2020–2024
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
அக்டோபர் 2024 பொது மாநாடு


4:17

சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, உங்கள் ஆதரித்தல் வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் முன்மொழிதல் எனது சிலாக்கியம்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் ஆதரித்தலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் மரியான் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், ஜெப்ரி ஆர். ஹாலண்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், உலிசஸ் சோயர்ஸ், மற்றும் பேட்ரிக் கியரோன்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அவ்வாறே தெரிவிக்கவும்.

பிரதான தலைமையின் ஆலோசகர்களையும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரையும் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

அக்டோபர் 3, வியாழன் அன்று நடைபெற்ற பொது மாநாட்டுத் தலைமைக் கூட்டங்களில் ஆறு புதிய பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், பின்னர் சபை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த சகோதரர்களை, அவர்களின் புதிய பணிகளில் அவர்களை ஆதரிக்க உங்களை அழைக்கிறோம்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து உயர்த்திய கரங்களால் அப்படிச் செய்யவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

சகோதர சகோதரிகளே, சபைத் தலைமை சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

மிகுவல் ஏ. அவிலா, ஜீன் பியர் ஏ. எல். ஹபோகோ, ராமிரோ இபார்ரா சான்செஸ், ஜார்ஜ் கடெம்போ நஜோகு முனேனே, ஏ. என்ரிக் டெக்ஸீரா, பிரான்சிஸ்கோ வில்லனுவேவா ரோஜாஸ்.