“கானாவில் ஒரு ‘முடக்கம்’,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“கானாவில் ஒரு ‘முடக்கம்’,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
ஜூன் 1989–நவம்பர் 1990
கானாவில் ஒரு “முடக்கம்”
பரிசுத்தவான்கள் ஒன்றுகூட முடியாதபோது விசுவாசத்துடன் இருத்தல்
ஆலிஸ் ஜான்சன் தனது சொந்த நாடான கானாவில் ஊழியக்காரியாகப் பணியாற்றினாள். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தனது சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்வதையும், சபை வளர உதவுவதையும் அவள் விரும்பினாள்.
Saints, 4:416–17
ஒரு நாள், ஆலிஸுக்கு ஒரு வருத்தமளிக்கும் செய்தி கிடைத்தது. கானா அரசாங்கம் இனி சபைக் கூட்டங்கள் நடத்த முடியாது என்று கூறியிருந்தது. ஊழியக்காரர்களால் இதற்குமேல் கற்பிக்க முடியவில்லை.
Saints, 4:417
காவல்துறை அதிகாரிகள் ஊழியக்காரர்களை தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை விட்டு வெளியேறச் செய்து, அவர்களின் சைக்கிள்களை எடுத்துச் சென்றனர். சபையின் சில உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். படைவீரர்கள் சபைக் கட்டிடங்களைப் பூட்டிவிட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. மக்கள் இதை “முடக்கம்” என்று அழைத்தனர்.
Saints, 4:417–18
ஊழியக்காரர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆலிஸ் வேறொரு ஊரில் ஒரு தோழியுடன் வசிக்கச் சென்றாள். தன் ஊழியத்தை ஒருபோதும் முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அவள் கவலைப்பட்டாள்.
Saints, 4:418
கானாவில் உள்ள பரிசுத்தவான்கள் குழப்பமடைந்து, சோகமாகவும், பயத்துடனும்ம் இருந்தனர். அவர்கள் தாங்கள் என்ன தவறு செய்தோம் என்று யோசித்தார்கள். அவர்கள் மீண்டும் எப்போதாவது சபைக்குச் செல்வார்களா?
Saints, 4:418
தங்கள் தொகுதியுடன் கூடிவர முடியாவிட்டாலும், பரிசுத்தவான்கள் இன்னும் கர்த்தரை நேசித்தார்கள், அவரை ஆராதிக்க விரும்பினார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் திருவிருந்துக் கூட்டங்களை நடத்தினர். ஆசாரியத்துவம் பெற்ற குடும்ப உறுப்பினர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து, குடும்பத்தின் மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:32; Saints, 4:419
பல மாதங்களாக, முடக்கம் தொடர்ந்தது. பரிசுத்தவான்கள் தங்கள் வீடுகளில் பாடல்களைப் பாடி, ஒருவருக்கொருவர் சுவிசேஷம் கற்பித்தனர். அவர்கள் தங்கள் விசுவாசத்தை பலமாக வைத்திருக்க ஒருவரையொருவர் சந்தித்தனர். அவர்கள் மீண்டும் சபைக்குச் செல்லும்போது செலுத்த தங்கள் தசமபாகத்தை ஒதுக்கி வைத்தனர். முடக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் ஜெபித்து உபவாசம் இருந்தனர்.
Saints, 4:436–37
இறுதியாக, 18 மாதங்களுக்குப் பிறகு, சபை மீண்டும் கூட்டங்களை நடத்தலாம் என்று அரசாங்கம் முடிவு செய்தது. ஒரு புதிய ஊழியத் தலைவரிடம், இப்போது கல்லூரியில் படிக்கும் மாணவியாக இருந்த ஆலிஸிடம் பேசும்படி சொல்லப்பட்டது. “படிப்பு முடிந்ததும் திரும்பி வந்து ஒரு ஊழியம் செய்ய விரும்புகிறாயா?” என்று அவர் கேட்டார். “இல்லை“ என்றாள் அவள். “நான் இப்போதே சேவை செய்ய விரும்புகிறேன்!”
Saints, 4:437–39
ஆலிஸும் மற்ற பரிசுத்தவான்களும் மீண்டும் சபைக்குச் செல்ல முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்! முடக்கத்திற்குப் பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமை, ஏராளமான மக்கள் தங்கள் சாட்சியங்களைச் சொல்ல விரும்பியதால், திருவிருந்துக் கூட்டம் இரண்டு மணி நேரம் நீடித்தது. கர்த்தர் தங்களை எப்படி ஆசீர்வதித்தார், தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த உதவினார் என்பதை அவர்கள் ஒருவருக்கொருவர் சொன்னார்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:75; Saints, 4:438