பொது மாநாடு
குடும்ப பிரகடனம்—தேவனிடமிருந்து வந்த வார்த்தைகள்
அக்டோபர் 2025 பொது மாநாடு


13:58

குடும்ப பிரகடனம்—தேவனிடமிருந்து வந்த வார்த்தைகள்

இந்தப் பிரகடனம் தெய்வீகத் தோற்றத்தைக் கொண்டுள்ளது, எனவே நாம் அதை தேவனின் வார்த்தைகளுக்கு தகுதியான பயபக்தியுடன் நடத்த வேண்டும்.

2025 அக்டோபர் மாதம் நடைபெறும் இந்தப் பொது மாநாடு, “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்” என்ற அறிவிப்பின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. தெய்வீக வடிவமைப்பால், இந்த பிரகடனம், அதன் வெளிப்படுத்தும் வார்த்தைகளுடன், “குடும்பத்தை சமூகத்தின் அடிப்படை அங்கமாகப் பராமரிக்கவும் பலப்படுத்தவும்“ உருவாக்கப்பட்டது.

நீங்கள் ஒரு தாய், தந்தை, மகள், மகன், பேரக்குழந்தை, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சகோதரன், சகோதரி அல்லது உறவினராக இருந்தாலும் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மிக முக்கியமாக, நாம் ஒவ்வொருவரும், பிரகடனம் கூறுவது போல், “பரலோக பெற்றோரின் அன்பான ஆவி குமாரன் அல்லது குமாரத்தி … தெய்வீக இயல்பு மற்றும் இலக்குடன்.”

2015 ஆம் ஆண்டு நான் பரிசுத்த அப்போஸ்தல பதவிக்கு அழைக்கப்பட்டபோது, இவ்வாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது, “இந்தப் பிரகடனம் இப்போது உங்களுடையது. உங்கள் பெயர் [தலைப்பில் ‘பன்னிரு அப்போஸ்தலர்களின் ஆலோசனைக் குழு‘ என்ற வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி] இங்கே உள்ளது. அதை உணர்ந்து, அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்வது போல் கற்றுக் கொடுங்கள். ”

எனக்குக் குடும்ப பிரகடனம் மிகவும் பிடிக்கும். தேவனின் நித்திய திட்டத்தில் குடும்பத்தின் பங்கைப் பற்றி ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை மற்றும் இடையில் உள்ள எல்லா இடங்களிலும் நான் சாட்சியமளித்துள்ளேன். இந்தப் பிரகடனம் தெய்வீகத் தோற்றத்தைக் கொண்டுள்ளது, எனவே நாம் அதை தேவனின் வார்த்தைகளுக்கு தகுதியான பயபக்தியுடன் நடத்த வேண்டும்.

சகோதர சகோதரிகளே, இந்த பிரசங்க பீடத்தில் இருந்து முந்தைய பொது மாநாட்டில் நான் சொன்னது போல், “வார்த்தைகள் முக்கியம்“ என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் நம்புவதன் முக்கிய செய்தியாக, பிரகடனத்தைப் பற்றிய சிறிது பின்னணியை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

1994 ஆம் ஆண்டில், பிரகடனம் வழங்கப்படுவதற்கு ஒரு வருடம் முன்பு, பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் குழுமம், குடும்பம், திருமணம் மற்றும் பாலினம் குறித்த தேவனின் நியாயப்பிரமாணங்களிலிருந்து சமூகமும் அரசாங்கங்களும் எவ்வாறு விலகிச் செல்கின்றன என்பதைப் பற்றி விவாதித்தது. “ஆனால் நாங்கள் பார்த்த முடிவு அது அல்ல,” மூப்பர் ரசல் எம். நெல்சன் பின்னர் விளக்கினார். “பாலியல் நடவடிக்கைகளில் எல்லா தரங்களையும், வரையறைகளையும் நீக்க பல்வேறு சமுதாயங்களின் முயற்சிகளை நாங்கள் பார்க்க முடிந்தது. பாலின குழப்பங்களை நாங்கள் பார்த்தோம். அவை அனைத்தும் வருவதை நாங்கள் பார்க்க முடிந்தது.”

குடும்பம் குறித்த சபையின் நிலைப்பாட்டைச் சுருக்கமாகக் கூறும் ஒரு ஆவணத்தை, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தயாரிக்க பன்னிருவர் தீர்மானித்தனர். அந்த ஆண்டில், தேவனால் அழைக்கப்பட்ட இந்த அப்போஸ்தலர்கள், ஞானதிருஷ்டிக்காரர்கள் குடும்பத்தைப் பற்றிய ஒரு பிரகடனத்தைத் தயாரித்தனர். “[அவர்கள்] என்ன சொல்ல வேண்டும், எப்படி [அவர்கள்] அதைச் சொல்ல வேண்டும்” என்று ஜெபத்துடன் கர்த்தரிடம் திரும்பியதை தலைவர் டாலின் எச். ஓக்ஸ் நினைவு கூர்ந்தார். அவர்கள் அதை பிரதான தலைமையிடம் — தலைவர்கள் ஹோவர்ட் டபிள்யூ. ஹண்டர், கார்டன் பி. ஹிங்க்லி, மற்றும் தாமஸ் எஸ். மான்சன்—பரிசீலனைக்காக சமர்ப்பித்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு மார்ச் 1995 இல், தலைவர் ஹண்டர் காலமானார், தலைவர் ஹிங்க்லி சபையின் 15 வது தலைவரானார். பிரகடனம் இப்போது அவர் கைகளில் இருந்தது. இதை சபைக்கு பிரகடனம் செய்ய சரியான நேரம் எதுவாக இருக்கும்? அந்த நேரம் ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்தது.

பொது மாநாட்டிற்கு முந்தைய செப்டம்பர் 23 பொது ஒத்தாசைச் சங்கக் கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, தலைவர் ஹிங்க்லியும் அவரது ஆலோசகர்களும் ஒத்தாசைச் சங்க பொதுத் தலைமையுடன் ஆலோசனையில் சந்தித்தனர். அப்போஸ்தலர்களைப் போலவே, சகோதரிகளும் பெண்கள் மற்றும் குடும்பங்களைப் பற்றிய கவலைகளை நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வரவிருக்கும் குடும்பங்கள் பற்றிய கூட்டத்தின் மீது கவனம் செலுத்தியிருந்தனர்.

கூட்டத்தில் பெண்களிடையே உரையாற்ற தலைவர் ஹிங்க்லி திட்டமிட்டிருந்தார். அவர் தனது கருத்துக்களின் திசையை யோசித்துக் கொண்டிருந்தார். கலந்துரையாடல் முன்னேறும்போது, புதிதாக உருவாக்கப்பட்ட ஆனால் இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்“ என்று அதை அவர் பெயர் குறிப்பிட்டுப் பேசினார். குடும்பம் பற்றிய தீர்க்கமான அறிவிப்பை வெளியிடுவதற்கு இந்தப் பெண்களின் சந்திப்பு சரியான சூழலா?

ஒத்தாசைச் சங்கப் பொதுத் தலைவர் எலைன் ஜாக் பின்னர் விளக்கினார்: “குடும்பத்தின் மீதான பிரகடனம் அந்த நேரத்தில் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. தலைப்பைப் பற்றி எங்களுக்கு சொல்லத் தெரியும், ஆனால் குடும்பம்பற்றி எதுவும்… அது ஒரு நேர்மறை விஷயமாக இருக்கும் என்று உணர்ந்தோம். … வெளிப்படுத்தலைப் பெறுகிற, பன்னிருவர் குழுமத்தின் உறுப்பினர்களை நாம் பெற்றிருக்கிறோம் என்பதால் நான் மிகவும் நேர்மறையாக உணர்ந்தேன்.

அந்த சனிக்கிழமை ஒத்தாசைச் சங்கக் கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த முக்கியமான வார்த்தைகளுடன் தலைவர் ஹிங்க்லி குடும்ப பிரகடனத்தை அறிமுகப் படுத்தினார்: “உண்மையென்று நடத்தப்படும் இவ்வளவு பெரிய போலித்தனங்களுடனும், தரநிலைகள் மற்றும் மதிப்புகள் தொடர்பான இவ்வளவு பெரிய ஏமாற்று வேலைகளுடனும், உலகின் மெதுவான கறையை இவ்வளவு பெரிய வசீகரத்துடனும், கவர்ச்சியுடனும் ஏற்றுக்கொள்ளுதலை இந்த சபையின் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்கள் அதன் வரலாறு முழுவதும் மீண்டும் மீண்டும் கூறப்பட்ட குடும்பத்துடன் தொடர்புடைய தரநிலைகள், கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து நாங்கள் எச்சரிக்கவும் முன்னறிவிக்கவும் உணர்ந்தோம்.“

பின்னர் அவர் பிரகடனத்தை முழுமையாக வாசித்தார். கர்த்தர் சொன்னது போல, “எனது சொந்தக் குரலிலானாலும், எனது ஊழியக்காரர்களின் குரலிலானாலும், அது ஒன்றாயிருக்கும்.”

“குடும்பம் தேவனால் நியமிக்கப்பட்டது“ என்று பிரகடனம் கூறுகிறது. அந்த அறிக்கையின் தெளிவை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தப் பிரகடனம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் நமக்கு முன்பாக இருக்கும் நித்திய எதிர்காலத்தையும் எப்போதும் நினைவில் கொண்டு அநித்தியத்தில் வாழ நமக்கு ஒரு அழைப்பாயிருக்கிறது. தலைவர் நெல்சன் போதித்தார், “நீங்கள் உண்மையில் தேவனின் ஆவிக் குழந்தைகள். … இதில் எந்த தவறும் செய்யாதீர்கள்: உங்கள் ஆற்றல் தெய்வீகமானது. உங்கள் கருத்தான தேடல் மூலம், நீங்கள் யாராக ஆகலாம் எனும் குறிப்பை தேவன் உங்களுக்குத் தருவார்.”

இந்தப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​உலகில் உள்ள பலரின் கருத்துக்களுடன் அது ஒத்துப்போகவில்லை. அப்போதுமில்லை. இப்போதுமில்லை. குடும்பம், திருமணம் மற்றும் பாலினம் குறித்த பிரகடனத்தை பிரச்சினையாக்குபவர்கள் உள்ளனர். சிலர் சபை பிரகடனத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள, திருத்த அல்லது ஒதுக்கி வைக்கக்கூட பரிந்துரைக்கின்றனர்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, குடும்பத்தைப் பற்றிய பிரகடனம், தலைவர் ஹிங்க்லி கூறியது போல், கோட்பாடாகும். கொள்கைகள் படிநிலையிலிருந்து விலகவில்லை, ஆனால் கர்த்தரின் வழிகளுடனும் அவருடைய உடன்படிக்கைப் பாதையுடனும் முழுமையாகப் பொருந்துகின்றன. பிரகடனத்தின் போதனைகள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் அன்றும் இன்றும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன. இது அவருடைய சபை; நாம் கடைபிடிக்கும் சத்தியங்களை அவர் நிறுவியுள்ளார்.

உங்களில் சிலர் இந்த பிரகடனம் பற்றி யோசித்து, “இது எனக்கு பயன்தரவில்லை.“ “இது உணர்ச்சியற்றதாகத் தெரிகிறது.“ “என் குடும்பம் அப்படி இல்லை.“ “எனக்குப் பொருந்தவில்லை,“ என்று கூறலாம்.

கவலைகள் உள்ளவர்களுக்கு, நீங்கள் பரலோக பெற்றோரின் பிள்ளை, உங்கள் பரலோக பிதாவின் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவரை விட வேறு யாரும் உங்களை நன்கு அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது உங்களைப் பற்றி ஆழ்ந்து அக்கறை காட்ட மாட்டார்கள். அவரிடம் திரும்புங்கள்; உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றுங்கள்; அவரையும் அவருடைய வாக்குறுதிகளையும் நம்புங்கள். உங்களை நேசிக்கும் உங்கள் இரட்சகராகிய, இயேசு கிறிஸ்துவில் உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், நம்முடைய தவறுகளின் சுமையையும், நமது மிகவும் மோசமான நாட்களையும் சுமக்கவும் அவர் பூமிக்கு வந்தார். நீங்கள் என்ன எதிர்கொள்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். அவரிடம் திரும்புங்கள்; அவர் உங்களுடன் இருக்க பரிசுத்த ஆவியை அனுப்புவார், உங்களை உயர்த்துவார், உங்களை வழிநடத்துவார் என்று நம்புங்கள். “மனுபுத்திரரின் இருதயங்களில் முழுவதுமாக ஊற்றப்படுகிறதான தேவனின் அன்பு; … ஆகையால் அது எல்லாக் காரியங்களுக்கும் மேலாக வாஞ்சிக்கத்தக்கது … ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியது,” எனும் அவர்களின் அன்பை உணருங்கள்.

கர்த்தரின் அப்போஸ்தலர்களான அனைவரும் உங்களை அன்பாக நேசிக்கின்றனர். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம், உங்களுக்காக கர்த்தருடைய வழிகாட்டுதலை நாடுகிறோம். எங்களுடன் தங்கியிருங்கள். சத்துரு உங்களை அவனுடையதாக மாற்ற முயற்சிக்கிற, சவாலான காலங்களில் நீங்கள் வாழ்கிறீர்கள். இழுக்கப்பட்டு விடாதீர்கள். நீங்கள் இழுக்கப்பட்டிருந்தால், திரும்பி வாருங்கள். உங்களை நேசிக்கும் மற்றவர்களின் கரங்களைப் போலவே எங்கள் கரங்களும் உங்களை நோக்கி நீள்கின்றன.

பிரகடனம் கூறுகிறது, “அன்பிலும் நீதியிலும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்க பெற்றோருக்கு ஒரு பரிசுத்த கடமையிருக்கிறது”. இந்த சத்தியத்திற்கு மார்மன் புஸ்தகம் இரண்டாவது சாட்சியை வழங்குகிறது. முதல் அதிகாரத்தின் முதல் வசனத்தில், நாம் வாசிக்கிறோம், “நேபியாகிய நான் நற்கீர்த்தி பெற்ற பெற்றோருக்குப் பிறந்தவனாய் இருந்தபடியால்.” நம்மில் எத்தனை பேர் மார்மன் புஸ்தகத்தைத் தொடங்கி—மீண்டும் மீண்டும் தொடங்கி— அந்தச் செயலில் அந்த வார்த்தைகளை மனப்பாடம் செய்ய ஒப்புக்கொடுத்திருக்கிறோம்? அதை மனதார ஒப்புக்கொடுங்கள்.

பிரகடனத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளில் ஒன்று இது: “குடும்பம் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மேல் அமைக்கப்படும்போது, குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியை அநேகமாக அடையக் கூடும்.”

மகிழ்ச்சியாய் இருப்பதை யார் விரும்பவில்லை?

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் யாவை? மீண்டும் பிரகடனத்திலே: “விசுவாசம், ஜெபம், மனந்திரும்புதல், மன்னித்தல், மரியாதை, அன்பு, மனதுருக்கம், வேலை மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்.“

இந்த முக்கிய கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் யாருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்காது? நம்மில் யாரும் சரியாகச் செய்யப் போவதில்லை; ஆனால் தலைவர் ஹிங்க்லியின் ஞானமான வார்த்தைகளைப் பின்பற்றலாம்: “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.“

“தந்தையர் அன்பிலும் நீதியிலும் … தலைமை தாங்க வேண்டும்,“ என்றும், “தாய்மார்கள் அவர்களது பிள்ளைகளைப் போஷித்தலில் பிரதான பொறுப்புடையவர்கள்“ என்றும் பிரகடனத்தில் நாம் வாசிக்கிறோம். தலைமை தாங்குதல் என்பது ஆதிக்கம் செலுத்துதல் என்று அர்த்தமல்ல, போஷிப்பது என்பது இரண்டாம் நிலைப் பாத்திரத்தைக் குறிப்பதில்லை. தேவன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு ஆனால் சமமான மற்றும் அத்தியாவசியமான பாத்திரங்களை ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கச் செய்துள்ளார்.

நான் ஒரு தனிப்பட்ட கதையைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு நாள் நான் அவளிடம் கலந்தாலோசிக்காமல் ஒரு முக்கியமான முடிவை எடுக்க முடிவு செய்த பிறகு, நானும் என் மனைவியும் சமமான கூட்டாளிகளாக இருப்பதில் சிறப்பாக செயல்படக் கற்றுக்கொண்டோம். என் செயல் அவளை ஆச்சரியப்படுத்தியது, அவளை வியக்கவைத்தது, அவளை மிகவும் கடினமான சூழ்நிலையில் ஆழ்த்தியது. பின்னர், அவள் என் தோள்களில் கையை வைத்து, “ரான், தயவுசெய்து, இனிமேல் எனக்கு அப்படிச் செய்யாதீர்கள்“ என்று உறுதியாகக் கூறினாள். அன்றிலிருந்து நாங்கள் கிட்டத்தட்ட உடன்பாட்டுடன் இருக்கிறோம்.

பிரகடனத்தில் நாம் காண்கிறோம்: “தாய் தந்தையர் ஒருவருக்கொருவர் சமபங்குடையவர்களாக உதவுவதற்கு கடமைப்பட்டவர்கள்.“

சமம் என்பது முக்கியமான ஒரு சொல். பல ஆண்டுகளாக சகோதரி ராஸ்பான்டும் நானும் பிரகடனம் “நமது பரிசுத்த பொறுப்புகள்“ என்று விவரிக்கும் பணியில் ஒன்றாக இணைந்து பணியாற்றி வந்து, நாங்கள் சமமாக இணைக்கப்பட்ட திருமணத்தை வடிவமைத்துள்ளோம். எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இப்போது திருமணம் செய்து கொண்டனர், சகோதரி ராஸ்பான்டும் நானும் அவர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கும் சமமான கூட்டாளிகளாக இருப்பது எப்படி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகின்றோம்.

நாம் தேவனின் மகிமைக்காக நம் கண்களை ஒருமுகப்படுத்தி வாழும்போது, ​​நாம் ஒருவரையொருவர் மதித்து, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறோம். அந்த தெய்வீக நீதி மாதிரிகள் நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நமது குடும்பங்களிலும், சமூகத்திலும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்.

நம்மை அவரிடம் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும், அன்பு, பலம், நோக்கம் மற்றும் நித்திய புரிதலால் நாம் கற்றுக்கொள்ளவும் நிரப்பவும் உதவுவதற்காக, பரலோகத்திலுள்ள நமது பிதா குடும்பத்தைப் பற்றிய பிரகடனத்தை வழங்கியுள்ளார். அவருக்கும் அவருடைய அன்பு குமாரனுக்கும் அருகில் வாழ என் முழு மனதுடன், நான் உங்களிடம் மன்றாடுகின்றேன். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​ஆவியானவர் உங்களை ஊக்குவித்து வழிநடத்துவார், மேலும் “எல்லாப் புத்திக்கும் மேலான” அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட அமைதியை உங்கள் இருதயத்தில் உணர உதவுவார் என்று நான் உறுதியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” Gospel Library.

  2. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம்.

  3. Ronald A. Rasband, “Words Matter,” Liahona, May 2024, 70–76.பார்க்கவும்.

  4. See Sheri. Dew, Insights from a Prophet’s Life: Russell M. Nelson (2019), 208.

  5. இது சபையின் முதல் அதிகாரப்பூர்வ பிரகடனம் அல்ல. 1995 ஆம் ஆண்டு “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனத்துக்கு“ முன்பு 1841, 1845, 1865 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் சபை வரலாற்றில் பிரகடனங்கள் இருந்தன. அவர்கள் உருவாக்கிய வார்த்தைகளின் நினைவிடம் இப்படித் தலைப்பிடப்பட்டது, “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணத்தின் மறுஸ்தாபிதம்: உலகிற்கு இருநூற்றாண்டு பிரகடனம்” ஆகும். (See Emma Benson, “What We Learn from the Proclamations of the Restoration” [digital-only article], Liahona, Dec. 2021, Gospel Library.)

  6. Dallin H. Oaks, “The Plan and the Proclamation,” Liahona, Nov. 2017, 30.

  7. See Dew, Insights from a Prophet’s Life, 209–10.

  8. See Barbara Morgan Gardner and Olivia Osguthorpe, “Delivering the Family Proclamation: Insights from Former Relief Society President Elaine L. Jack,” Religious Educator, vol. 24, no. 2 (2023), 164.

  9. See Gardner and Osguthorpe, “Delivering the Family Proclamation,” 162–65; see also Elaine L. Jack, “Relief Society: A Balm in Gilead,” Ensign, Nov. 1995, 92. தனது கருத்துக்களில், தலைவர் ஜாக் கற்பித்தார்: “குடும்பங்கள் நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிகளையும், சில சமயங்களில் மிகவும் மன வேதனைகளையும் தருகின்றன. குடும்பங்கள் ஒரு கற்றல் சூழலை வழங்குகின்றன, நாம் ஒருபோதும் பட்டம் பெறாத ஆனால் எப்போதும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பள்ளி அறை. நமது குடும்பங்களில், தயாளம், பொறுமை, உத்தமத்தைப் பகிர்ந்து கொள்வது, தயவு, தாராள மனப்பான்மை, சுயக்கட்டுப்பாடு மற்றும் சேவை ஆகிய கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வரும் ஆவிக்குரிய சமாதானத்தைப் பாராட்டக் கற்றுக்கொள்கிறோம். இவை குடும்ப மதிப்புகளை விட அதிகம், சகோதரிகளே; இவை கர்த்தருடைய வாழ்க்கை வழி.”

    அந்த நேரத்தில் ஆசாரியத்துவ நிர்வாகக் குழுவின் தலைவரான மூப்பர் டாலின் எச். ஓக்ஸும் கூட்டத்தில் கலந்து கொண்டார் (see Gardner and Osguthorpe, “Delivering the Family Proclamation,” 167).

  10. கார்ட்னர் மற்றும் ஆஸ்குதோர்ப், “குடும்ப பிரகடனத்தை வழங்குதல்,“ 165 ஐப் பார்க்கவும்.

  11. “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்“ ஏப்ரல் 6, 1980 க்குப் பின்னர் வரும் முதல் அதிகாரப்பூர்வ சபை பிரகடனமாக இருக்கும். அந்த நேரம் வரை, சபை நான்கு அதிகாரப்பூர்வ பிரகடனங்களையே வெளியிட்டிருந்தது. அவை கொள்கைகள், நம்பிக்கை, வரலாறு, எச்சரிக்கைகள், அழைப்புகள், மற்றும் சபையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் குறித்த அறிக்கைகளை எடுத்துரைத்தன.(see Encyclopedia of Mormonism [1992], “Proclamations of the First Presidency and the Quorum of the Twelve Apostles,” 3:1151–57).

  12. எலைன் எல். ஜாக், கார்ட்னர் மற்றும் ஆஸ்குதோர்ப்பில், “குடும்ப பிரகடனத்தை வழங்குதல்,“ 166.

  13. Gordon B. Hinckley, “Stand Strong Against the Wiles of the World,” Ensign, Nov. 1995, 100. அக்டோபர் 1976 பொது மாநாட்டில், தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் ஒரு அமெரிக்க எழுத்தாளரை மேற்கோள் காட்டினார், அவர் “வரலாறு முழுவதும், நாடுகள் பலவிதமான நோய்கள், படையெடுப்புகள், பஞ்சங்கள், பூகம்பங்கள், தொற்றுநோய்கள், மந்தநிலைகள் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க முடிந்தது, ஆனால் குடும்பத்தின் சிதைவிலிருந்து அவர்களால் ஒருபோதும் தப்பிக்க முடியவில்லை“ என்று குறிப்பிட்டார்.(in “A Report and a Challenge,“ Ensign, Nov. 1976, 7–8).

  14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:38

  15. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” Gospel Library.

  16. Russell M. Nelson, “Choices for Eternity” (worldwide devotional for young adults, May 15, 2022), Gospel Library.

  17. See Gordon B. Hinckley, “Stand Strong Against the Wiles of the World,” 100.

  18. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” ,” சுவிசேஷ நூலகம் பார்க்கவும்

  19. 1 நேபி 11:22–23.

  20. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம்.

  21. 1 நேபி 1:1.

  22. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம்.

  23. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம்.

  24. Gordon B. Hinckley, “Women of the Church,” Ensign, Nov. 1996, 69.

  25. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம். “வீட்டில் கணவன் அல்லது தந்தை இல்லாதபோது, தாய் குடும்பத்தின் தலைமையினை வகிக்கிறார்.” (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 2.1.3).

  26. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம்.

  27. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம்.

  28. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” சுவிசேஷ நூலகம்.

  29. அக்டோபர் 1991 பொது மாநாட்டில், தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி, ஆதாமும் ஏவாளும் “தோட்டத்தில் அருகருகே நின்றனர்” என்று கற்பித்தார். அவர்கள் ஒன்றாக தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் அவர்கள் தங்கள் நெற்றியின் வியர்வையால் தங்கள் உணவைப் பெறுவதில் அருகருகே உழைத்தனர்.(“Our Solemn Responsibilities,” Ensign, Nov. 1991, 51).

  30. பிலிப்பியர் 4:7.