை செய்ய பெரும் முயற்சிகளை முன்னெடுப்பதைப்போல, நாமும் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனமாக, நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய பிரதிபலிப்பாக கூடியமானவரை நமது அன்பும் எடுத்துக்காட்டும் இருந்திட நாம் உச்சிதமானவைகளையே செய்யவேண்டும்.

பண்டைய உலகில், உப்பு சாரமேற்ற மாத்திரம் அல்ல, முக்கிய பதனப் பொருளாகவும், தூய்மைக்கும் உடன்படிக்கைக்கும் அடையாளமாகவும் பயன்பட்டது. உணவை பாதுகாக்கவும் ருசியை அதிகரிக்கவும் உப்பு இன்றியமையாதது என்று ஜனங்கள் அறிந்திருந்தனர். அவர்கள் உப்பு தனது உவர்ப்பு தன்மையையோ அல்லது சாரத்தையோ, மாசுபடுதலாலோ அல்லது நீர்த்துப்போவதாலோ இழந்தால் அதனால் வரக்கூடிய சங்கடமான விளைவுகளையும் அறிந்திருந்தனர்.

உப்பானது தனது சாரத்தை இழப்பதைப்போல நாமும் இயேசு கிறிஸ்துவிலுள்ள நமது விசுவாசம் பொறுப்பற்றுப்போனால் நம்முடைய ஆவிக்குரிய உற்சாகத்தை இழக்க நேரிடும். வெளிச்சாயல் ஒன்றாய் இருக்கலாம், ஆனால் பலமான உள் விசுவாசம் இல்லாமல், நாம் உலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து நம்மை சுற்றியிருப்போரில் சிறந்தவற்றை வெளிக்கொணரும் திறமையை இழந்துபோகிறோம்.

நாம் எப்படி நம்முடைய ஊக்கத்தையும் முயற்சியையும் ஒருமுகப்படுத்தி வித்தியாசத்தை கொண்டுவந்து இன்று உலகம் தேவைப்படுகிற மாற்றமாய் இருக்கக்கூடும்? நாம் எப்படி சீஷத்துவத்தை பாதுகாத்து அனுகூல தாக்கமாய் இருப்பது?

நமது அன்புக்குரிய தீர்க்கதரிசியின் வார்த்தைகள் இன்னும் என் காதில் எதிரொலிக்கின்றன: “தேவன் நாம் ஒன்றாக சேர்ந்து வேலை செய்யவும் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யவும் விரும்புகிறார். அதனால்தான் அவர் குடும்பங்களாக நம்மை பூமிக்கு அனுப்புகிறார், நம்மை தொகுதிகளாகவும் பிணையங்களாகவும் அமைக்கிறார். அதனால்தான் ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் ஊழியம் செய்யவும் அவர் கேட்கிறார். அதனால்தான் அவர் உலகில் வாழும்படி, ஆனால் உலகத்தாராக வாழக்கூடாது”என்று நம்மைக் கேட்கிறார்.

நம்முடைய வாழ்க்கை நோக்கத்தோடும் சேவையோடும் நிரப்பப்படும்போது நாம் ஆவிக்குரிய அக்கறையின்மையை தவிர்க்கலாம். மற்றொரு புறம், நம்முடைய வாழ்க்கையிலிருந்து தெய்வீக நோக்கம், மற்றவர்களுக்கான அர்த்தமுள்ள சேவை, தியானிக்கவும் யோசிக்கவுமான பரிசுத்த வாய்ப்புகள் ஆகியவை பறிக்கப்படும்போது, நம்முடைய சொந்த நடப்பித்தல்களாலும், சுய ஆர்வத்தாலும் நமது சாரத்தை இழக்கக்கூடியவர்களாய் படிப்படியாக மூச்சு திணறலுக்குள்ளாவோம். நற்கிரியைகளில் ஆர்வமாயும் நமக்கும் நாம் வாழந்து வரும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் உட்படுத்தி, நாம் தொடர்ந்து சேவையில் ஈடுபடுவதே இதற்கான மாற்று மருந்து.

எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே, இன்று இயேசு கிறிஸ்துவின் சபையை சார்ந்திருந்து அவருடைய சபையிலே சேவைசெய்யும்படியான வாய்ப்பைப் பெற்றிருக்கிற நாம் யாவரும் பாக்கியவான்களே. நம்முடைய சூழ்நிலைகள் மாறுபடும் ஆனாலும் நாம் அனைவரும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

உப்பள ஊழியர்களான மரனோடோஸைநினைவுகூருங்கள். அவர்கள் எளிய கருவிகளைக் கொண்டு உயர்ந்த தரமுள்ள உப்பு என்கிற உச்சித படிவங்களை அறுவடை செய்கிறார்கள். நாமும் சாதாரண காரியங்களை, எளியதும் அர்த்தமுமுள்ள நடபடிகளில் நீங்காது முயற்சித்துவந்தால், இயேசு கிறிஸ்துவிலுள்ள நமது சீஷத்துவமும், அர்ப்பணிப்பும் வலுப்பெறும். பூமியின் உப்பாயிருக்க நாம் முயற்சிக்கக்கூடிய நான்கு எளிதானாலும் ஆழமான வழிகள் இதோ:

  1. நம்முடைய பத்தியின் மையத்திலே கர்த்தருடைய ஆலயத்தை வைத்தல். முன்பு என்றும் இல்லாத அளவிற்கு ஆலயங்கள் அருகாமையில் இருப்பதால் கர்த்தருடைய வீட்டில் சீரான தொழுதலை முதன்மைப்படுத்துதல், எது முக்கியமானதோ அதில் கவனம் செலுத்தவும் கிறிஸ்துவில் நம் வாழ்க்கையை மையப்படுத்தவும் உதவுகிறது. ஆலயத்தில்தான் இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசமாகிய இருதயத்தையும், அவர்பாலுள்ள பக்தியென்னும் ஆத்துமாவையும் காண்கிறோம்.

  2. சுவிசேஷத்தைக் கூடி வாழ்வதால் மற்றவர்களைப் பெலப்படுத்தும் முயற்சியில் வைராக்கியம் கொள்ளுதல். சுவிசேஷக் கொள்கைகளை நம்முடைய வாழ்விலும் இல்லங்களிலும் கொண்டுவர சீரானதும் வைராக்கியமுமான முயற்சிகள் மூலம் நம்முடைய குடும்பங்களைப் பெலப்படுத்தலாம்.

  3. சபையிலே ஒரு அழைப்பைப்பெற்று சேவை செய்வதில் மனமுள்ளவர்களாய் இருக்கலாம். நம்முடைய உள்ளூர் கூடுகைகளில் சேவை செய்வது ஒருவரை ஒருவர் ஆதரிக்கவும் ஒன்றாய் வளரவும் உதவுகிறது. சேவை செய்வது எப்போதும் சௌகரியமாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் மனநிறைவை கொடுக்கிறது.

  4. முடிவாக எண்முறை தொடர்பு சாதனங்களை நோக்கத்துடன் பயன்படுத்துதல். இன்று எண்முறை தொடர்பு சாதனங்கள் முன்பு என்றும் இல்லாத அளவு நம்மை இணைக்க செய்கிறது. உங்களில் அநேககரைப் போல, நானும் சபையிலுள்ள சகோதர சகோதரிகளுடனும், என் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும், தொடர்புகொள்ள இச்சாதனங்களைப் பயன்படுத்துகிறேன். நான் அவர்களுடனே இணையும்போது, அவர்களுடனான நெருக்கத்தை உணர்கிறேன். நாம் நேரடியாக சந்திக்காதபோதும், தேவையான சமயங்களில் ஒருவருக்கு ஒருவர் ஊழியம் செய்யலாம். இந்த சாதனங்கள் ஆசீர்வாதங்கள் தான் அதை மறுக்க இயலாது. ஆயினும் அவை அர்த்தமுள்ள உறவில் நீடித்து இருப்பதிலிருந்து நம்மை இழுத்துச்சென்று முடிவாக தேவையற்ற காரியங்களில் நமது நேரத்தை வீணாக்க செய்கிற பழக்கவழக்கங்களுக்குள் நம்மை இணைத்து வைக்கிறது. பூமியின் உப்பாயிருக்க முயற்சித்தல் என்பது, ஆறு அங்குல (15 செ.மீ) திரையில், ரீல்ஸ்களை இடைவிடாமல் தட்டி விடுவதைக் காட்டிலும் அதிகமாயிருக்கிறது.

கர்த்தருடைய வீட்டை நம்முடைய வாழ்வில் மையப்படுத்தி, சுவிசேஷத்தின் படி ஜீவனம் செய்வதால் உத்வேகத்தோடு மற்றவர்களை பலப்படுத்தி, சேவை செய்யவேண்டி அழைப்புகளை ஏற்றுக்கொண்டு, எண்முறை சாதனங்களை நோக்கத்துடன் பயன்படுத்தும் போது, நம்முடைய ஆவிக்குரிய உறுதியை பாதுகாக்கமுடியும். உப்பானது தன்னுடைய தூய்மையான வடிவில் எப்படி மேன்மைப்படுத்தவும், பதனிக்கவும் சக்தியை கொண்டிருக்கிறதோ, அதைப்போல இயேசு கிறிஸ்துவில் உண்டான நம்முடைய விசுவாசம், கிறிஸ்துவைப்போன்று சேவையிலும் அன்பிலும் நம்முடைய அர்பணிப்பினிமித்தமாய் போஷிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்போது வல்லமையை கொண்டிருக்கும்.

நாம் கர்த்தரோடு பிணைக்கப்பட்டிருக்கும்போது, நம்முடைய வாழ்வு இயற்கையாகவே அவருடைய ஒளியை பிரதிபலித்து நாம் பூமியின் உப்பாயிருப்போம். இந்த முயற்சியில் நம்முடைய சொந்த வாழ்க்கையை மாத்திரமல்ல நமது குடும்பங்களையும் சமூகங்களையும் பெலப்படுத்துகிறோம். இப்பேர்ப்பட்ட பிணைப்பை நம்முடைய கர்த்தரோடு தொடர்ந்து வைக்க முயற்சித்து, நாம் சாரமற்றுப்போகாமல் கர்த்தர் விரும்புகிறபடி உப்பின் சின்னஞ் சிறிய படிகமாக இருப்போமாக. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.