“நீங்கள் என் சிநேகிதராயிருக்கிறீர்கள்”
“நீங்கள் என் சிநேகிதராயிருக்கிறீர்கள்“ என்ற இரட்சகரின் பிரகடனத்தை, தேவனுடைய பிள்ளைகள் “ஒன்றையிருக்கத்தக்கதாக அவர்கள் யாவருக்குள்ளும் உன்னதமாயும் பரிசுத்தமாயுமுள்ள உறவுகளை கட்டியெழுப்புதலுக்கான அறைகூவல் என்று நான் பார்க்கிறேன்.
பிணக்கு மற்றும் பிளவுகள் நிறைந்த உலகில், உலகப்பிரகார பேச்சுவார்த்தை, தீர்ப்பு மற்றும் இகழ்ச்சியால் மாற்றப்பட்டு, நட்புகள் -இஸம் மற்றும் -ஐட்டுகளால் வரையறுக்கப்படுகின்றன,ஒற்றுமை, அன்பு மற்றும் சொந்தமாதல் ஆகியவற்றிற்கு நாம் பார்க்கக்கூடிய தெளிவான, எளிமையான மற்றும் தெய்வீக உதாரணம் இருப்பதை நான் அறிந்தேன். அந்த திருஷ்டாந்தம் இயேசு கிறிஸ்துவே. அவரே ஒன்றுபடுத்துபவர் என்று நான் சாட்சியம் கொடுக்கிறேன்.
நாம் அவருடைய சிநேகிதர்கள்.
1832ல் டிசம்பர் மாதம் “தேசங்களுக்குள்ளே பிரச்சனைகள் எழும்பி” சபை ஆரம்பமானது முதல் என்றுமில்லாத அளவிற்கு அதிகமாய் தென்படுகிறபோது, ஒஹாயோ கர்த்லாந்திலுள்ள பிற்கால பரிசுத்தவான் தலைவர்கள் ஒரு மாநாட்டைக் கூட்டினார்கள். அவர்கள் “கர்த்தர் (தங்களுக்கு) தம்முடைய சித்தத்தைத் தெரிவிக்கும்படியாய் தனித்தனியாக, வாயார ஜெபித்தார்கள்“.கடும் கஷ்டத்திலிருந்த சமயங்களின் போது இந்த விசுவாசமுள்ள உறுப்பினர்கள் ஏறெடுத்த ஜெபங்களை அங்கீகரிக்கும் வண்ணமாய், கர்த்தர் அவர்களை, “என் சிநேகிதர்களே“என்ற சத்துவமுள்ள இரு வார்த்தைகளைக் கொண்டு, மும்முறை அழைத்து அவர்களைத் தேற்றினார்.
இயேசு கிறிஸ்து தம்முடைய விசுவாசமுள்ள அடியார்களைத் தமது சிநேகிதர்கள் என்று நீண்ட காலமாய் அழைத்து வந்திருக்கிறார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் என்ற புஸ்தகத்தில், பதினான்கு முறை பரிசுத்தமும் கனிவானதுமான ஓர் உறவைக் குறிக்க நண்பன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். சமூக ஊடகங்களிலும், அதிக “விருப்பங்களைப்“ பெறவும் உலகம் பயன்படுத்துகிற வார்த்தையான நண்பன் பற்றி நான் பேசவில்லை. இதை இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் எண்ணில் அல்லது ஹேஷ்டேக் -இல் விவரிக்க முடியாது.
ஒப்புக்கொண்டபடி, நான் பதின் பருவத்தானாய் இருந்தபோது, “நாம் வெறும் நண்பர்களாக மட்டும் இருக்கலாமா?” அல்லது “நண்பர்களாக மட்டும் இருப்போமா? என்று அந்த வேதனையான வார்த்தைகளைக் கேட்ட பயமான உரையாடல்களை நான் நினைவில் கொள்கிறேன். வேதங்களில் எங்கும், “நீங்கள் என் நண்பர்களாக மாத்திரம் இருக்கிறீர்கள்” என்று அவர் சொன்னதாக நாம் கேள்விப்பட்டதில்லை . அதற்கு மாறாக, அவர் “ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” “அவர்களாகிய நீங்களே என் பிதா எனக்கு கொடுத்தவர்கள். நீங்கள் என் சிநேகிதராயிருக்கிறீர்கள்.”என்று போதித்தார்.
மனப்பக்குவம் என்னவென்று புரிகிறது: நம் ஒவ்வொருவரையும் இரட்சகர் கணக்கிட்டுப் பார்த்து, நம்மைப் பாதுகாக்கிறார். இந்த கவனிப்பு அற்பமானதோ அல்லது முக்கியமற்றதோ இல்லை. மாறாக, அது மேன்மைபொருந்தியதாயும், உயர்வானதாயும், நித்தியமானதாயும் இருக்கிறது. “நீங்கள் என் சிநேகிதராயிருக்கிறீர்கள்“ என்ற இரட்சகரின் பிரகடனத்தை, தேவனுடைய பிள்ளைகள் “ஒன்றையிருக்கத்தக்கதாக“ அவர்கள் யாவருக்குள்ளும் உன்னதமாயும் பரிசுத்தமாயுமுள்ள உறவுகளை கட்டியெழுப்புதலுக்கான அறைகூவல் என்று நான் பார்க்கிறேன். ஐக்கியப்படவும், யாவரும் ஒருவரோடு ஒருவர் சொந்தம் கொண்டாடவும் ஆகிய இரட்டை வாய்ப்புகளை நாம் நாடி ஒன்றாய் வருகிறபோது இதை நடப்பிக்கிறோம்.
நாம் அவரில் ஒன்றாய் இருக்கிறோம்.
“என்னைப் பின்பற்றி வாருங்கள்“என்ற தமது அழைப்பிலே இதை இரட்சகர் அருமையாக வெளிப்படுத்தி காட்டினார். அவர் தமது அப்போஸ்தலர்களை அழைப்பிக்க பலதரப்பட்ட ஜனத்தின் தனிப்பட்ட வரங்களையும், பண்புகளையும் பயன்படுத்திக்கொண்டார். அவர் மீனவர்களையும், பக்தர்களையும், வலிமையான நபர்களையும், ஒரு ஆயக்காரன் முதலானோரையும் அழைப்பித்தார். இரட்சகரில் அவர்களுடைய விசுவாசமும், அவரிடத்தில் வரும்படியான விருப்பமும் அவர்களை ஒன்றுபடச்செய்தது. அவரைப் பார்த்தார்கள், தேவனை அவர் மூலமாய் கண்டார்கள், “உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.”
உன்னதமாயும் பரிசுத்தமாயுமுள்ள உறவுகளை கட்டியெழுப்புவது எப்படி நம்மை ஒன்றாய் இணைக்கிறது என்பதை நானும் கண்டிருக்கிறேன். என் மனைவி ஜெனிபரும், நானும் எங்களுடைய ஐந்து பிள்ளைகளை நியூ யார்க் நகரத்திலே வளர்க்க ஆசிர்வதிக்கப்பட்டோம். அந்த பரபரப்பான மகா நகரத்திலே, அயலாரிடமும், பள்ளி நண்பர்களிடமும், வியபார கூட்டாளிகளிடமும், மத தலைவர்களிடமும், சக பரிசுத்தவான்களிடமும், விலையேறப்பெற்றதும், பரிசுத்தமானதுமான நட்பு பாராட்டினோம்.
2020 மே மாதத்தில், பெருந்தொற்றுநோய் பரவலால் உலகமே ஸ்தம்பித்தபோது நியூ யார்க் நகர மத தலைவர்களுக்கான ஆணையத்தின் அங்கத்தினர்களாக திடீரென அழைக்கப்பட்ட கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக சந்தித்தோம். நிகழ்ச்சி நிரல் ஏதுமில்லை. விசேஷ விருந்தினர்கள் யாருமில்லை. மத தலைவர்களாக நாம் எதிர்கொள்கிற சவால்களை ஒன்றுகூடி விவாதிக்க ஓர் அழைப்பு மாத்திரமே. நோய் கட்டுப்பாடு மையம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கோவிட் 19 பெருந்தொற்றுக்கு எங்களுடைய நகரம் தான் மையப்பகுதி என்று அறிவித்திருந்தது. அப்படியென்றால் கூடுகைகள் கூடாது. ஒன்று கூட முடியாது.
இந்த மதத் தலைவர்களுக்கோ தனிப்பட்ட ஊழியத்தையும், சபை கூடுகையையும், வார ஆராதனைகளையும் நிறுத்துவது பெரும் அடியாக இருந்தது. உயர் ஆயரையும், கார்டினல்களும், ஆயர்களையும், ரபிக்களையும், இமாம்களையும், போதகர்களையும், மான்சநைகர்களையும், மூப்பர்களையும் உள்ளடக்கிய எங்களுடைய சிறிய குழுவில் ஒவ்வொருவருக்கும் செவிகொடுத்து, ஆறுதல் வழங்கி, தாங்கினோம். எங்களின் வேற்றுமைகளை மையப்படுத்தாமல், எங்களுக்குள்ளே இருக்கும் பொதுவானவைகளைக் கண்டோம். முதலில் செய்யக்கூடியவைகளையும், பிறகு தானே சம்பவிக்கக்கூடியவைகளையும் பற்றிப் பேசினோம். விசுவாசத்தையும் எதிர்காலத்தைப்பற்றியுமான கேள்விகளை ஆதரித்து பதில்கொடுத்தோம். பின்பு நாங்கள் ஜெபித்தோம். எப்படி ஜெபித்தோம்.
சிக்கல்களாலும் முட்டிமோதும் கலாச்சாரங்களாலும் நிரம்பி முற்றிலும் மாறுபட்டதான ஒரு நகரத்தில், நாங்கள் நண்பர்களாக ஒரே தொனியோடும், ஒரே நோக்கத்தோடும், ஒரே வேண்டுதலோடும் வந்தபோது எங்களுடைய பேதங்கள் களைந்து போவதைக் கண்டோம்.
நாங்கள் இனியும் மேஜையின் குறுக்கே ஒவ்வொருவரையும் காணாமல், ஒவ்வொருவருடனும் வானத்திற்கு நேராய் ஏறெடுத்தோம். அதன் பின்னர் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அதிக ஒற்றுமையாய், எங்களுடைய “மண்வெட்டிகளை” எடுத்து பணிக்கு செல்ல ஆயத்தமானோம். பிரிவினைவாதம், தொடர்பின்மை, இணையாத்தன்மை ஆகியவைகளுக்காக திரளுகிற உலகத்தில், இப்பேற்பட்ட ஒத்துழைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான நியூ யார்க்வாசிகளுக்குப் புரிந்த சேவையினிமித்தம் நம்மை விலக்கிவைப்பவைகளைக் காட்டிலும் எப்பொழுதும் நம்மை ஒன்று சேர்ப்பவை அதிகமாய் உள்ளன என்று அறிந்துகொண்டேன். “ஒன்றாக இருங்கள்; நீங்கள் ஒன்றாக இல்லையானால் நீங்கள் என்னுடையவர்கள் அல்ல.”என்று இயேசு கெஞ்சினார்.
சகோதர சகோதரிகளே நாம் பிளவுபடுவதற்கான காரணங்களைத் தேடாமல் “ஒன்றாய் இருக்க”வாய்ப்புகளை நாடவேண்டும். ஒருவரிடத்திலிருந்து ஒருவர் கற்றலையும், தனிப்பட்ட வளர்ச்சியையும் அழைப்பிக்கிற தனித்துவமான வரங்களாலும், பண்புகளாலும் அவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். நீங்கள் செய்வதை நான் செய்தாலோ, நான் செய்வதை நீங்கள் செய்தாலோ, நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்திட அவசியமில்லை என்று நான் எனது பல்கலைக்கழக மாணவர்களிடம் அடிக்கடி கூறினேன், நீங்கள் செய்வதை நான் செய்கிறதில்லை என்பதாலும், நான் செய்வதை நீங்கள் செய்கிறதில்லை என்பதாலும் நாம் ஒருவருக்கு ஒருவர் தேவைப்படுகிறோம். அந்த தேவையே நம்மை ஒன்றாயிருக்க கொண்டுவருகிறது. நம்மை பிரித்து மேற்கொள்ளுவதற்கு, நட்பையும், குடும்பங்களையும், விசுவாசத்தையும் சிதைப்பதே சத்துருவின் திட்டமாகும். இரட்சகரே நம்மை இணைப்பவர்.
நாம் அவருக்கு சொந்தம்.
“ஒன்றாயிருப்பதினால்” வருகிற வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களில் ஒன்று சொந்தம் கொண்டாடுவதிலிருக்கும் வல்லமையான உணர்வு. “கிறிஸ்துவுடன் ஒன்றாக இருப்பதே உண்மையான சொந்தமாயிருத்தலின் சாராம்சம்” என்று மூப்பர் க்வெண்டின் எல்.குக் போதித்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு எனது குடும்பத்துடன் சமீபத்தில் சென்றிருந்தபோது,உள்ளூர் பழக்கவழக்கம் ஒன்று எனக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. ஒரு சபை அல்லது வீட்டிற்கு வந்ததும், “நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்” என்ற வார்த்தைகளால் நாங்கள் வரவேற்கப்பட்டோம். உணவு பரிமாறப்படும்போது, “நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று எங்கள் விருந்தளிப்பவர் அறிவிப்பார். இந்த எளிய வாழ்த்துக்கள் நோக்கத்துடனும் மனமுவந்தும் கொடுக்கப்பட்டன. நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இதேபோன்ற புனிதமான அறிவிப்புகளை நாம் நமது கூடுமிட வாசல்களில் வைக்கிறோம். ஆனால் “வருவோர் வரவேற்கப்படுகிறார்கள்” என்ற அடையாளம் போதாது. வாசல்கள் வழியாக வரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோமா? சகோதர சகோதரிகளே, பீடங்களில் அமர்ந்தால் மட்டும் போதாது. தேவனுடைய பிள்ளைகள் யாவருக்குள்ளும் உன்னதமாயும் பரிசுத்தமாயுமுள்ள உறவுகளை கட்டியெழுப்புதலுக்கான இரட்சரின் அழைப்புக்கு செவிகொடுக்கவேண்டும். நாம் நம்முடைய விசுவாசத்திற்கேற்ப ஜீவிக்கவேண்டும்! வண்டி பழுதுபார்க்குமிடத்தில் தூங்குவதால் எப்படி ஒருவர் மகிழுந்தாய் மாறமாட்டாரோ அதுபோல ஞாயிற்றுகிழமைகளில் பீடத்தில் உட்கார்ந்துகொள்வது, உங்களை ஒரு நல்ல கிறிஸ்தவராக மாற்றாது என்பதை என் அப்பா அடிக்கடி எனக்கு நினைவூட்டினார்.
உலகம் நம்மைப் பார்க்காமல், நம் மூலம் அவரைப் பார்க்கும் வகையில் நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறுவதில்லை. இது மளிகை கடைகளிலும், எரிபொருள் நிரப்பும் இடங்களிலும், பள்ளி கூடுகைகளிலும், அயலார் சேருமிடத்திலும், நம்முடைய குடும்பத்தின் ஞானஸ்நானம் பெற்ற மற்றும் பெறாத அங்கத்தினர்கள் வேலைசெய்கிற, வாசம்செய்கிற ஸ்தலங்கள் யாவிலும் நடைபெறுகிறது.
நமக்கு ஒருவருக்கொருவர் தேவை என்பதாலும், ஏகமாய் அவர் நமக்கு தேவையென்பதாலும் நான் ஞாயிற்றுகிழமைகளில் ஆராதிக்கிறேன். லௌகீக உலகத்தில் நம்மை வேறுபடுத்தும் நம்முடைய தனித்துவமான வரங்களாகிலும், தாலந்துகளாகிலும், பரிசுத்த இடத்திலே நம்மை ஐக்கியமாக்குகிறது. நாம் ஒருவருக்கொருவர் உதவவும், ஒருவருக்கொருவர் உயர்த்தவும், ஒருவரிலொருவர் ஊன்றக் கட்டவும், இரட்சகர் நம்மை அழைத்திருக்கிறார். இதைத்தான் அவர் பெரும்பாடுள்ள ஸ்திரீயை குணப்படுத்தினபோதும், அவருடைய இரக்கத்திற்காக மன்றாடிய குஷ்டரோகியை சுத்தப்படுத்தினபோதும், தான் இன்னமும் என்ன செய்திடக்கூடும் என்று கேட்ட இளம் செல்வந்தனுக்கு ஆலோசனை கூறினபோதும், அறிந்திருந்தும் விசுவாசத்தில் தடுமாறிய நிக்கொதேமுவை நேசித்தபோதும், அன்றைய வழக்கத்திற்குப் பொருந்தாத ஸ்திரீயிடம் தன்னுடைய இரட்சண்ய ஊழியத்தை அறிவித்து துரவின் அருகிலே உட்கார்ந்திருந்தபோதும் செய்தார். னக்கு இதுவே சபையாய் இருக்கிறது. கூடுகைக்கானதும், குணப்படுத்தலுக்கும், சீர்படுத்தலுக்கும், உச்சிதமானவைகளுக்கு கவனம் செலுத்துதலுக்கான இடமாகும். தலைவர் நெல்சன் கற்பித்தது போல்: “சுவிசேஷ வலை உலகின் மிகப்பெரிய வலையாகும். தேவன் அனைவரையும் தம்மிடம் வரும்படி அழைத்திருக்கிறார். … அனைவருக்கும் இடம் உண்டு.”
நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாத அனுபவங்கள் உங்களுக்கு நேரிட்டிருக்கும். உங்களுக்கும் எனக்கும் இரட்சகரின் செய்தி ஒன்றுதான்:, “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நமக்கான ஒரு பூர்ண ஸ்தலமாக இருக்கிறது. சபைக்கு வருதல் நன்மையான நாட்களின் நம்பிக்கையையும், நீங்கள் தனியாக இருப்பதில்லை என்ற வாக்குறுதியையும் நமக்கு எவ்வளவாய் தேவைப்படுமோ அவ்வளவாய் அவர்களுக்கும் தேவைப்படும்படியான ஒரு குடும்பத்தையும் வழங்குகிறது. “பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியுடன் ஒன்றாக இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி இறுதியான சொந்தமாதலாகும் “என்று டி. டாட் கிறிஸ்டாபர்சன் உறுதியளிக்கிறார். விலகிப்போய் திரும்பி வருவதற்கான ஒரு வாய்ப்பை நல்குகிறவர்களுக்கு ஒரு நித்திய சத்தியத்தையும், அழைப்பையும் வழங்குகிறேன்: நீங்கள் சொந்தமானவர்கள். திரும்ப வாருங்கள். இதுவே நேரம்.
சர்ச்சைகளும் பிரிவினைகளும் உள்ள இவ்வுலகில், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே மாபெரும் ஒன்றுபடுத்துபவர் என்று நான் சாட்சி கொடுக்கிறேன். “ஒன்றாக இருக்கவேண்டும்“ என்ற இரட்சகரின் அழைப்புக்கு தகுதியுள்ளவர்களாக இருக்கவும், “நீங்கள் என் சிநேகிதராயிருக்கிறீர்கள்“என்று அவர் அறிவித்ததைப்போல தைரியமாய் அறிவிக்கவும், உங்கள் ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.