“லிபர்ட்டி சிறைச்சாலை,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“லிபர்ட்டி சிறைச்சாலை,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
அக்டோபர் 1838–மார்ச் 1839
லிபர்ட்டி சிறைச்சாலை
கடினமான காலங்களில் கர்த்தரைக் கண்டறிதல்
மிசௌரியில் வாழ்ந்த பலருக்கு பரிசுத்தவான்களைப் பிடிக்கவில்லை. அவர்களை வெளியேறச் செய்ய ஆளுநர் படைவீரர்களை அனுப்பினார். படைவீரர்கள் பரிசுத்தவான்களை அவர்களது வீடுகளிலிருந்து துரத்தினர், அவர்களது வீடுகளிலிருந்து பொருட்களைத் திருடி, அவர்களில் பலரை காயப்படுத்தினர்.
Saints, 1:355–56, 362, 364
படைவீரர்கள் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தையும் சபைத் தலைவர்கள் பிறரையும் கைது செய்தனர்.
Saints, 1:357–58
ஜோசப் தன் குடும்பத்துடன் சிறிது நேரம் தனியாக இருக்க முடியுமா என்று கேட்டார். படைவீரர்கள் முடியாது என்றார்கள். அவர்கள் ஜோசப்பையும் மற்ற கைதிகளையும் அழைத்துச் சென்றனர்.
Saints, 1:366
ஒரு இரவு, ஜோசப்பும் மற்ற கைதிகளும் தங்கள் காவலர்கள் பரிசுத்தவான்களுக்குச் செய்த கெட்ட காரியங்களைப் பற்றி சிரித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஜோசப்பால் இனியும் அதைக் கேட்டுத் தாங்க முடியவில்லை. அவர் எழுந்து நின்று, “அமைதி!” என்று கத்தினார். அவர் தேவனின் வல்லமையால் பேசினார். காவலர்கள் பயந்தார்கள். அவர்கள் வருத்தப்படுவதாகக் கூறிவிட்டுப் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
Saints, 1:367–68
பின்னர், ஜோசப்பும் அவரது நண்பர்களும் லிபர்ட்டி என்ற ஊரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலை மிகவும் குளிராகவும், சிறியதாகவும், இருட்டாகவும் இருந்தது. அவர்களிடம் தூங்குவதற்கு கொஞ்சம் அழுக்கு வைக்கோல் மட்டுமே இருந்தது. கொஞ்சம் உணவுதான் இருந்தது, அது அவர்களை நோய்வாய்ப்படுத்தியது.
Saints, 1:369–70, 374, 384–85
ஜோசப் பரிசுத்தவான்களைப் பற்றி நிறைய யோசித்தார். அவர் அவர்களை நேசித்தார். அவர் அவர்களைப் பற்றி கவலைப்பட்டார். ஆனால் அவரால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.
Saints, 1:385–86
ஜோசப் நிறைய ஜெபம் செய்தார். அவர் தேவனிடம் அவர் எங்கே இருக்கிறார், ஏன் பரிசுத்தவான்களுக்கு உதவவில்லை என்று கேட்டார். தேவன் அவரையும் சபையையும் மறந்துவிட்டாரா?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:1–6
தேவன் ஜோசப்பின் ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர், “என் மகனே, உன் ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாகட்டும்” என்றார். ஜோசப்பின் சவால்கள் என்றென்றும் நிலைத்திருக்காது என்றும், அவை அவருடைய நன்மைக்காகவே இருக்கும் என்றும் அவர் அவரிடம் கூறினார். இயேசு கிறிஸ்து இன்னும் கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததை தேவன் ஜோசப்புக்கு நினைவூட்டினார். அவர் ஜோசப்புடன் “என்றென்றும்” இருப்பார் என்று வாக்குறுதி அளித்தார்.