வேதக் கதைகள்
பலதார திருமணம்


“பலதார திருமணம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“பலதார திருமணம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

1831–1890

1:50

பலதார திருமணம்

சிறிது காலத்திற்கான ஒரு கட்டளை

ஜோசப் ஸ்மித் வேதத்தைப் படித்து பலதார திருமணத்தைப் பற்றி சிந்திக்கிறார்.

தீர்க்கதரிசி ஜோசப் வேதாகமத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, ​​ஆபிரகாம், மோசே போன்ற தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டதைப் பற்றிப் படித்தார். ஜோசப்புக்கு நிறைய கேள்விகள் இருந்தன. எனவே அவர் ஜெபித்து கர்த்தரிடம் கேட்க முடிவு செய்தார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:1; Saints, 1:121, 503

தேவன் கட்டளையிட்டால் மட்டுமே மக்கள் பலதார திருமணத்தில் இருக்க வேண்டும் என்பதை ஜோசப் கற்றுக்கொள்கிறார்.

பொதுவாக ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னார். ஆனால் சில சமயங்களில் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை மணந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். இது பலதார திருமணம் என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் கட்டளையிட்டால் மட்டுமே தம்முடைய மக்கள் பலதார திருமணங்களில் இருக்க வேண்டும் என்று ஜோசப்பிடம் கூறினார்.

யாக்கோபு 2:27–30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:34–39; Saints, 1:121, 290–91, 489–90, 503

கட்டளையைப் பற்றி ஜோசப் ஜெபித்தல்.

பல வருடங்களுக்குப் பிறகு, கர்த்தர் ஜோசப்பையும் வேறு சில பரிசுத்தவான்களையும் பலதார திருமணங்களில் இருக்கச் சொன்னார். இந்தக் கட்டளையின்படி வாழ்வது எளிதல்ல.

Saints, 1:290–91, 444–46

சபையின் ஒரு உறுப்பினர் பலதார திருமணத்தில் இருப்பதால் ஒரு நீதிபதி முன் நிற்கிறார்.

அரசாங்கம் பலதார திருமணங்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றியது. சபைத் தலைவர்கள் உட்பட சில பரிசுத்தவான்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Saints, 2:501–4

சபை உறுப்பினர்கள் இனி பலதார திருமணத்தை கடைப்பிடிக்கக்கூடாது என்ற கட்டளையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

1890 ஆம் ஆண்டில், சபையின் தலைவரான வில்போர்ட் உட்ரப்பிடம், ஆண்கள் இனி ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கக் கூடாது என்று கர்த்தர் கூறினார். சபைத் தலைவர்கள் இந்தக் கட்டளையைப் பரிசுத்தவான்களுடன் பகிர்ந்து கொண்டனர். இது இன்றும் கர்த்தருடைய கட்டளையாக இருக்கிறது—ஒரு ஆண் ஒரே ஒரு மனைவியை மட்டுமே மணக்க வேண்டும்.

அதிகாரபூர்வ பிரகடனம் 1; Saints, 2:598, 607–9