அக்டோபர் 2025 பொது மாநாடு சனிக்கிழமை காலை அமர்வு சனிக்கிழமை காலை அமர்வுஅக்டோபர் 4–5, 2025 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195வது அரையாண்டு பொது மாநாட்டின் சனிக்கிழமை காலை அமர்வு. டாலின் ஹெச். ஓக்ஸ்முன்னுரைதலைவர் ரசல் எம். நெல்சன் காலமான உடனேயே நடைபெறும் இந்தப் பொது மாநாட்டை தலைவர் ஓக்ஸ் அறிமுகப்படுத்துகிறார், எனவே இது அசாதாரணமானது ஆனால் திட்டமிட்டபடி நடைபெறும். ஹென்றி பி. ஐரிங் சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.தலைவர் ஐரிங், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஒரு ஆதரிக்கும் வாக்குக்காக முன்மொழிகிறார். காரி இ. ஸ்டீவென்சன்சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்நம் இதயங்களிலும், வீட்டிலும், நமது சமூகங்களிலும் சமாதானம் செய்பவர்களாக இருக்க இரட்சகரின் அறிவுரையைப் பின்பற்ற மூப்பர் ஸ்டீவன்சன் நமக்குக் கற்பிக்கிறார். டிரேசி ஒய். ப்ரவுனிங்உங்கள் இருதயத்தை இயேசு கிறிஸ்துவுக்கு இசைவாக்கவும்: ஆரம்ப வகுப்பு இசை எனும் பரிசுத்த வரம்.இசை இரட்சகரைப் பற்றி சாட்சியமளிக்கும் என்றும், வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கக்கூடிய முக்கியமான சுவிசேஷ சத்தியங்களைக் கற்பிக்கும் என்றும் சகோதரி பிரவுனிங் கற்பிக்கிறார். ரொனால்ட் எம். பார்செல்லோஸ்கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்கர்த்தரை மேலும் வேண்டுமென்றே பின்பற்றுவதற்கு ஒப்புக்கொடுத்தலின் மூலம், நம் இருதயங்களை அவருக்குக் கொடுக்க மூப்பர் பார்செல்லோஸ் நம்மை அழைக்கிறார். பிரிக் வி. ஐர்நீங்கள் உண்மையில் யார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்தேவனுடைய பிள்ளையாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ள மூப்பர் ஐர் இரண்டு வழிகளைப் பகிர்ந்து கொள்கிறார். கெல்லி ஆர். ஜான்சன்தேவனோடே ஒப்புரவாகுங்கள்மூப்பர் ஜான்சன், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் தேவனுடன் ஒப்புரவாக நம்மை அழைக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் பங்கைச் செய்யுங்கள்தேவன் நமக்குக் கொடுத்த வரங்களை விருத்திசெய்ய நாம் உழைக்க வேண்டும், அதனால் அவை நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதிக்க முடியும் என்று மூப்பர் உக்டர்ப் கற்பிக்கிறார். சனிக்கிழமை பிற்பகல் அமர்வு சனிக்கிழமை பிற்பகல் அமர்வுஅக்டோபர் 4–5, 2025 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195வது அரையாண்டு பொது மாநாட்டின் சனிக்கிழமை பிற்பகல் அமர்வு. ரொனால்ட் எ.ராஸ்பான்ட் குடும்ப பிரகடனம்—தேவனிடமிருந்து வந்த வார்த்தைகள்மூப்பர் ராஸ்பான்ட் குடும்பம் பற்றிய பிரகடனத்திலிருந்து கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும் இந்த ஆவணம் ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் கொண்டுள்ளது என்றும், தேவனிடமிருந்து வரும் வார்த்தைகளுக்கு கொடுக்கப்படும் அதே மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் கற்பிக்கிறார். சாட் எச்.வெப்அனைவரும் பக்திவிருத்தி அடையும்படியாகசுவிசேஷ சத்தியங்களை நமக்குக் கற்பிக்க பரிசுத்த ஆவியானவரை நாம் எவ்வாறு அழைக்கலாம் என்பதை சகோதரர் வெப் கற்பிக்கிறார். ஜெரமை ஆர். ஜாகிபீடங்களில் பணிவான ஆத்துமாக்கள் மண்டியிடுகின்றனபரிசுத்த பலிபீடங்களில் தேவனுடன் நாம் செய்யும் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்று மூப்பர் ஜாகி கற்பிக்கிறார். கெவின் ஜி.பிரவுன்சாட்சியத்தின் நித்திய வரம்நமது சாட்சியங்களைத் தெரிவிக்கவும் மற்றும் நம்புவதைத் தேர்ந்தெடுக்கவும் நம்மை ஊக்குவிக்கும் மூன்று உண்மைகளை மூப்பர் பிரவுன் பகிர்ந்து கொள்கிறார். கெரிட் டபிள்யூ. காங் யாரும் தனியாக உட்காரவில்லைகர்த்தர் நம் அனைவரையும் அவரிடம் வரவும், அவருடைய சபையில் ஒருவருக்கொருவர் ஐக்கியப்படவும் அழைக்கிறார் என்று மூப்பர் காங் கற்பிக்கிறார். மைக்கேல் சீஸ்லாகிறிஸ்துவில் எளிமைகிறிஸ்துவின் கோட்பாட்டை எளிமையான முறையில் பயன்படுத்துவது நமக்கு மகிழ்ச்சியைத் தரும், நமது அழைப்புகளில் வழிகாட்டுதலை வழங்கும், வாழ்க்கையின் மிகவும் சிக்கலான சில கேள்விகளுக்கு பதிலளிக்கும், மேலும் பலத்தை வழங்கும் என்று மூப்பர் சீஸ்லா கற்பிக்கிறார். க்வென்டின் எல். குக் கர்த்தர் தம் பணியை விரைவுபடுத்துகிறார்.கர்த்தர் தம்முடைய பணியை விரைவுபடுத்தும்போது, புதிய மற்றும் திரும்பி வரும் உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ளவும் வரவேற்கவும் சபை உறுப்பினர்களுக்கு ஒரு பரிசுத்த கடமை இருக்கிறது என்று மூப்பர் குக் கற்பிக்கிறார். அவர் இந்தப் புதிய அல்லது திரும்பிவரும் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். சனிக்கிழமை மாலை அமர்வு சனிக்கிழமை மாலை அமர்வுஅக்டோபர் 4–5, 2025 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195வது அரையாண்டு பொது மாநாட்டின் சனிக்கிழமை மாலை அமர்வு. பாட்ரிக் கியரோன்இயேசு கிறிஸ்துவும் உங்கள் புதிய தொடக்கமும்பாவம், பலவீனம் அல்லது பின்னடைவுகளால் நாம் பாரப்பட்டு இருக்கும்போது, இயேசு கிறிஸ்து நமக்குப் புதிய தொடக்கங்களை—நமக்குத் தேவையான அளவுக்கு—வழங்குகிறார் என்று மூப்பர் கியரோன் சாட்சியமளிக்கிறார். ஜே. அனெட் டென்னிஸ்ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துதல்ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கான உடன்படிக்கைக் கடமை நமக்கு இருக்கிறது என்று சகோதரி டென்னிஸ் கற்பிக்கிறார். ஸ்டீவன் சி. பார்லோ“நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?”தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பைக் காட்டுவதற்கான நான்கு வழிகளை மூப்பர் பார்லோ விவரிக்கிறார், இது நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பை அடையாளம் காண உதவும். வில்லியம் கே. ஜாக்சன்ஆடுகளை நினைவில் கொள்ளுதல்எண்ணுதல் மற்றும் கணக்கிடுதல் கொள்கைகளைப் பின்பற்றி, சபையில் நமது சேவையில் உள்ள தனிநபர்களுக்கு ஊழியம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மூப்பர் ஜாக்சன் கற்பிக்கிறார். நீல் எல். ஆன்டர்சென்இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண அன்புபாவம் செய்தோருக்கு மன்னிப்பையும் மற்றவர்களின் பாவங்களால் காயப்பட்டோருக்கு குணப்படுதலையும் கொடுக்கும்படியான இயேசு கிறிஸ்துவினுடைய வல்லமையைப் பற்றி மூப்பர் ஆன்டர்சென் போதித்தல். ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வுஅக்டோபர் 4–5, 2025 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195வது அரையாண்டு பொது மாநாட்டின் ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு ஜெப்ரி ஆர். ஹாலண்ட்இப்பொழுது காண்கிறேன்களிமண் கலவையால் ஒரு பார்வையற்ற மனிதனைக் கர்த்தர் குணப்படுத்தியது போல, நம்மை ஆசீர்வதிக்கவும் கற்பிக்கவும் அவர் பெரும்பாலும் தாழ்மையான அல்லது அசாதாரணமான விஷயங்களைப் பயன்படுத்துகிறார் என்று தலைவர் ஹாலண்ட் போதிக்கிறார். ஜேம்ஸ் ஈ. ஈவான்சன் போய் அந்தப்படியே செய் மூப்பர் ஈவான்சன் சேவை ஊழியக்காரர்களை முக்கியப்படுத்துகிறார் மற்றும் அவர்களின் சேவை மக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வர எவ்வாறு உதவுகிறது மற்றும் நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது என்பதை கற்பிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ் இச்சையடக்கம் எனும் நற்பண்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளோம்கிறிஸ்துவைப் போன்ற பிற பண்புகளை இச்சையடக்கம் ஒருங்கிணைத்து பலப்படுத்துகிறது என்று மூப்பர் சோயர்ஸ் கற்பிக்கிறார். இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றவும், இந்த நற்பண்பை நமது குணத்தின் ஒரு பகுதியாக மாற்றவும் அவர் நம்மை அழைக்கிறார். பீட்டர் எம். ஜான்சன்அந்த ஒருவருக்கு ஊழியம் செய்தலின் வல்லமைகர்த்தருடைய வீட்டிற்கு வழிநடத்தும் வழிகளில் நாம் ஊழியம் செய்யும்போது, இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீஷர்களாக மாற ஒருவருக்கொருவர் உதவுகிறோம் என்று மூப்பர் ஜான்சன் கற்பிக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்தேவனைப் பார்த்துப் பிழைத்திருதேவனை நோக்கிப் பார்ப்பது செழிப்பு மற்றும் பரிசுத்த ஆவியின் வரம் உட்பட ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது என்று மூப்பர் கிறிஸ்டாபர்சன் கற்பிக்கிறார். ஆண்ட்ரியா முனோஸ் ஸ்பன்னாஸ்தேவனின் தீர்க்கதரிசிகள்தேவனின் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளைப் பற்றிய தங்கள் சொந்த சாட்சியங்களை இளைஞர்கள் எவ்வாறு பெறலாம் என்பதை சகோதரி ஸ்பன்னாஸ் கற்பிக்கிறார். ஹென்றி பி. ஐரிங் கிறிஸ்துவில் சோதிக்கப்பட்டு பலப்படுத்தப்படுதல்நாம் இரட்சகரை நம்பி அவரிடம் திரும்பினால், நமது சவால்கள் நம்மைப் பலப்படுத்தும் என்று மூப்பர் ஐரிங் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமர்வுஅக்டோபர் 4–5, 2025 அன்று நடந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195வது அரையாண்டு பொது மாநாட்டின் ஞாயிற்றுக்கிழமை மாலை அமர்வு. டேவிட் ஏ.பெட்னார்அவர்களே தங்கள் சொந்த நியாயாதிபதிகள்நியாயத்தீர்ப்பின் நாள் எப்படி நாம் பயந்து திகில் கொள்ளும்படியாக இல்லாமல் பிரியப்படுகிற மகிமையின் நாளாக இருக்க முடியும் என்று மூப்பர் பெட்னார் விளக்குகிறார். பி. கோரி குவேலியர் நீங்கள் அழைக்கப்படுகிற பெயர்இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன என்பதை மூப்பர் குவேலியர் பகிர்ந்து கொள்கிறார். மாத்யூ எஸ். ஹாலண்ட்உங்கள் சொந்த இரக்கத்தை கைவிடாதீர்கள்யோனாவின் முன்மாதிரியைப் பின்பற்றவும், கிறிஸ்துவின் பிரமிக்க வைக்கும் இரக்கத்தை நம் வாழ்வில் வரவேற்கவும் மூப்பர் ஹாலண்ட் நமக்குக் கற்பிக்கிறார். கார்லோஸ் ஏ. கோடோய் புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும்இரட்சகரின்மேல் கவனம் வைப்பதன்மூலம் சவால்கள் இருந்தபோதிலும் ஆப்பிரிக்காவிலுள்ள பரிசுத்தவான்கள் எப்படி மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் வாழ்கிறார்கள் என்று மூப்பர் கோடோய் கறிபிக்கிறார். டேல் ஜி. ரென்லன்ட் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொள்ளுதல்நாம் கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளும்போது, அவரைப் போல ஆக முடியும் என்று மூப்பர் ரென்லன்ட் கற்பிக்கிறார். ஜான் டி. ஆமோஸ்சுவிசேஷத்தில் மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிமுறைஇயேசு கிறிஸ்துவை நம் வாழ்வில் வரவேற்கச் செய்யும் காரியங்களை அதிகமாகச் செய்வதன் மூலம் நாம் உண்மையான மகிழ்ச்சியை கண்டடையலாம்.என்று மூப்பர் ஆமோஸ் போதிக்கிறார். ஓசானி பரியாஸ்மார்மன் புஸ்தகம்—நமது பயணத்தில் ஒரு அளவிட முடியாத பொக்கிஷம்மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவிடம் நமது மனமாற்றத்தை ஆழப்படுத்தும் மூன்று பரிந்துரைகளை மூப்பர் பரியாஸ் வழங்குகிறார். டாலின் ஹெச். ஓக்ஸ்குடும்பத்தை மையமாகக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் குடும்பம் ஏன் மிகவும் முக்கியமானது என்பதை தலைவர் ஓக்ஸ் விளக்குகிறார், மேலும் நமது குடும்பங்களை பெலப்படுத்த நாம் செய்யக்கூடிய விஷயங்களை விவரிக்கிறார்.