வேதக் கதைகள்
ஜோசப்பும் ஆலிவரும் ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பெறுதல்


“ஜோசப்பும் ஆலிவரும் ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பெறுதல் ,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“ஜோசப்பும் ஆலிவரும் ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பெறுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஏப்ரல் 1836

2:33

ஜோசப்பும் ஆலிவரும் ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பெறுதல்

இயேசு கிறிஸ்துவும் தூதர்களும் கர்த்லாந்து ஆலயத்துக்கு வருதல்

கர்த்லாந்து ஆலயத்தில் பரிசுத்தவான்களுக்கு திருவிருந்தை ஜோசப் ஸ்மித் வழங்குதல்.

கர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, இரட்சகரை ஆராதிக்க ஆயிரம் பரிசுத்தவான்கள் ஆலயத்தில் கூடினர். அது ஈஸ்டர் ஞாயிறாயிருந்தது. ஜோசப் ஸ்மித், ஆலிவர் கௌட்ரி மற்றும் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் பரிசுத்தவான்களுக்கு திருவிருந்து கொடுத்தார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110,, பாகத் தலைப்பு; Saints, 1:239

ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் கர்த்லாந்து ஆலயத்தில் ஜெபம் செய்தல்

திருவிருந்துக்குப் பிறகு, ஜோசப்பும் ஆலிவரும் ஆலயத்தில் திரைக்குப் பின்னால், ஜெபிப்பதற்காக ஒரு அமைதியான இடத்தைக் கண்டுபிடித்தனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110,, பாகத் தலைப்பு; Saints, 1:239

ஜோசப் மற்றும் ஆலிவருக்கு இயேசு கிறிஸ்து தோன்றுகிறார்.

அவர்கள் ஜெபித்து முடித்ததும், மேலே பார்த்தார்கள். இயேசு கிறிஸ்து அவர்கள் முன் நின்று கொண்டிருந்தார்! ஆலயத்தைக் கட்டுவதற்கு பரிசுத்தவான்கள் கடுமையாக உழைத்திருப்பதை அவர் அறிந்திருந்தார். “நான் இந்த வீட்டை ஏற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார். ஆலயத்தின் ஆசீர்வாதங்கள் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்று இயேசு ஜோசப் மற்றும் ஆலிவரிடம் கூறினார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:1–10

ஜோசப் மற்றும் ஆலிவருக்கு மோசே தோன்றுதல்.

இயேசு சென்ற பிறகு, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மோசே ஜோசப் மற்றும் ஆலிவருக்குத் தோன்றினான். இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதற்கான ஆசாரியத்துவ திறவுகோல்களை அவன் அவர்களுக்குக் கொடுத்தான். இதன் பொருள் அவர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பணியை வழிநடத்த முடியும் என்பதாகும். இரட்சகரின் சபைக்குள் மக்களைக் கொண்டுவர அவர்கள் உலகம் முழுவதும் ஊழியக்காரர்களை அனுப்ப முடியும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:11

ஜோசப் மற்றும் ஆலிவருக்கு எலியாஸ் தோன்றுதல்.

அடுத்து, தீர்க்கதரிசி எலியாஸ் தோன்றினான். ஆபிரகாமிய உடன்படிக்கையை மறுஸ்தாபிதம் செய்வதற்கான திறவுகோல்களை அவன் ஜோசப்புக்கும் ஆலிவருக்கும் கொடுத்தான். இதன் பொருள், ஆபிரகாம் பெற்ற அதே உடன்படிக்கையை பரிசுத்தவான்கள் கர்த்தரிடமிருந்து பெற முடியும் என்பதாகும். அவர்கள் பல ஆண்டுகளாக எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு சுவிசேஷத்தையும் தேவனின் ஆசீர்வாதங்களையும் கொண்டு செல்லும் வல்லமையைப் பெறுவார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:12

ஜோசப் மற்றும் ஆலிவருக்கு எலியா தோன்றுதல்.

இறுதியாக, தீர்க்கதரிசி எலியா தோன்றினான். நித்தியத்திற்கும் குடும்பங்களை முத்திரிக்க அல்லது ஒன்றிணைக்க அவன் ஜோசப்புக்கும் ஆலிவருக்கும் ஆசாரியத்துவ திறவுகோல்களைக் கொடுத்தான். ஆலயங்களில் பரிசுத்தவான்கள் செய்த பணிகள் பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். இப்போது சபை இரட்சகரின் பணியைச் செய்யவும், அவர் மீண்டும் பூமிக்கு வருவதற்குத் தயாராகவும் வல்லமை பெற்றது.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:13–16