“பார்லியும் தாங்க்புல் பிராட்டும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“பார்லியும் தாங்க்புல் பிராட்டும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
ஆகஸ்ட்-செப்டம்பர் 1830
பார்லியும் தாங்க்புல் பிராட்டும்
ஆவியானவரைப் பின்பற்றும் விசுவாசம்
பார்லியும் தாங்க்புல் பிராட்டும்,” ஒகையோவில் விவசாயிகளாயிருந்தார்கள். ஒரு நாள், வேதாகமத்தைப் பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுக்க தனது வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லுமாறு ஆவியானவர் தன்னிடம் சொல்வதை பார்லி உணர்ந்தார்.
Saints, 1:92
பார்லியும் தாங்க்புலும் அவர்கள் பண்ணையை விற்றுவிட்டார்கள். அவர்கள் எங்கு செல்வார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் தேவனுக்கு ஊழியம் செய்வதனால் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று அவர்கள் நம்பினார்கள்.
Saints, 1:92
பார்லியும் தாங்க்புலும் கொஞ்சம் துணிகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு படகில் ஏறினார்கள். அவர்கள் நியூயார்க் வழியாகப் பயணித்தபோது, ஆவியானவர் பார்லியை படகில் இருந்து இறங்கச் சொன்னார். பார்லி தாங்க்புலை அவர் இல்லாமல் போகச் சொன்னார். விரைவில் அவரிடம் வருவதாக உறுதியளித்தார். தேவன் அவரை வைத்து செய்ய விரும்பிய ஒன்று நியூயார்க்கில் இருப்பதாக அவர் உணர்ந்தார்.
Saints, 1:92
பார்லி வெகுதூரம் நடந்தார். கடைசியாக அவர் ஒரு போதகரின் வீட்டை வந்தடைந்தார். யாரோ கொடுத்த விசித்திரமான ஒரு புஸ்தகத்தைக் குறித்து போதகர் பார்லியிடம் கூறினார். இது தங்கத் தகடுகளிலிருந்து வந்தது மற்றும் நீண்ட காலத்திற்கு முன்பு எழுதப்பட்டது. இது மார்மன் புஸ்தகம் என்று அழைக்கப்பட்டது. நியூயார்க்கில் உள்ள ஒரு இளைஞன் தேவனின் வல்லமையுடன் அதை மொழிபெயர்த்திருந்தான்.
Saints, 1:92
பார்லி மிகவும் ஆர்வமாக இருந்தார். போதகர் பார்லிக்கு அந்த புஸ்தகத்தைக் காட்டினார். உற்சாகமாக, பார்லி அதைத் திறந்து படிக்க ஆரம்பித்தார். பல மணிநேரம் கடந்தது, ஆனால் அவரால் படிப்பதை நிறுத்த முடியவில்லை, சாப்பிடவோ தூங்கவோ கூட முடியவில்லை. அது உண்மையென்று கர்த்தருடைய ஆவி அவருக்குச் சொன்னது.
Saints, 1:92–93
மார்மன் புஸ்தகத்தை பார்லி மிகவும் நேசித்தார், அதை மொழிபெயர்த்தவரைக் கண்டுபிடிக்க விரும்பினார். அவர் ஸ்மித் குடும்பப் பண்ணைக்கு நடந்து சென்றார், அங்கு அவர் ஜோசப்பின் சகோதரரான ஹைரமைச் சந்தித்தார். அவர்கள் இரவு முழுவதும் பேசினார்கள். மார்மன் புஸ்தகம் உண்மை என்று ஹைரம் பார்லியிடம் கூறினார். புஸ்தகத்தின் தன்னுடைய பிரதியை பார்லிக்காக அவர் கொடுத்தார்.
Saints, 1:93
அவர் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, இயேசு கிறிஸ்து நீண்ட காலத்திற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள மக்களை சந்தித்தார் என்பதை பார்லி அறிந்தார். உலகின் அனைத்து செல்வங்களையும் விட மார்மன் புஸ்தகம் மதிப்புமிக்கது என்பதை பார்லியால் உணர முடிந்தது. தான் கற்றுக்கொண்டதை தாங்க்புலிடம் திரும்பிச்சென்று பகிர்ந்துகொள்ள மிகவும் ஆர்வமாயிருந்தார்.
Saints, 1:93; 3 நேபி 11:1–12
பார்லி தாங்க்புல் மற்றும் அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் மார்மன் புஸ்தகத்தைப் பற்றி கூறினார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி அது என்ன கற்பிக்கிறது என்பதை அவர் அவர்களிடம் சொன்னார். பார்லி ஆவியானவரைப் பின்பற்றி தேவன் விரும்பிய பணியைக் கண்டுகொண்டதில் தாங்க்புல் மகிழ்ச்சியடைந்தாள். பார்லியைப் போலவே, மார்மன் புஸ்தகம் உண்மை என்பதை தாங்க்புல் தனக்குத்தானே கற்று அறிந்துகொண்டாள்.
Saints, 1:98–99