பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
அக்டோபர் 2025 பொது மாநாடு


3:26

சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, இப்போது, ஆதரவு வாக்குக்காக பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் நான் முன்மொழிவேன்.

நீங்கள் வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் ஆதரித்தலை தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் தலைவராக டாலின் ஹாரிஸ் ஓக்ஸை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. டாலின் எச். ஓக்ஸ், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், ஹென்றி பி. ஐரிங், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், உலிசஸ் சோயர்ஸ், மற்றும் பேட்ரிக் கியரோன்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அவ்வாறே தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

இரண்டு புதிய பிரதேச எழுபதின்மர் பொது மாநாட்டு தலைமைத்துவ கூட்டங்களில் ஆதரிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், மேலும் சபை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த சகோதரர்களை, அவர்களின் புதிய பணிகளில் அவர்களை ஆதரிக்க உங்களை அழைக்கிறோம்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

சகோதர சகோதரிகளே, சபைத் தலைமை சார்பாக உங்கள் ஆதரிக்கும் வாக்குக்காக நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

பானு கே. ஹிரானண்டானி மற்றும் பெர்னாண்டோ விவாஸ்.